வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஊர் சுற்றலாம் வாங்க
1
 
1
வேடந்தாங்கல்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  வேடந்தாங்கல்
   
 

தமிழ் ஸ்டுடியோவின் முதல் ஊர் சுற்றலாம் வாங்க: வேடந்தாங்கல் (தொகுப்பு: தமிழ் கூத்தன்  -நாள்: 23-02-09: 10.30 PM

வேடந்தாங்கல்.... பல முறை திட்டமிடப்பட்டு இறுதியில் கடந்த சனிக்கிழமை (21 - 02 - 2009) விடியகாலை (நடுராத்திரி) இரண்டு மணியளவில் சென்னையில் இருந்து ஒரு குழுவாக இன்னோவா மகிழுந்தில் புறப்பட்டு சென்றோம்.

முதலில் பல தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் ஒரு சில தமிழ் ஸ்டுடியோ.காம் நண்பர்களுடன் மட்டும் வேடந்தாங்கல் சென்று வந்தோம். கவிஞர் வைகை செல்வி, தோழர்கள் மணிவண்ணன், கார்த்திக், ரமேஷ் மற்றும் நான் என மொத்தம் ஆறு பேர் போவதாக முடிவாகி அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். கவிஞர் வைகை செல்வி, மகிழுந்து தயார் செய்து எங்கள் சுமையை பெருமளவில் குறைத்தார்.

தமிழ் ஸ்டுடியோ சார்பில், வேடந்தாங்கலை ஆவணப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக கேமரா உள்ளிட்ட சாதனங்கள் தயார் செய்து விட்டு சனிக்கிழமை புறப்பட்டு சென்றோம்.

ஏன் நடுராத்திரி (பின்ன என்னங்க முந்தின நாள் குறும்பட வட்டம் நடத்தி முடித்த களைப்பு தூங்கவே பன்னிரண்டு மணி ஆய்டுச்சு. இரண்டு மணி நேரம் தூங்கி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு போனத விடியகாலைனா சொல்ல முடியும். நடுராத்திரி தான்) இரண்டு மணிக்கு போனிங்க னு யாராச்சும் கேள்வி கேட்ட அதுக்கும் பதில் வெச்சிருக்கோம்ல. பொதுவா மனிதனை தவிர மத்த எல்லா உயிரினமும் விடியகாலை ஆனா பொழப்ப பாக்க கிளம்பிடும். பறவைங்களும் அப்படிதான். அதனால அதுங்க பொழப்ப பார்க்க கிளம்பறதுக்கு முன்னாடி நாங்க எங்க பொழப்ப விட்டுட்டு அதுங்கள பாக்க போய்ட்டோம்.

சென்னையில் இருந்து சுமாரா 75 கிலோ மீட்டர் தூரத்துல காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற பறவைகள் சரணாலயம் தாங்க இந்த வேடந்தாங்கல். தமிழ் ஸ்டுடியோ.காம் ஊர் சுற்றலாம் வாங்க பகுதியின் நோக்கம் யாரும் அறியாத, அல்லது ஒதுக்கப்பட்ட பகுதியை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே. அப்புறம் ஏன் இங்க போனீங்க னு கேக்கறிங்களா? கொஞ்சம் தெரிஞ்ச இடமா ஆரம்பிக்கலாமே னு தான். போக போக பாருங்க.. சும்மா அதிரும்ல.. சரி.. வேடந்தாங்கல் போயிட்டு அது பத்தி எழுதாம விடலாமா... கடைசியில அதையும் படிச்சிடுங்க..

அதுக்கு முன்னாடி எங்க அனுபவங்கள்.

கிளம்பினது கொஞ்சம் லேட் தான் இருந்தாலும் டிரைவர் அண்ணனோட வேகத்தால ரொம்ப சீக்கிரம் (வெரசா) அஞ்சு மணிக்கெல்லாம் வேடந்தாங்கல் போய் சேர்ந்துட்டோம். ஆனா கொடும என்னனா அவிங்க ஆறு மணிக்கு தான் டிக்கெட் கௌண்டேர் திறப்போம் னு சொல்லிப்புட்டாங்க.. என்ன பண்ண. ஒரு மணி நேரம் அங்கிட்டிருக்கிற மக்கா கிட்ட பேசிக்கிட்டிருந்தோம். பயப்புள்ளைங்க நாமதான் இப்படி போய் இருக்கோம் னு பார்த்தா..

