சீனப் பயணக் கட்டுரைகள் - சக்தி ஜோதி
இந்திய இளைஞர்களுக்கு மன தைரியம் இல்லையென்று ஒட்டுமொத்தமாய் சொல்லி விட முடியாது என்பதற்கு சாட்சியாக என்னுடன் வந்த சில இளைஞர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீன மொழி படிக்கும் மாணவியான ராதாஜா என்பவர் சிறிய பெண் போல தோற்றமும், குழந்தைத்தனமான பேச்சும் இருந்தாலும் தீர்க்கமான செயலும், ஒட்டுமொத்த பேரையும் ஒருங்கிணைக்கும் திறமையும் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
 |
அதே போல முகமது ரஃபி என்பவரின் மொழி ஆளுமையும் தான் நினைப்பதை சொல்லக்கூடிய திறமையும் கண்டு பாராட்டினேன். முகமது ரஃபி இந்தியாவிலேயே மிகச்சிறந்த I. A. S. ஆபீசர் என்ற பெயரினை கட்டாயம் எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு இருப்பவர். தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளை சரளமாகவும், தெளிவாகவும் பேசுகிறார். |
இவர்களைப் போன்ற தொலைநோக்கு பார்வையுள்ள இன்னும் சிலரைப் பற்றியும் தெரிந்து கொள்வது இளம் தலைமுறையினருக்கு மாதிரியாய் இருக்கும், என்று நினைத்து வேறு சிலரையும் அணுகி பேசவேண்டும் என்று தீர்மானித்தேன்.
ஃபியூஷோ நகரத்தின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றது ஃபுயோ கிளாஸ் கம்பெனி. 1987ல் கேவ் டிவாங் என்பவரால் கார் கண்ணாடிகள, பாதுகாப்பு கண்ணாடிகள் செய்யும் இந்த தொழிற்சாலை துவங்கப்பட்டது. பங்கு வர்த்தகத் தொழிலில் இந்த நிறுவனம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் விமானத்தில் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு கண்ணாடிகளாகவும், கார்களின் வளைந்த கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளும் தயாரிக்கப்படுகிறது. சீனா முழுவதும் உள்ள கண்ணாடி விற்பனையில் ஐம்பது சதவீதம் இங்கிருந்தே தயாரிக்கப்படுகிறது. இந்தக் கண்ணாடியின் சிறப்பம்சம் இது கடினப்படுத்தப்பட்ட கண்ணாடியாக இருக்கிறது.
 |
எனவே ஆடி, ஹீண்டாய், போர்டு போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும், டியூமன் என்னும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் ஃபுயோ கிளாஸ் நிறுவனத்தின் கண்ணாடிகளையே பயன்படுத்துகின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களோடு இயங்கும் இந்த நிறுவனம் சியாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதினைந்து மில்லியன் டாலர் கொடுத்ததோடு அல்லாமல் |
ஆண்டு தோறும் சமூக மேம்பாட்டு நலத்திட் டங்களுக்கு முந்நூறு மில்லியன் யூரோவை செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் நிறுவனரான காவ் டிவாங் உலகத்தின் சிறந்த தொழிலதிபர்களுக்கு வழங்கும் நுயசநௌவ யனெ லுழரபெ எனும் விருது பெற்றிருக்கிறார். இவ்வளவு சிறப்புகளை உடைய இந்த காவ் டிவாங் தன் பதினாறு வயது வரை கடும் ஏழ்மையில் இருந்த அவர் படிப்படியாக உயர்ந்தவர். தான் வேலை பார்த்த கண்ணாடி கம்பெனி நலிவடைந்து மூடப்பட்ட போது சவாலாக அதனை எடுத்து நடத்தி நிறுவனத்தை நிலைநிறுத்தினார். பின்பு மெல்ல மெல்ல புதிய புதிய திட்டங்களோடு ஃபுயோ கிளாஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வரவேற்பை பெருமளவிற்கு வளர்த்திருக்கிறார். இளமையில் எடுத்த மிகத்தைரியமான சரியான முடிவிற்கு கிடைத்த பலன் இது.
பயணிப்போம்...
இந்தப் பகுதி ஒவ்வொரும் வாரமும் திங்களன்று புதுப்பிக்கப்படும்.
|