|
(தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய சிறப்பு குறும்பட வட்டம் கடந்த சனிக்கிழமை (15-08-09) சிவகாசியில் நடைபெற்றதால் இந்த வாரம் அனைத்து பகுதிகளும் ஒரு நாள் தாமதமாக வெளிவரும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். )
பரிசல்காரன் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் இவரின் இயற்பெயர் K.B. கிருஷ்ணகுமார்.
 |
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனமொன்றில் மனிதவள மேம்பாட்டு மேலாளாரகப் பணி செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே இவருக்கு வாசிப்பிலும் எழுத்திலும் நாட்டமுண்டு. 1992 களிலியே இவரது எழுத்துகள் அனைத்து வணிக பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. வேலை நிமித்தம் காரணமாக சில வருடங்கள் எழுத முடியாமல் இருந்தார். மீண்டும் இணையம் என்ற வரப்பிரசாதத்தின் காரணமாக கடந்த 15 மாதங்களாக இவரது சொந்த இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். 400க்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்களை கொண்ட பிரபலபதிவராகவும் இணையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது வாசிப்பு அனுவங்கள் மற்றும் பிடித்த புத்தகங்கள் பற்றி கேட்டதற்கு: சுஜாதாவின் எல்லா புத்தங்களும் முக்கியமான சிறுகதைகள் & கட்டுரைகள் மிக மிக பிடித்ததாக கூறுகிறார். |
பரிந்துரைக்கும் புத்தகங்கள்:
சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்
(மூன்று பாகங்கள்: 1 - ஜீயே வெளியீடு ரூ.100: 2 - ஜீயே வெளியீடு - ரூ 140/- 3- Ecks Publications - ரூ 200/)
ஒரு யோகியின் சுய சரிதம் - YOGADA SATSANGA SOCIETY OF INDIA ரூ.100/
நானும் இந்த நூற்றாண்டும் (கவிஞர் வாலி) வானதி பதிப்பகம் ரூ 250/)
இசையின் மீது இவருக்கு தீராக்காதல் உண்டு. அதுவும் இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை என்கிறார். ஆல்பங்களில்
U2வின் ஆல்பங்கள், ப்ரையன் ஆடம்ஸ், மைக்கேல் ஜாக்ஸன், கைலாஷ் கெர், ராஹத் ஃபாதே அலிகான், என்று இவரது இசை பட்டியல் நீளுகிறது.
வலையுலகில் இவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அந்த முகம் தெரியாத நட்புகளும் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளும் தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக மகிழ்கிறார். ஆனால் நண்பர்களுக்குள்ளான தேவையற்ற சர்ச்சைகள் சில சமயம் வருத்தமடைய வைப்பதாகவும் கூறுகிறார். ஆனால் அனைத்து ஜனரஞ்சகமான வலைகளைகளையும் விரும்பி படிப்பாராம்.
வலையுலகின் எதிர்காலம். எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு:
பிரபல பத்திரிகைகள் பலவும் வலைப்பூக்காரர்களுக்கு மிகுந்த மரியாதை தருகின்றன. இணைய எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது எல்லாரையும் எழுத்தாளர்கள் என்றுதான் பார்க்கிறார்கள். சொல்லபோனால், உடனுக்குடனான கமெண்ட் வந்து எழுதுபவர்களின் நிறை குறைகளை சொல்லி அவர்களை புடம் போடுவதால் இன்னும் அவர்கள் பிரகாசிக்கிறார்கள். இணைய எழுத்துகளுக்கும், இணைய சஞ்சிகைகளுக்கும்தான் இனி பிரகாசமான எதிர்காலம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
தன் எழுத்துகளையும் புடம் போட்டு அவ்வப்போது மாற்றம் செய்து அனைத்து வாசிப்பவர்களுக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் திரு. கிருஷ்ணகுமாரும் எழுத்துலகில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எழுத்துலகில் சிகரங்களை தொட தமிழ்ஸ்டுடியோ.காம் மனதார வாழ்த்துகிறது.
இவரது வலையின் முகவரி:
மின்னஞ்சல் தொடர்புக்கு
|