அங்க நமக்கு முன்னாடி இரண்டு மூணு பெரிய பஸ்ல பள்ளிக்கூட புள்ளங்கைலாம் எங்களுக்கு முன்னாடி வந்து உக்கந்திருக்குங்க..

என்னத்த சொல்ல... அதுக நீலகிரி, விழுப்புரம், மதுரனு ரெம்ப தூரத்துலிருந்து வந்திருக்குதுங்க.. ரெண்டாம் க்ளாஸ், மூனாம் க்ளாஸ் புள்ளைங்க எல்லாம் கொட்டாவி விட்டுகிட்டு உக்கார்ந்து இருக்கிறது பார்த்தா அட ஆத்தா என்னத்த சொல்ல.. ஜாலி யா டூர் போறது விட்டுட்டு இப்படியா பண்றது.. என்னவோ போங்க..

ஒரு வழியா ஆறு மணிக்கு கொஞ்சம் முன்னாடி உள்ள போய் பறவைகள பார்த்தா வெறும் காத்துதேன் வருது... பின்ன அங்கிட்டு ஒரே பனி மூட்டம் இல்ல.. ஒரே இருட்டுல ஒண்ணுமே தெரியல..பிறவு, கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணி லேசா வெளிச்சம் வந்ததும் எங்க வேலைய ஆரம்பிச்சோம். படம் பிடிச்சோம்ல.. அத்தான் சொல்றேன். அவ்ளோ பெரிய இடத்துக்கு இருக்கிறது ஒரே ஒரு டெலஸ்கோப் கோபுரம் தான். அதுலயும் ஒன்பது மணிக்கு மேலதான் டெலஸ்கோப் வைப்பாங்களாம். ஒரு வழியா எட்டு மணி வரைக்கும் வளைச்சி வளைச்சி படம் பிடிச்சோம். பிறவு பாரஸ்ட் கெஸ்ட் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு காலைல சாப்பாட்டுக்கு கிளம்பியாச்சு. (வைகை செல்வி அரசாங்க அதிகாரி அதனால எங்களுக்கு ரூம் கிடைக்கிறதுல ஒன்னும் பெரிய சிரமம் ஏற்படல...)

தனியார பொருத்த வரைக்கும் அவிங்களுக்கு இலாபம் தான் முக்கியம். அனால் அரசாங்கம் என்ன பண்ணுது.. வேடந்தாங்கல்ல குறைந்த பட்சம் சீசன் டைம்ளையாவது, வர சுற்றுலா பயணிகளுக்கு கொஞ்சம் வசதி பண்ணித் தரலாம்.

அவ்ளோ அவஸ்த பட்டோம்ள.. குறைந்த பட்சம் ஒரு சின்ன நல்ல ஹோட்டல் கூட அங்க இல்ல.. ஆனா அதுவும் நல்லதா போச்சு. ரொம்ப நாள் கழிச்சு ஒரு குடிசைல ஒரு பாட்டிக் கையாள இட்லி வடை சாப்பிட்டது மனசுக்கு நிறைவா அமைஞ்சது. ஆனா பல பேருக்கு அது பெரிய குறையா பட்டுது. அரசாங்கம் ஒரு நல்ல உணவகம் அமைச்சுக் கொடுத்தா நல்ல இருக்கும்.

