கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

வணக்கம்.. செய்திகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
செய்திகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS செய்திகள் செய்திகள் வாயில்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் - தென்சென்னை - அலுவலக ஊழியர்கள் கிளை சார்பாக மூன்று குறும்படங்களுக்கான பாராட்டுவிழா

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் - தென்சென்னை - அலுவலக ஊழியர்கள் கிளை சார்பாக மூன்று குறும்படங்களுக்கான பாராட்டுவிழா சென்னை வர்த்தக சபை அரங்கில் 10.05.2010 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக படத்தொகுப்பாளர் பீ.லெனின், இயக்குனர் அறிவழகன், இயக்குனர் மீரா கதிரவன், எழுத்தாளர் ச. தமிழ்செல்வன், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் குறும்படங்கள் திரையிடப்பட்டன.

1. மாண்டோவின் சிறுகதையை குஜராத் கலவரத்தை பின்னணியாகக் கொண்டு பிரின்ஸ் என்னெரசு பெரியார் இயக்கிய "திற" குறும்படம்.

2. எழுத்தாளர் அழகியபெரியவனின் குறடு சிறுகதையை "நடந்த கதை" என்ற பெயரில் பொன். சுதா இயக்கிய குறும்படம்.

3. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை-வசனத்தில் முரளி மனோகர் இயக்கிய "கர்ண மோட்சம்" குறும்படம்.


இந்த மூன்று குறும்பட இயக்குனர்களுக்கும் தமுஎகச விருது வழங்கியது. பிறகு சிறப்பு விருந்தினர்கள் பாராட்டுகளை வழங்கினர்.

அலுவலக ஊழியர்கள் கிளை ராசய்யா வரவேற்பு வழங்கினார்.

கடந்த இருபது ஆண்டுகளாக பலரையும் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளோம். பல நல்ல படைப்புகளை கலை இரவுகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம். இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பாலகிருஷ்ணன் கூறினார்.

மாண்டோவின் சிறுகதையை ஏற்கனவே வாசித்துள்ளேன். குறும்படமாக பார்க்கும்போது கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. சினிமா ரசனையில் மாற்றம் வேண்டும். மக்கள் மனதில் ரசனை மாற்றம் தோன்றும்போதுதான் மக்களுக்கான சினிமா தோன்றும். மக்கள் மனதில் ரசனை மாற்றம் ஏற்பட தமுஎகச தொடர்ந்து பாடுபடும் என கர்ணாமூர்த்தி கூறினார்.

மக்கள் பிரச்சினையை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்ல குறும்படம் சிறந்த வடிவம் என உதயகுமார் கூறினார்.

தகுதியான படங்களை இனம் கண்டு அவற்றை பாராட்டும் செயலை தமுஎகச தொடர்ந்து செய்யும் என சக்திவேல் கூறினார்.

பீ.லெனின் :-

குறும்படங்களை தேடித்தேடி படத்தொகுப்பு செய்கிறேன். அதிகமாக பேச விரும்பவில்லை. அதிகமாக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். குறும்படத்திற்கு என்று தனித் திரையரங்கம் உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம். நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்.

ஜெசுதாஸ் :-

கலை அம்சத்தோடு சிறப்பான படைப்புகள் வெளிவந்து கொண்டுள்ளது. இது மேலும் பெருக வேண்டும்.

இயக்குனர் அறிவழகன் :-

மூன்று குறும்படங்களும் விருது பெறுவதற்கு தகுதியான படங்கள்தான். எழுத்தாளர்களின் எழுத்தை இயக்குனர்கள் சிறப்பாக படமாக எடுத்துள்ளனர்.

