|
ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா
லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா, லெனின் விருது துவக்க விழா மற்றும் உலகத் தமிழ் குறும்பட தின விழாவை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகைப்பாட்டிலான குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முதல் நாள்.
திருவிழாவின் முதல் நாளான ஏழாம் தேதியன்று சிறுகதைகளை தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதில் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. செழியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திரையிடப்பட்ட குறும்படங்கள்:
1. நடந்த கதை (குறடு என்கிற அழகிய பெரியவனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம்). இயக்குனர்: பொன்.சுதா
2. செவ்லி (அறிவழகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம்). இயக்குனர்: அறிவழகன்
3. திற (மான்டோவின் ஓபன் இட் கதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம்). இயக்குனர்: பிரின்ஸ் என்னாரெசு பெரியார்.
4. கர்ணமோட்சம் (எஸ். ராமகிருஷ்ணன் கதை). இயக்குனர்: முரளி மனோகர்.
5. கழுவேற்றம் (தமயந்தியின் அனல் மின் மனங்கள் குறுங்கதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படம்). இயக்குனர் ராஜா.
ஐந்து குறும்படங்களும் திரையிடப்பட்டு அது பற்றி சிறப்பு விருந்தினர் செழியன் திறனாய்விற்கு பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள்: http://picasaweb.google.co.in/thamizhstudio/rqxllI#
இரண்டாம் நாள்:
இரண்டாம் நாள் நிகழ்வில் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. கல் மனிதர்கள். இயக்குனர்: குட்டி ரேவதி
2. சிட்டுக்குருவி. இயக்குனர்: கோவை சதாசிவம்.
இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டு அது பற்றி சிறப்பு விருந்தினர் ஆர்.ஆர். சீனிவாசன் திறனாய்விற்கு பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
மூன்றாம் நாள், மற்றும் நான்காம் நாள் நிகழ்வு சில தொழில் நுட்ப கோளாறினால் நடைபெறவில்லை.
இரண்டாம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள்: http://picasaweb.google.co.in/thamizhstudio/rqxllI02#
ஐந்தாம் நாள்:
ஐந்தாம் நாள் நிகழ்வில் பொதுப் பிரிவிலான குறும்படங்கள் திரையிடப்பட்டது. இதில் திரைப்படக் கல்லூரி பேராசிரியர் ரவிராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
திரையிடப்பட்ட குறும்படங்கள்:
1. நானும் என் விக்கியும். இயக்குனர்: கார்த்திக் சோமசுந்தரம்
2. செத்தாழை. இயக்குனர்: பிரசன்னா
3. இப்ப வருந்தி என்ன பயன். இயக்குனர்: செந்தில்குமார்
4. எச்சில் மனிதர்கள். இயக்குனர்: பத்மநாபன்
5. கம்மாயில கல்லு. இயக்குனர்: சுரேஷ்.
ஐந்து குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றி சிறப்பு விருந்தினர் ரவிராஜ் திறனாய்விற்கு பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஐந்தாம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள்: http://picasaweb.google.co.in/thamizhstudio/XNtZjJ#
ஆறாம் நாள்:
ஆறாம் நாள் நிகழ்வில் ஈழம் தொடர்பான குறும்படங்கள் திரையிடப்பட்டது. இதில் எழுத்தாளர் அஜயன் பாலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம். இயக்குனர்: பிரதீபன்
2. முல்லைத் தீவு. இயக்குனர்: சோமித்ரன்.
இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றி சிறப்பு விருந்தினர் அஜயன் பாலா திறனாய்விற்கு பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஆறாம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள்: http://picasaweb.google.co.in/thamizhstudio/XNtZjJ02#
ஏழாம் நாள்:
ஏழாம் நாள் விழா நாயகன், படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்கள் இயக்கிய க்னாக் அவுட், ஊருக்கு நூறு பேர் படங்கள் திரையிடப்பட்டது. இதில் அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான பாரதி மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் கவிஞர் மதுமிதா, இயக்குனர் ராசி அழகப்பன் ஆகியோரும் பங்கேற்றனர். மிக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வு லெனின் அவர்கள் பற்றி குறைந்த பட்ச புரிதலையாவது ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் என்பது திண்ணம்.
ஏழாம் நாள் நிகழ்வு ஒளிப்படங்கள்: http://picasaweb.google.co.in/thamizhstudio/XNtZjJ03# |