|
இந்த பரபரப்பான உலகில் அனைத்து நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் என அனைத்து வகையான இதழ்கள் மற்றும் புத்தகங்களை படிப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால் பலதரப்பட்ட மொழிகளில் பலதரப்பட்ட பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களில் பல சுவையான தலைப்பில் படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் எழுத்துக்கள் உலாவருவதை யாவரும் அறிவோம். பல பயனுள்ள தகவல்களும் அவற்றுடன் ஊடே இழைந்து செல்வதும் அவற்றின் தரத்தை கூட்டுவனவாகவே உள்ளது. இது போன்ற நல்ல தகவல்கள் மற்றும் அழகான படைப்புகளை தமிழ் ஸ்டுடியோ வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தின் வெளிபாடே இந்த இணைப்பு.
வார பத்திரிகை மற்றும் நாளிதழ்கள் இவற்றுடன் சேர்த்து ஆங்கில மற்றும் பிற மொழிகளின் வார இதழ்கள் மற்றும் நாளிதழ்கள், புத்தகங்கள் என நாங்கள் படித்து சுவைத்த எழுத்துக்களை அவற்றின் தரம் மற்றும் அழகு மாறாமல் உங்களுக்கு அளிப்பதே எங்கள் நோக்கம். இதிலும் வாசகர்கள் பங்கேற்கலாம். வாசகர்கள் படித்து சுவைத்த அனைத்தையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அனுப்பும்போது அவற்றின் மூலம் (நீங்கள் படித்த பத்திரிகை அல்லது புத்தகம்) ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிட்டு அனுப்புங்கள். நீங்கள் படித்து சுவைத்தவற்றை மற்றவர்களும் சுவைக்கட்டும். நீங்கள் பெற்ற பயனை மற்றவர்களும் பெறட்டும்.
இந்தப் பகுதி ஒவ்வொரு வாரமும் புதன் அன்று புதுப்பிக்கப்படும்
நீங்கள் படித்தவற்றை அனுப்ப:
|