காலைல சாப்பிட்டு அப்படியே மறுபடியும் உள்ள போய் பறவைகள படம் பிடிச்சோம். பறவைகள பாக்க பாக்க இழந்த ஏதோ ஒரு சுகத்த அடைஞ்ச மாதிரி ஒரு நினைப்பு. சென்னையில வாகன நெரிசல்ல, அவசர அவசரமா வாழற உலகத்திலிருந்து விடுதலை கிடைச்ச மாதிரி இருந்துச்சு. பறவைங்க அதுகளோட குட்டிகளுக்கு உணவூற்றதும், அதுக்காக உயிருள்ள மீன்கள அதுகளோட அலகால (வாயால) கவ்வி பிடிச்சிக்கிட்டு போறதும்.... என்னத்த சொல்ல. அந்த சுகத்த நீங்களே போய் அனுபவிச்சு பாருங்க..

நாங்க போனப்ப நல்ல சீசன், சுற்றலாப் பொருக்காட்சியில காணும் பொங்கல் அன்னிக்கு எப்படி கூட்டம் இருக்குமே அது மாதிரி பறவைங்க இருந்துச்சு... அப்புறம் அன்னிக்கு சனிக்கிழமை வேற...அதனால பள்ளிக்கூட பசங்க கூட்டம் அதிகமா இருந்துச்சு..நிறைய பத்திரிகை காரங்க வந்தாங்க.. அதிகமா வெளிநாட்டுக் காரங்க வந்தாங்க... அதனால பலதரப்பட்ட மக்களை பாக்க முடிஞ்சது...

ஒவ்வொருத்தரோட மன நிலைமையும் பாக்க முடிஞ்சது. பள்ளிக்கூட பசங்களுக்கு பறவையாவது மண்ணாங்கட்டியாவது.. எங்கேயோ வெளியில கூட்டிட்டு போறாங்க.. ஜாலியா பிரண்ட்ஸ் கூட வெளியில போகலாம் னு வந்திருக்கிதுக.. சின்னப் புள்ளையில நாமெல்லாம் கூட அப்படிதான். அந்த வயசுல இதெல்லாம் நமக்கு ஒன்னும் புரியாது. வாத்தியாருக அதுக்கு மேல.. புள்ளைங்கள கொஞ்ச நேரம் நின்னு பாக்க விடாம திருப்பதியில ஜரகண்டி ஜரகண்டி னு சொல்லித் விரட்டுற மாதிரி பயலுவல துரத்திட்டு இருந்தாக... அப்புறம் எதுக்கு வேடந்தாங்கல் டூர் வரணும்னு தெரியல...

ஆனா காலையில வந்த பள்ளிக்கூட பசங்க எல்லாம் பாவம்.. டெலஸ்கோப் கோபுரத்திலிருந்து பறவைகள கிட்டப் பாக்கலாம் னு நினைச்சு வந்திருப்பாங்க.. ஆனா அங்க டெலஸ்கோப் இல்ல.. கேட்டா ஒன்பது மணிக்கு மேலதான் வெப்பாங்கலாம். அப்புறம் ஏன் ஆறு மணிக்கெல்லாம் திறந்து விடம்னு தெரியல..

கொஞ்ச நேரம் படப்பிடிப்பு முடிச்சிட்டு மறுபடியும் மதிய நேர சாப்பாட்டுக்கு நெல்வாய் கூட்டு ரோட்ல இருக்கிற ஒரு சின்ன ஹோட்டலுக்கு சாப்பிட போயாச்சு. சாப்பாடு பத்தியெல்லாம் நோ கமெண்ட்ஸ்.. சாப்பாடு கிடைச்சதே பெரிய விஷயம்..

மதிய சாப்பாட்ட முடிச்சிட்டு "கரிக்கில்லி" சரணாலயத்துக்கு போலாம் னு முடிவு பண்ணியாச்சு. கரிக்கில்லி தனி ஊர் இல்லைங்க.. வேடந்தாங்கல் பக்கத்துல ஒரு நாலு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற இன்னொரு பெரிய பறவைங்க சரணாலயம்..வேடந்தாங்கல்ல பாக்கிறத விட கொஞ்சம் கிட்ட போய் பறவைகள பாக்கலாம். ஆனால் அந்த ஊருக்கு போக பஸ் வசதி கிடையாது. கார், வேன் னு வண்டியில போறவங்க மட்டும்தான் பாக்க முடியும். ஒரு ரம்மியமான இடம்.. சின்ன ரோடு.. ரெண்டு பக்கமும் பனந்தோப்பு... அங்க அங்க சின்ன சின்ன குட்ட.. (சின்ன சின்ன ஏரி) அந்த ஊர் பசங்க அந்த தண்ணியில குளிச்சு விளையாடறத பாக்கிறப்ப நமக்கு ஏதோ ஒரு வித ஏக்கம் தானுங்க வருது..

