வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பயணக் கட்டுரைகள்
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1 பகுதி - 19
1
1 பகுதி-20
1
1 பகுதி - 21
1
1 பகுதி - 22
1
1 பகுதி - 23
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  பயணக் கட்டுரைகள்
   
 

சீனப் பயணக் கட்டுரைகள் - சக்தி ஜோதி

சீனாவில் நாங்கள் இருந்த ஒவ்வொரு கணத்திலும் சீனர்களின் தாய்மொழிப் பற்றினை எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தார்கள். அனேகமாக அனைத்து கடைகளின் பெயர் பலகைகளிலும் சீன மொழியே இடம் பெற்றிருக்கிறது. ஏறக்குறைய நம் காலத்தில் அதாவது 1950 ஆம் ஆண்டு தான் மன்னராட்சியிலிருந்து விடுதலை பெற்றார்கள். ஆனால் அவர்களது முன்னேற்றம் பலமடங்கு நம்மை விட முன்னேறியிருப்பது பிரமிப்பாக இருந்தது.

முதலில் அவர்களது தொலை நோக்குப் பார்வை. அதற்காக அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள். அரசாங்க கட்டளைகள் அவர்களைச் செலுத்துகின்றன. சற்றே இயந்திரத்தனம் கலந்து இருந்தாலும் இயல்பு வாழ்க்கையும் அதில் அவர்களின் ஈடுபாடும் அதிகம் தான். சீனர்களின் உணவுப்பழக்கம், உடைகளில் நம்மைவிட வித்தியாசமாக இருந்தாலும் குடும்பம் என்கிற அமைப்பில் நம் போலவே மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள்.

வயதானவர்களை நம் நாட்டில் புறக்கணித்து வருகிறோம் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் சீன அரசாங்கம் மூத்தக் குடிமக்களுக்கு செய்கின்ற சேவைகள் சிறப்பாக உள்ளது. அதிகமான ஓய்வூதியம், வயதானவர்கள் கூடி மகிழ பூங்காக்கள் என மூத்த குடிமக்களை மதிப்புடன் நடத்துகின்றனர்.

சீனாவில் மனதை கவரும் இன்னொரு விஷயம், சீனர்கள் சைக்கிள் பிரியர்கள். பெரும்பாலான சீனர்களின் வீடுகளில் சைக்கிள் கட்டாயமாக இடம் பெற்றிருக்கிறது. சாலையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் சைக்கிள் நிறுத்த தனி இடம் என முடிந்தவரை எங்கும் சைக்கிள் பயணம் என்பதை பார்க்க முடிந்தது. சைக்கிள் பயணம் பெட்ரோல் செலவு குறைவு என்பதை விட சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமைகிறது என்பதை நம்புகிறார்கள்.

எளிமையான சைக்கிள் பயணம் கண்டு வியந்து கொண்டே நாங்கள் சென்ற முதல் இடம், நேசனல் சென்டர் ஃபார் த பர்பாமிங் ஆர்ட்ஸ்!’ (National Center for the Performing Arts) கட்டிடம்! சாதாரண கட்டிடமல்ல அது. கலை உணர்வோடு கட்டப்பட்ட ஓவல் வடிவிலான ஒரு ‘அடேங்கப்பா’ கட்டிடம். சர்வதேச நிகழ்ச்சிகள், ஹைடெக் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரே சமயத்தில் சுமார் 6,500 பேரை அமர வைக்கத் தோதான கட்டிடம். இதில் நடக்கும் நிகழ்ச்சிகளை யாரும் கண்டுகளிக்கலாம்.

கட்டணம்? வெறும் 2,000 டாலர்கள் தான். அதாவது நம்ம ஊர் மதிப்பில் சுமார் 80,000 ரூபாய்! இந்த ‘ஓபரா ஹவுஸ்’ எங்களிடம் வெறும் பிரமிப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை. இந்த மாதிரி ஒரு விசாலமான சர்வதேசத் தரமான அரங்கம் நம்ம ஊரிலும் அமைக்கலாமே. “கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் யோசிக்கக் கூடாது? “ – என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.

சீனாவின் தேசிய நிறமான சிவப்பு வர்ணத்தில் ஓபரா ஹவுஸ் நிறைந்திருந்தது. உட்புற சுவர்களும், நாற்காலிகளும் இன்னும் திரைசிலைகளும் சிவப்பால் நிறைக்க, சீனர்கள் சிவப்பு வர்ணத்தை விரும்பும் காரணத்தை மாலையில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அடுத்ததாக ‘திபெத் நேற்று - இன்று’ கண்காட்சிக்கு சென்றோம்.

திபெத்துடன் நல்லுறவு இருப்பதை அல்லது இருக்கும் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நிகழ்ச்சி நிரலில் இந்த விஸிட் அமைந்திருந்ததாகவே எங்களுக்கு தோன்றிற்று. அண்டை நாடுகளுடன் இனக்கமாக இருக்க விரும்புவதும், போர் புரிந்து ஆளுகைக்குள் வைத்துக்கொள்ள விரும்புவதுமான மனநிலை எந்த சமூகத்திலும் மாறி மாறி தொடர்ந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது என தோன்றியது.

''சுதன் ராஜ்’ என்ற சீனமொழி படிக்கும் இந்திய மாணவர் எங்களது குழுவின் தலைவர். இவர் எப்போதும் ஹிந்தியிலேயே தகவல்களைச் சொல்ல, கமலக்கண்ணன் கடுப்பாகிச் சண்டையே போட்டு விட்டார். நானும் கண்மணியும் உள்ளே புகுந்து சமாதானப்படுத்த வேண்டியதாய் போய் விட்டது. இருப்பினும் கமலக்கண்ணன் தன் தரப்பு நியாயத்தை கூறிய பின்பு தான் ஆங்கில உரையாடல் நிகழ்ந்தது.

பயணிப்போம்...

இந்தப் பகுதி ஒவ்வொரும் வாரமும் திங்களன்று புதுப்பிக்கப்படும்.

சக்தி ஜோதி அவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள:shakthijothi@gmail.com

அடுத்து

thamizhstudio@gmail.com


கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.