திற குறும்படம் எல்லா பிரச்சினைகளையும் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. ஆழமான பதிவு. கர்ணமோட்சம் தெருக்கூத்து கலைப்பற்றிய சிறப்பான பதிவு. நடந்த கதையில் தலித் பிரச்சினையை ஆழமாகவும், அழகாகவும் சொல்லி இருக்கிறார். மூன்று குறும்படங்களுமே சிறப்பாக வந்துள்ளன. நான் பெரிய படங்களை இயக்கினால் குறும்படம் அல்லது ஆவணப்படம் இயக்குவேன்.

இயக்குனர் மீராகதிரவன் :-

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை நடந்த கதை குறும்படமும், பெண்களின் பாலியல் கொடுமையை திற குறும்படமும், அழியும் கலைவடிவம் பற்றி கர்ண மோட்சம் குறும்படமும் சிறப்பாக பதிவு செய்துள்ளன.

வணிக சினிமாக்களில் வணிகம் மட்டும்தான் இருக்கும். இக்குறும்படங்களில்தான் ஆன்மா உள்ளது.

எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் :-

ஒரு படத்தை வீதியில் பார்ப்பதற்கும் அரங்கில் பார்ப்பதற்கும் அனுபவம் மாறுபடுகிறது. குறும்படங்களுக்கு உள்ளடக்கம் மட்டுமல்ல அழகியலும் வேண்டும். யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம், எங்கு வேண்டுமானாலும் தொழிற்நுட்பம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும்.

சமூக யதார்த்தம் என்ன, அதன் வலிகள் எத்தகையது என்பதனை பார்வையாளன் உணர வேண்டும். கலை, இலக்கியங்களின் வேலை வலியை உணர வைப்பதுதான்.

மூன்று குறும்படங்களும் மிக முக்கியமான பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளன. இதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். நடந்த கதை இப்போது நடக்கிறதா என பலர் கேட்கின்றனர். ஆனால் இப்பொழுதும் நடக்கிறது என்பதுதான் உண்மை.

விருதுநகர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகம் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என உயர்த்தப்பட்ட சாதியினர் கட்டாயபடுத்துகின்றனர். உயர்த்தப்பட்ட சாதி வீட்டு பெண் நாய்களை அருந்ததியர் வீட்டு ஆண் நாள் சேர்ந்துவிடக்கூடாது என்பதுதான் காரணம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

தெருக்களை திரையரங்குகளாக மாற்றுவோம். மக்கள் திரைப்பட இயக்கத்தை நாம் எல்லோரும் ஒன்றுபட்டு கட்டியமைப்போம். 2011 ஆண்டு மிகப்பெரிய திரைப்பட விழா நடத்த இருக்கிறோம்.

ஏற்புரையாக பொன். சுதா :-

குறும்படங்களுக்கு பாராட்டு விழா என்பது அரிய நிகழ்வு. குறும்பட போட்டி நடத்துவார்கள், விருது கொடுப்பார்கள் யாரும் இதுபோல் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தியதில்லை. முதன்முறையாக தமுஎகச தான் நடத்துகிறது. தமுஎகச அமைப்பினர் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அழகிய பெரியவனின் குறடு சிறுகதையை படித்தவுடன் இதை படமாக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். வலைதளத்தில் அறிமுகமான அருள்சங்கர் நடந்த கதையை தயாரிக்க முன்வந்ததினால் இது சாத்தியமாயிற்று. மூன்று படங்களில் பணியாற்றிய பிறகும் குறும்படத்தை ஒளிபதிவு செய்த ராசமணிக்கும், இசை, படத்தொகுப்பு, நடிப்பு என பலவகையிலும் எனக்கு ஒத்துழைப்பு செய்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு சம்பந்தமாகவும், எழுத்தாளர் அழகியபெரியவன் அதிக அளவில் உதவிகள் செய்தார். கதை சொல்லியாக குரல் தந்த கவிஞர் அறிவுமதிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரின்ஸ் என்னாரெசு பெரியார் :-