நாமெல்லாம் பட்டணத்துல ஏதோ ஒருவித திரையை போட்டுக்கிட்டுதான் வாழ்கிறோம். ஆனா அவிங்கள் எல்லாம் எவ்ளோ ஜாலியா இருக்கிறாய்ங்க... அவிங்கள எத்தனை பேர் பின்னாடி பட்டணத்துல ஏதோ ஒரு பன்னாட்டு சாப்ட்வேர் கம்பெனியில வேலைப் பக்கப் போறாங்களோ.. அப்ப அவிங்களும் நம்மள மாதிரி ஏக்கப் படுவாய்ங்க.. தேங்க்ஸ் டு சாப்ட்வேர் கம்பெனிஸ்... (பாவி பயலுவளா..) சரி ஓகே நம்ம விசயத்துக்கு வருவோம். கரிக்கில்லி போகறதுக்கு முன்னாடியே வேடந்தாங்கல் கண்காணிப்பாளர் சொன்னார். அந்த ஏரியில இப்ப தண்ணி இல்ல.. அதனால இப்ப அங்க பறவைகளும் இல்லன்னு.. நாம யாரு னா சொன்ன கேப்போமா.. இவ்ளோ தூரம் வந்திட்டு கரிக்கில்லி பாக்காமா போன எப்பிடி.. அதனால போனோம்.. அவ்ளோதான்.. மத்தபடி கண்காணிப்பாளர்கள் சொன்ன மாதிரி பேருக்கு ஒரு பறவை கூட இல்ல..

ஆனா இந்த கரிக்கில்லி பயணத்தில நாங்க தெரிஞ்சிக்கிட்டது, உண்மையிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்துல ஆயிரம் ஏரிங்களுக்கு மேல இருந்தது னு. அடையாளங்க எல்லாம் இருக்குது ல. ஆனா இந்த அடையாளம் எல்லாம் இன்னும் எத்தனை வருசத்துக்கு... அரசாங்கம் னு ஒன்னு எதுக்கு இருக்கு.. குறைந்த பட்சம் இருக்கிற ஏரிகளையாவது பாதுகாக்கலாமே...

கரிக்கில்லி போயிட்டு மறுபடியும் வேடந்தாங்கல் வந்து அந்தி நேர பறவைகள படம் பிடிச்சோம். இன்னும் சொல்லிட்டே போகலாம். ஆனால் கட்டுரை ரொம்ப பெரிசா போய்டும்.. ஏற்கனவே பாதி பேர் கடுப்பாகி இருப்பீங்க... அதனால நிப்பாட்டிக்குவோம்.

பறவைங்க குறிப்பா வேடந்தாங்கள தேடி வர மூனுக் கரணம் இருக்கிறதா யாரோ ஒருத்தர் சொன்னது.. அவர் பேர சொல்ல விரும்பலையாம். (தமிழ் ஸ்டுடியோவின் எக்ஸ்க்ளுசிவ் கவரேஜ்).

1. காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகளால் சூழப்பட்டது.. (மெய்யாளுமானு கேட்டீங்கனா எனக்கு தெரியாது. ஒருகாலத்துல.. இப்பவும் தண்ணி இருக்கு.. ஆனால் அதுக்கெல்லாம் பேரு ஏரினா நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..)

