வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பதிவுகள்  
1
 
1 ஓர் பார்வை
1
1 ஆவணப்படங்கள்
1
1 குறும்படங்கள்
1
1 பட்டியல் - 1
1
1 பட்டியல் - 2
1
1 பட்டியல் - 3
1
1 பட்டியல் - 4
1
1 நெய்வேலி போட்டி - 1
1
1 நெய்வேலி போட்டி - 2
1
1 சேலம் பட்டறை
1
1 பட்டியல்
1
1  
1
1  
 
  ஆவணப்படங்கள்
   
 
ஒரு நிமிடம் முதல் முப்பது நிமிடத்திற்குள் எடுக்கப்படும் கதை தழுவிய படத்தை குறும்படம் என்கிறோம். இதற்கு மேல் கால அளவு உள்ள குறும்படங்களை என்று அமெரிக்கா வில் அழைக்கின்றார்கள் ஆவணப்படங்களுக்கு கால அளவு கிடையாது. குறும்படம் பற்றி எந்தத் தெளிவும் இல்லாமல் படம் எடுப்பவர்கள் தொலைக்காட்சியின் ஒரு 'எபிசோடே' குறும்படம் என்கிற ரீதியில் படம் எடுக்கின்றனர். திரைப்பட தயாரிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தயாரிப்பாக குறும்படம் இருக்க வேண்டும் என்பதே வெளிநாட்டு குறும்படங்கள் காட்டும் இலக்கணமாக இருக்கிறது. பாட்டு,   நடனம்,   அதீத   நடிப்பு,

நகைச்சுவைக்காட்சிகள், வளவள என்று இருக்கும் உரையாடல் போன்றவை முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும். காட்சிக்கு ஏற்ற இயல்பான உடை, குரல் தேர்வு போன்றவை சினிமா, தொலைக்காட்சி பாணியிலிருந்து தவிர்க்கப்பட்டு, யதார்த்தமாக இருக்க வேண்டும். உரையாடல் பெருமளவு தவிர்க்கப்பட்டு காட்சி ரூபமாக நகர்வதுதான் சிறப்பாக இருக்கும்.

இன்று 40 தமிழக கல்லூரிகளில் திரைப்படம் பற்றிய படிப்பு இருக்கிறது. இவை ஊடகத்துறை (Communication Dept); பார்வை ஊடகத்துறை (Visual Communication); மின்னணு ஊடகத்துறை (Electronic Media) போன்ற தலைப்புகளில் இடம் பிடித்துள்ளது. இக்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் தேர்வுக்காக ஒரு படம் எடுக்க வேண்டும். இன்று ஓர் ஆண்டிற்கு தமிழக மாணவர்கள் எடுக்கும் படங்கள் 400!

சுதந்திரமான முறையில் நிறுவனங்களைச் சாராமல் சராசரியாக நூறு படங்களை இன்று தனிநபர்கள் எடுத்து வெளியிடுகின்றனர். 90% படங்களுக்கு தயாரிப்பாளர் / இயக்குனர் ஒருவராக இருக்கும் நிலை காணப்படுகின்றது. குறும்படம் / ஆவணப்படங்களை இயக்குபவர்கள் 80% இளைஞர்கள் / மாணவர்களாக இருக்கின்றனர். நடுத்தர மற்றும் வயதானவர்கள் 20% இருக்கின்றனர்.

இனி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த குறும்படங்கள் / ஆவணப்படங்களில் சிறந்தவற்றை பார்ப்போம்:

குறும்படங்களுடன் ஆவணப்படங்களை ஒப்பிட்டால் குறைந்தளவே எடுக்கப்பட்டு வருவது தெரிகிறது. இதன் விகிதாச்சாரம் ௧0: ௧ ஆகவே இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் எடுக்கும் படங்கள் அழகான முறையில் பொருட்செலவில், தொழில்நுட்பத்துடன் காணப்படுகிறது. வெளி நபர்கள் எடுக்கும் படங்கள் சற்று தரமட்ட்றுக் காணப்பட்டாலும் சிலப் படங்கள் அதற்க்கு விதிவிலக்காக இருக்க்கிறது.

முதலில் ஆவணப்படங்களைப் பார்ப்போம்:

சென்றாண்டு வெளிவந்த படங்களில் கோவை ரமேஷ் எடுத்துள்ள "சேகுவேராவின் வாழ்வும் புரட்சியும்" சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. சென்னை ராம் இயக்கிய "மரண காண விஜி" என்கிற படம் மரண கானா பாடும் கலைஞரை யதார்த்தமான முறையில் ஆவணப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்கிற படம் தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரான தேவதேவனை ஐந்திணைகளில் கொண்டு பொய் நிறுத்தி அழகுற படமாக்கி இருந்தார் சிபிச்சரவணன். பாப்பாபட்டி - கீரிப்பட்டி போன்ற பகுதிகளில் ஜனநாயகமற்ற முறையில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததால் அங்கு தாழ்த்தப்பட்ட தோழர்களை நிறுத்தி வெற்றிபெற வைத்துள்ளனர். இந்நிகழ்வை மாதவராஜின் "இதுவேறு இதிகாசம்" சிறப்பான பார்வையில் பதிந்துள்ளது. லீனா மணிமேகலையின் 'தேவதைகள்' படம் வெவ்வேறு தொழில் செய்யும் மூன்று மகளிரைப்பற்றி ஆவணப்படுத்தி எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் குதிரை சந்தை நடக்கும் ஒரே இடம் அந்தியூர். அதன் பின்புலத்தில் அப்பகுதி மக்களின் சமூக, கலாச்சார வாழ்வை மானுடவியல் நோக்கில் ஆவணப்படுத்தி இருந்தார் முகிலன். தண்ணீருக்காக மக்கள் படும் அவலங்களை 'தண்ணீரும் மக்களும்' என்கிற தலைப்பில் சாம்ராஜ் படமாக்கி இருந்தார். விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறுவதை 'ஒரு சொல் கேளிர்' என்று சகாதேவன் எடுத்திருந்தார். "ஒரு கைதியின் கனவு" என்று மதானியின் வாழ்வை ஷானாஸ் கொண்டு வந்தார். நகுலனைப்பற்றி அருண்மொழியும், பத்மினியைப் பற்றி திருநின்றவூர் சந்தானகிருஷ்ணனும், இளங்குமரன் பற்றி செல்வனும், தமிழ் சமூகத்திற்கு முன்னரே திரைப்படம் வந்த வரலாற்றை 'பேசாமொழியாக' செந்தமிழனும் கொண்டு வந்திருந்தனர்.
          
குறும்படங்கள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்...

                                                                                                                                                                பதிவுகள் படரும்...

                                                                                                                                             அடுத்து

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.