கலைஞர்கள் வாழும்போது இந்த உலகம் அவர்களை வாழ்த்துவது இல்லை. மாண்ட பின்னர் மார்தட்டி இறுமாப்புக் கொள்ளும். மாற்றாக அவர்கள் வாழும்போதே அவர்களையும் அவர்களின் படைப்புகளையும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் பாலமாய் இந்த இணைப்பு செயல்படும்.
மாலைப்பொழுதில் அடைமழை பெய்யும் நேரத்தில், மலைப் பிரதேசங்களில் பச்சைப் போர்வையை ரசித்துக் கொண்டே மனதுக்குப் பிடித்தவர்களுடன் பேசிக்கொண்டே செல்வதில் ஏற்படும் சுகம் வார்த்தைகளில் அடங்காதது.
அது போன்று ஒரு கற்பனை செய்துக் கொண்டு இந்த நேர்காணல்களை படியுங்கள். உண்மையில் உங்களுக்கு பலரது அனுபவங்கள் பகிரக்கிடைக்கையில் உங்கள் வாழ்க்கையின் பயணமும் இனிதே தொடரும்.
படைப்பாளிகள் பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று புதுப்பிக்கப்படும்.