இந்தப் பகுதியில் திரு. ப. செந்தாமரைக்கண்ணன் அவர்கள் கவிதைகளை நகைச்சுவை கலந்து உங்களுக்கு வழங்க இருக்கிறார். நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் அல்லது இந்த சமூதாயத்தின் தவிர்க்கமுடியாத ஒரு சில காரணிகளைப் பற்றி புதிய கோணத்தில் தனது கவிதை தொகுப்பை வழங்க உள்ளார்.
இனி அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்:
 |
திரு. ப. செந்தாமரைக் கண்ணன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளம் பகுதியை சேர்ந்தவர். தொடர்ந்து பல்வேறு பத்திரிக்கைகளில் கதை, கவிதை, கட்டுரைகள் என எழுதிவந்துள்ளார். இவர் எழுதிய "கவிதை மேகங்கள்" எனும் நூல் தமிழ்நாடு இயலிசை நாடகமன்ற நல்கையுடன் வெளியடப்பட்டது. இவரது இலக்கியப் பகுதி, முன்னுரூக்கும் மேற்பட்ட சிற்றலக்கியம், ஐம்பது தலபுராண காவியம் என விரிகிறது.
|
மேலும் வின் தொலைக்காட்சியில் திருத்தல தரிசனம் எழுதி இயக்கி உள்ளார். நீதியின் குரல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் நமது தளத்தில் தனது எழுத்தை தொடங்க உள்ளார்.