நிழல் திருநாவுக்கரசு மொழிபெயர்த்து வெளியிட்டிருந்த மாண்டோவின் சிறுகதைகளை படித்தபோது அதில் தடைசெய்யப்பட்ட கதையான திற சிறுகதை படித்ததும் எனக்கு பிடித்திருந்தது. அதை குறும்படமாக்க திரைக்கதை எழுத தொடங்கினேன். இந்திய பிரிவினை காலகட்ட பின்னணி கதை என்பதினால் அதன் தேவைகள் அதிகமாக இருந்தது. இந்நிலையில் குஜராத் கலவரங்கள் நடைபெற்றது. அப்போதும் சரி இப்போதும் சரி அதிக அளவில் பாதிக்கப்படும் இனம் முஸ்லிமாக உள்ளது. அதனால் அந்த கதை தற்கால சம்பவங்களோடு பிணைத்து திற கதையை குறும்படமாக இயக்கினேன். அரசாங்க உதவிப் பணத்தின் மூலம் அரசாங்கத்தை விமர்சித்து ஒரு படம் வெளிவந்திருக்கிறது என்பது இதன் சிறப்பாக கருதுகிறேன். இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ள தமுஎகச-க்கு என் மனமார்ந்த பாராட்டுகள். கருப்பும், சிவப்பும் இணைந்து செயல்பட வேண்டும். குறும்பட தயாரிப்பில் பங்கேற்ற அனைவரையும் நன்றியுடன் நினைந்து பாராட்டுகிறேன்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் :-

குறடு சிறுகதை ஒரு நாவலின் சிறுபகுதி. அந்த கதை இன்றும் நடக்கிற கதைதான். அதற்கு தமிழ்ச்செல்வன் சொன்ன அருந்ததியர் பிரச்சினையே சாட்சியாக உள்ளது. இக்குறும்படத்தை மாணவர்கள் மத்தியில் திரையிடல் செய்தபோது அவர்களிடமிருந்து வெளிவந்த எதிர்வினை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவர்கள் மூலம்தான் எதிர்கால சமூகம் மாறுதல் அடையும். தமுஎகச எனக்கு தாய்வீடு. அதை பாராட்டவும், விமர்சிக்கவும், சேர்ந்தியங்கவும் உரிமையுள்ள இடம்.

முரளி மனோகர் :-

என் குறும்படம் இந்த அரங்கில் திரையிடப்பட்டதை பெரிய கவுரவமாக நினைக்கிறேன். 7 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் சென்னை திரைப்பட விழா நடந்தபோது இதே அரங்கில் என் படமும் திரையிடப்படும் என நினைத்தேன். என் முதல் படைப்பே இங்கு திரையிடப்பட்டது எனக்கு மகிழச்சியாக உள்ளது.

திண்டிவனம் மாவட்டத்தில் இளமையில் நான் பார்த்து ரசித்த தெருக்கூத்து கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை பார்த்த மன வருத்தமே கர்ண மோட்சம் உருவாகக் காரணம். இதற்கு முதலில் நானே கதை எழுதினேன். பிறகு அதைவிட சிறப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் எனக்கு இந்த கர்ண மோட்சம் கதை எழுதிக் கொடுத்தார். அவருக்கும் இப்படைப்பு உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் என் நன்றி. இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு எனக்கு இவ்வளவு சிறப்பாக பாராட்டுவிழா செய்கின்ற தமுஎகச-க்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குமரகுருபரன் :-

எல்லா வகைக் கலைகளிலும் முதன்மையானது சினிமா எனக் கூறினார் புரட்சியாளர் லெனின். அவரின் தீர்க்க தரிசனத்தை என்னவென்று சொல்ல. அதன் உட்பொருளை உணர்ந்தவர்கள் குறும்படம் எடுக்கிறார்கள்.

அவர்களை பாராட்டுவதும், அவர்களது படைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் தமுஎகச -ன் கடமையாக கருதுகிறோம். இது தொடர்ந்து நடைபெறும். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தமுஎகச-ன் சார்பில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.