2. அந்த ஏரியில் இருக்கும் மரங்கள். அதுக்கு பேரு நீர்க்கடுப்பை மரம். (சென்னையில நீர் இல்லமா நாமதான் கடுப்பாக்றோம்)... அந்த மரத்துக்கு என்ன சிறப்புனா அதன் கிளைகள் அருகருகே அமைந்து இருக்கும்.. மிகவும் அடர்த்தியான மரம். அதனால பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரிக்க வசதியா இருக்கிறது. (மறைவா இருக்குதாம்ப... பாத்துக்கங்க.. பறவைங்கலாம் மறைவா பண்ணுது.. ஆனால் அங்க வர காதலர்கள்?

3. அந்த ஊர் மக்கள்.. பறவைகளுக்காக அவர்கள் பல தியாகங்கள் செய்து இருக்காங்க.. பட்டாசு வெடிக்கிறது இல்ல.. அதிகமா சத்தம் போடுறது இல்ல.. மாசுப்படுத்துறது இல்ல.. (உண்மைதானுங்கோ... போய் பாருங்க.. உண்மையிலேயே அந்த ஊர் ரொம்ப சுத்தமா இருக்கு.. ஆனா எங்கிருந்தோ வர கூட்டங்கள்தான் அசுத்தப் படுத்திட்டு போறாங்க..) குறிப்பா பஸ் டிரைவர்ஸ்.. அவிங்க அங்கதான் சத்தமா ஒலி எழுப்புவாங்க... நேத்து ராத்திரி யம்மா னு பாட்ட சத்தமா வச்சிக்கிட்டு பஸுக்குள்ள சாமி கும்பிடுறாங்க.. சாமிக்கே அடுக்காதுங்கனா)... சோ எல்லா மக்களும் பாத்து பதுசா நடந்துக்கங்க பா... இல்லாங்கட்டி பறவைங்க கனவுல வந்து கண்ண குத்தும்...


வேடந்தாங்கல் துளிகள்.

* ஒரு வெளிநாட்டுக்கார டூரிஸ்ட் நம்ம ஆளு ஒருத்தர வழிகாட்டியா (Guide) கூட்டிட்டு வந்தாரு. ஆனா கொடும என்னனா அந்த வெளிநாட்டு டூரிஸ்ட் காரர் நம்ம ஆளுக்கு இங்குள்ள பறவைகள பத்தி சொல்லிக் கொடுக்கிறாரு. வழிகாட்டி யாரு னு எனக்கு புரியவே இல்ல..

* உலகம் ரொம்ப சின்னதுங்க.. நீங்க ஏங்க போனாலும் காதலர்கள பாக்காம இருக்க முடியாது. அங்கயும் அப்படிதான். நிறைய ஜோடிகள்.. பள்ளிக்கூட பயலுவல மாதிரிதான் இவிங்களும்.. பறவைகள பத்தி ஒன்னும் தெரிஞ்சிக்க தேவ இல்ல.. கூட்டமாவது மண்ணாவது.. அவிங்க வேலைய அவிங்க பாத்துட்டு கிடக்கிறாங்க.. அத நாம பாக்காம இருந்தா நல்லது.

* பெண்கள் மட்டுமே கொண்ட ஒரு குரூப் வந்தாங்க... புதுமைப் பெண்கள். ரொம்ப ஜாலியா இருந்தாங்க.. பாட்டு படிச்சிக்கிட்டு, ஒருத்தர ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கிட்டு... அவிங்க உலகம் தனி..

டிப்ஸ். (இது இல்லனா எப்பிடி..)

1. வேடந்தாங்கல் போகனும்னா சீசன் காலம் ரொம்ப இருக்கு.. ஆனா டிசம்பர் டு பிப்ரவரி நல்ல சீசன். அப்ப போங்க.. அதுவும் அதிகாலைல போனா நல்லது. குறைந்தது ஏழு மணிக்கே போய்டுங்க.. இல்லனா பறவைங்க எல்லாம் உணவைத் தேடிப் போய்டும்..

1. சூரியன் உதிக்கிறது சூரியன் மறையறது ரெண்டு வேலையும் மறக்காம பாருங்க.. உணமைலேயே என்ஜாய் பண்ணுவீங்க...

