2008 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு இந்தியனைன் வாழ்விலும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்யஜித்ரே, பானு, ஆதித்யாவிற்கு அடுத்த படியாக சில அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வருடம் ஏ.ஆர்.ரெஹ்மான், ரசுல் பூக்குட்டி, குல்சார் என ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்கொண்டு வந்துள்ளனர். போனஸாக இந்திய சிறுமி நடித்த “Smile Pinky” சிறந்த ஆவனபடத்திற்க்கான ஆஸ்கர்விருதை வாங்கியது.
இந்தியா சார்பில் சென்ற படங்கள் எந்த விருதையும் பெறவில்லையென்றாலும். இந்தியாவை மயமாக கொண்ட படங்கள் ஆஸ்கர் விருதை பெறுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே 'The passage to India’, ‘Gandhi’ போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கின்றன. இதை நிச்சயம் இந்திய படைபாளிகள் கவனத்தில்கொள்ளவேண்டும். சலாம் பாம்பே திரைப்படம் கூட NRI ஆன மீராநாயரால் இயக்கப்பட்டது.
 |
இந்த முறை மூன்று பரிந்துரைகளுடன் இரண்டு விருதுகளை வாங்கிய ஏ.ஆர் ரெஹ்மான் ஒருபடி மேலே போய் “ எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் சொல்லியபோது என் கண்கள் கலங்கின. உலகின் ஒரு மூலையில் இருந்து தமிழன் ஒருவன் உலகின் பல லட்சம் மக்கள் காணும் ஒரு நேரடி நிகைச்சியில் தன் துறையில் பல ஜாம்பவான்களை மீறி வெற்றிக்கொண்டு அங்கே தேன்தமிழை மொழிந்திருப்பது. |
ஒவ்வொறு தமிழனுக்கும் மகிழ்வான விஷயம்தான். நம் வாழ்த்துக்களையும் ஆனந்த கண்ணிருடன் அவர்களுக்கு தெரிவிப்போம்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இவர்களுக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
ஆஸ்கர் குறும்படம் : Spielzeugland – TOYLAND.
2008 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த குறும்பட’ ஆஸ்கர் விருது “Spielzeugland – TOYLAND“ என்ற ஜெர்மென் படத்திற்க்கு கிடைத்துள்ளது. 1942 ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியில் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் யூத சித்திரவதைகளுக்கிடையே கதை நடைப்பெறுகிறது.
 |
தன் மகனை தேடி அலையும் ஒரு தாய். அவன் யூதர்களுடன் யுதனாக ‘யூத சித்திரவதை முகாமிற்ககு’ அனுப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறாள். காரணம் ஒரு முறை ’யுதர்கள் எல்லாம் எங்கே அழைத்து செல்லபடுகிறார்கள்?’ என்று மகன் கேட்க அவன் தாய் ”அவர்கள் பொம்மைகள் உலகிற்க்கு அழைத்து செல்ல படுகிறார்கள்” என்கிறாள். |
அதை உண்மை என நம்பும் மகனும் தன் யூத நண்பனுடன் பொம்மைகள் உலகை காண அவர்களுடன் சித்தரவதை முகாமிற்கு சென்றுவிடுகிறான் (அவன் கிரிஸ்துவன்).
அவன் பிழைத்தானா? அந்த தாய் அவனை கண்டுபிடித்தாளா? என்பது தான் மீதி கதை. திரையில் காணூங்கள்.
வெறும் 13 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை எழுதி இயக்கியவர் ஜோஷென் அலெக்சாண்டர் ப்ரெடான்க். இது இவருக்கு முதல் ஆஸ்கர் விருது. இரண்டாம் உலக போரையும் ஹிட்லர் பாசிஸ கொடுமைகளையும் யூத சித்திரவதைகளையும் மையமாக கொண்டு உலகம் முழுவது பல மொழிகளில் பல திரைப்படங்கள் குறும்படங்கள், ஆவணபடங்கள் வெளிவந்து வரவேற்ப்பை பெற்றிருக்கின்றன. பல விருதுகளையும், ஏன் பல ஆஸ்கர் விருதுகளையும் வென்றிருக்கின்றன. அத்தனைக்கும் பின்பும் இந்த திரைப்படம் அதே களத்தில் மாறுப்பட்டு எடுக்கபட்டுள்ளது.
ஒரு நல்ல விஷயத்தை படமாக்க, அது முழு நீள திரைப்படமாக இருக்க வேண்டிய அவசியமில்ல, குறும்படமாகவும் இருக்கலாம். இந்த குறும்படத்தின் டெக்னிகல் விஷயங்கள் உயர்ந்ததாக இருப்பதும், நடிப்பு சிறப்பாக இருப்பதும் இன்னொரு நல்ல விஷயம்.
ஒரு குறும்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு இந்த படத்தை உதாரணமாக கொள்ளலாம். இந்த படத்தில் நம்மை கவரும் இன்னொரு விஷயம் அதன் Caption–’நீங்கள் யூத சித்திரவதை முகமிற்க்கு செல்ல யூதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை’.
ஹிட்லர் நடத்திய வெறியாட்டத்தை சரியாக பதிவு செய்த படங்கள் சிலதே. பொதுவாக நிறைய கற்பனை சேர்த்து கொஞ்சம் மிகையாகவே யூத கொடுமைகளை பதிவு செய்தன. யூத கொடுமைகளை ஒரளவு மையப்புள்ளியில் வைத்த வித்தியசமான திரைப்படங்கள் ’ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’, (Schindlars' List) ‘லைஃஃப் இஸ் பியுடிஃபுல்’ (Life is Beautiful). இவையிரண்டும் கூட ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்கள் தாம்.
நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இந்த படத்தை பாருங்கள், ஏன் ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்பது புரியும்.
தொகுப்பு:
அக்னிபார்வை