3. பேருந்து வசதி ரொம்ப கம்மிங்க.. செங்கல்பட்டு போய் அங்கிருந்து வேடந்தாங்கல் போகலாம். இல்லனா மரக்காணம் போய் அங்கிருந்து வேடந்தாங்கல் போகலாம். சிறந்த வழி செங்கல்பட்டு போய் அங்கிருது வேடந்தாங்கல் போறதுதான். ஒரு வண்டி ஏற்பாடு செஞ்சிட்டு போறது நல்லது. ஏனா கரிக்கில்லியும் சேர்ந்து பாத்துட்டு வரலாம்.

4. ஒரே ஒரு நாள்தான் அங்க இருக்கப் போறீங்க.. அதனால ஒரு நாளுக்கு தேவையான சாப்பாடு வீட்டிலேயே செஞ்சிட்டுப் போறது நல்லது. நொறுக்கு தீனி நிறைய கிடைக்கும். ஆனா நல்ல சாப்பாடு? நீங்க தான் பொறுப்பு.

5. முக்கியமா சாப்பிட்டிட்டு குப்பைகளெல்லாம் குப்பைத் தொட்டியில போடுங்க. ஏனா பறவைங்க தொடர்ந்து வரனும்னா அந்த இடம் சுத்தமா இருக்கணும். எதிர்கால சந்ததி வேற யாரும் இல்லைங்க.. உங்க பிள்ளைங்க தான். அதனால பொறுப்போட செயல்படுங்க...குறிப்ப சின்னப் பசங்களுக்கு சொல்லிக்குடுங்க... பல பெரியவங்க சின்னப் பசங்கள கண்டிக்கிறதே இல்ல..எது எதுக்கோ கண்டிக்கிரவங்க இந்தக் குப்பை விசயத்துல அப்படியே விட்டுறாங்க.... குறிப்பா வாத்தியாருங்க... பிள்ளைகள எது எதுக்கோ விரட்டுறாங்க.. ஆனா இந்த விசயத்துல கண்டிக்கிறதே இல்ல..

6. உங்கப் பேர கண்ட இடத்தில கிறுக்கிட்டு வராதிங்க.. பாவிப் பயலுக.. அழகா பரவைங்கள வரைஞ்சு வச்சிருக்கிற இடத்துல.. அவிங்க அவிங்க ஜோடி பேர எழுதிட்டு பறவைகள வரைந்த இடம் தெரியாம பண்ணிடறாங்க..

7 . அப்புறம் நீங்க போறது பறவைங்க இருக்கிற இடம். அங்க போய் அதிகமா சத்தம் போடாதீங்க.. மாசுப்படுத்தாதீங்க... இருக்கிற கொஞ்சம் இயற்கையையாவது காப்பாத்துங்க.. அவ்ளோதாங்க... அடுத்த ஊர் சுற்றலாம் வாங்க பகுத்தியில் நீங்களும் வந்து கலந்துக்கோங்க..

கட்டணங்கள்:

சிறியவர்: 2 ரூபாய்
பெரியவர்: 5 ரூபாய்
ஒளிப்படக் கேமரா: 25 ரூபாய்
காட்சிக் கேமரா: 150 ரூபாய்

(கூட்டமா போன நிச்சயமா தள்ளுபடி கிடைக்கும். அதுவும் படிக்கிற பசங்களுக்கு)

(இந்தக் கட்டுரை எங்களின் வேடந்தாங்கல் பயணத்தைப் பற்றிய பதிவு மட்டுமே. ஊர் சுற்றலாம் வாங்க பகுதியின் நோக்கமான பறவைகள் குறித்த ஆவணப்படம் எடுத்தல் மற்றும் பறவைகள் குறித்த அரிய தகவல்கள் ஆவணப்படமாக விரைவில் வெளிவரும்.)

வேடந்தாங்கல் பற்றிய இந்த தகவல்களையும் படிச்சிடுங்க...(தொகுப்பு)

1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார். வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆசுத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இங்கு வரும் பறவைகளில் நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆண்டுதோறும் வெளி நாடுகளிலிருந்து பல்வேறு வகையானப் பறவைகள் இங்கு வருகின்றன. சில மாதங்கள் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. சீசன் முடிந்ததும் மே மாதம் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்கின்றன. பங்களாதேஷ், பர்மா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கனடா, சைபீரியா மற்றும் வட ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவைக் கடந்து பறவைகள் வருகின்றன. வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளில் ஓபன் பில் எனப்படும் அகன்றவாய் நாரை(அ) நத்தை குத்தி நாரை, பெலிகான் எனப்படும் கூழைக்கடா, பெயிண்டட் ஸ்டாக் எனப்படும் வண்ணநாரை, ஸ்னேக் பேர்ட் எனப்படும் பாம்புத்தாரா, ஸ்பூன் பில் எனப்படும் துடுப்புவாயன்(அ)கரண்டிமூக்கன் கொக்கு, கார்மிராண்ட் எனப்படும் மூன்று வகையான நீர்காகங்கள், ஸ்பாட் பில் டக் எனப்படும் புள்ளி வாத்து, கிரே ஹெராண்ட் எனப்படும் சாம்பல் நிற நாரை, ஒயிட் ஐபீஸ் எனப்படும் வெள்ளை அரிவாள் மூக்கன் கொக்கு, கிளாசி ஐபீஸ் எனப்படும் மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாண்ட் ஹெரான், பாடி பேர்ட் எனப்படும் குருட்டு கொக்கு, பின் டெய்ல் டக் எனப்படும் ஊசிவால் வாத்து, காமன் டீல் எனப்படும் சிரவி வாத்து, டேப் சிக் எனப்படும் முக்குளிப்பான் வாத்து, லிட்டில், லார்ஜர், கேட்டில் என அழைக்கப்படும் மூன்று வகையான உண்ணி கொக்கு, கார்கணி வாத்து, விசிலிங் டக் எனப்படும் மரத்தாரா(அ) சிங்கை சிரவி, கோட் எனப்படும் நாமக்கோழி, ஒயிட் பிரஸ்டு வாட்டர் ஹென் எனப்படும் நீர்க்கோழி, காமன் மூர் ஹென் எனப்படும் தாழைக்கோழி, கிரீன் சாண்ட் பைப்பர் எனப்படும் ஆற்று உள்ளான் கோழி, வாட்டர் காக் எனப்படும் தண்ணீர் கோழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஆண்டு 26 வகையான பறவைகள் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வந்துள்ளன.

பல ஆண்டுகாலமாக ஏரி தூர்ந்து ஆழம் குறைந்ததால் சில மாதங்களில் தண்ணீர் வற்றிவிடும். எனவே, ஏப்ரல் இறுதியில் பறவைகள் தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டு விடும். இந்த ஆண்டு ஏரியில் தூர்ந்துபோய் மேடாக உள்ள இடங்களில், மரம் இல்லாத பகுதியில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் தூர் வாரப்பட்டுள்ளது. 14 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவிற்கு ஏரியிலிருந்து மண் தூர் வாரப்பட்டுள்ளதால் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. முன்பு, தண்ணீர் அதிகம் உள்ள ஆழமானப் பகுதிகளில் மீன்கள் இருக்கும். அவற்றின் அருகில் உள்ள மரங்களில் பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும். இதனால் சுற்றுலா பயணிகள், பறவைகளை நீண்ட தூரத்திலிருந்தபடி கண்டுகளித்து வந்தனர். இந்த ஆண்டு நுழைவு வாயில் அருகிலும், மேடானப் பகுதிகளிலும் தூர் வாரியுள்ளனர். எனவே அப்பகுதிகளில் அதிக ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி மீன்கள் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள மரங்களிலும் பறவைகள் தங்க துவங்கி உள்ளன. சுற்றுலாப் பயணிகள், பறவைகளை அருகில் நின்றபடி பார்த்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகள்: பறவைகளைக் காண தினமும் 500க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், பண்டிகை நாட்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். பயணிகளை கவர்ந்திழுக்கும் பாம்புத்தாரா: வேடந்தாங்கலில் உள்ள பறவையினங்களில் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திழுப்பது பாம்புத்தாரா. இப்பறவை தண்ணீருக்குள் மூழ்கி, மீனை தன்னுடைய அலகால் கவ்விக்கொண்டு மேலே வரும்.

பின்னர், மீனை மேலே தூக்கிப்போட்டு மீனின் தலைப்பாகத்தை அலகால் பிடித்து விழுங்கிவிடும். இதை அனைவரும் பார்த்து ரசித்து செல்கின்றனர். இரவில் உணவை தேடும் வக்கா: பெரும்பாலானப் பறவைகள் அதிகாலையிலே இரை தேடச் செல்லும். மாலையில் தங்கள் கூடுகளுக்கு திரும்பும். நைட் ஹெரான் எனப்படும் வக்கா பறவைகள் இரவுநேரத்தில் இரை தேடிச் சென்று காலையில் திரும்புகின்றன. இரண்டாவது இனப்பெருக்கம்: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் வரும் பறவைகளில், வாத்து இனம் தவிர மற்ற பறவைகள் டிசம்பர் மாதத்தில் இரண்டு, மூன்று முட்டைகளையிட்டு 21 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சுகளை பொறிக்கின்றன.


குஞ்சுகள் 60 நாட்கள் முதல் 75 நாட்களுக்குள் வளர்ந்து பறக்கும் நிலையை அடைகின்றன. அதுவரை, தாய் பறவைகள் இரையை எடுத்து வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.
குஞ்சுகள் பறக்க துவங்கியதும் தாய் பறவைகளுடன் இரை தேடச் செல்கின்றன. இந்த ஆண்டு, ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளதாலும், பறவைகளுக்கு போதுமான இரை கிடைப்பதாலும் அகன்றவாய் நாரை, சாம்பல் நிற கொக்கு, பாம்புத்தாரா ஆகிய பறவைகள் தங்களது இரண்டாவது இனப்பெருக்கத்தை ஆரம்பித்துள்ளன. எனவே இந்த ஆண்டு, பறவைகள் சீசன் வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பறவைகள் சரணாலயத்தை தமிழ்நாடு வனத்துறை வன உயிரினக் காப்பாளர் ஆசீஷ்குமார் வத்சவா தலைமையில் வனச்சரகர் ராமமூர்த்தி, வனவர் செல்வம், வாட்சர் சண்முகம், பறவைகள் காவலர் முருகன் ஆகியோர் பாதுகாத்து வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் 10 துப்புரவுப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். (வேடந்தாங்கல் பற்றிய இந்தத் தகவல்கள் தொகுக்கப்பட்டவை. விக்கிப்பீடியா, தினமலர் போன்ற தளங்களில் இருந்து கிடைக்கப் பெற்றவை. மற்றும் பிற ஆங்கில தளங்களில் இருந்தும் கிடைக்கப் பெற்றவை)

வேடந்தாங்கல் மற்றும் அங்கு வரும் பறவைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் படிக்க கேழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://www.cmi.ac.in/gift/Nature/natu_waterbirds.htm

தொகுப்பு: தமிழ் கூத்தன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்யும் முதல் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு வேடந்தாங்கலில் முதலில் தொடங்குகிறது.

நோக்கம்: வேடந்தாங்கல் பகுதியில் உள்ள பறவைகள் பற்றிய ஆவணப்படம் எடுப்பது மற்றும் பறவைகள் குறித்த அறிய தகவல்கள் சேகரிப்பது.

இடங்கள்: வேடந்தாங்கல்
நாட்கள்: ஒரே ஒரு நாள்.
புறப்படும் தேதி: 21 - 02 - 2009 (அதிகாலை இரண்டு மணியளவில்)
செலவுத்தொகை: ஆர்வலர்கள் தங்கள் செலவுக்கான தொகையை தாங்களே கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

முன்பதிவு மற்றும் பிற தகவல்களுக்கு:

9840698236, 9894422268

thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.