வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      திரைச்சிற்பிகள்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  கலைஞர்கள்
  திரைப்பார்வை
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  வினா விடை
  புதியவர்கள்
  1
கட்டுரைகள்
  நிழற்படக் காட்சி
  ஊர் சுற்றலாம் வாங்க
 
1
வரலாறு
 
1
ஆவணங்கள்
  வெட்டிப்பேச்சு
  தமிழ்தாசன் பக்கங்கள்
  'நிழல்' பக்கங்கள்
  கேப்ரியெல் பக்கங்கள்
  திரைமொழி
  வெள்ளித்திரை
  வலைப்பூக்கள்
  படித்ததில் பிடித்தது
  நூல்வெளி
  இலக்கியம்
  மற்றவை
  தொடர்புக்கு
  கருத்துப்பதிவு
 

 

     
11
1
குழந்தைகள் பக்கம்
1
 
1
அக்பர் - பீர்பால்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  அக்பர் - பீர்பால் கதைகள்
 
 
   
 
உள்ளங்கை முடி

"என் உள்ளங்கையில் ஏன் முடி முளைக்கவில்லை?"என பீர்பாலிடம் கேட்டார் அக்பர்.

"நீங்கள் வாரி வாரி வழங்குவதால் கையில் முடி முளைக்கவில்லை!" என்றார் பீர்பால்.

"அதெல்லாம் சரிதான். உன் கையில் ஏன் முடி முளைக்கவில்லை?" என்றார் அரசர்.

"நீங்கள் தருவதை வாங்கிக் கொண்டே இருப்பதால் முளைக்கவில்லை!" என்றார் சாமர்த்தியமாக.

"இவர்கள் கையில் ஏன் முடி முளைக்கவில்லை?" என்று எதிரே இருந்தவர்களை காட்டிக் கேட்டார் அரசர்.

உடனே பீர்பால், "நமக்குக் கொடுக்கவில்லையே என்று பொறாமையால் கைகளைப் பிசைவதால் முளைக்கவில்லை!" என்றதும் பீர்பாலின் சாமர்த்தியத்தைப் பெரிதும் பாராட்டினாராம் அக்பர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாபாரியின் மனைவி

வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் வந்த உழவன், வியாபாரியின் மனைவியை பார்த்து மயங்கியவாறே வியாபாரியிடம் "நான் வேண்டுமானால் உன் மனைவியை வண்டியில் ஏற்றி வருகிறேன்." என்றான்.

ஒப்புக்கொண்ட வியாபாரி, மனைவியை உழவனின் வண்டியில் ஏற்றிவிட்டு, அவன் நடந்து வந்தான். வியாபாரியின் மனைவியை எப்படியாவது அடையத் துடித்த உழவன் வண்டியை வேகமாக செலுத்தினான். வியாபாரியால் வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வண்டியை நிறுத்துமாறு கத்தினான். ஆணால் வண்டியோட்டியோ நிறுத்தாமல் வேகமாக செலுத்தினான். வியாபாரியின் மனைவியும் நிறுத்துமாறு கத்தினாள். ஆணால் அதை காதில் வாங்காமல் வெகுதூரம் வந்த பிறகு, வியாபாரியின் மனைவியை பலவந்தபடுத்தி இவனுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தான்.

கொஞ்ச நேரம் கழித்து வியாபாரியும் அவ்விடம் வந்து சேர்ந்தான். இருவருக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. அதனால் இருவரும் சக்ரவர்த்தி அக்பரிடம் சென்று தன் மணைவி என்று முறையிட்டனர். சக்ரவர்த்தி அக்பர் பீர்பாலைக் கூப்பிட்டு, யார் மணைவி என்று கண்டுபிடிக்குமாறு சொன்னார்.

வழக்கை விசாரித்த பீர்பால், ஒரு காய்ந்த மை டப்பாவும் தண்ணீரும் கொண்டு வருமாறு கூறினார். பின்பு அப்பெண்மணியை கூப்பிட்டு மை டப்பாவில் தண்ணீரை கலக்குமாறு கூறினார். அப்பெண்மணியும் அவ்வாறே செய்தார். பீர்பால், அப்பெண்மணியை வியாபாரியின் மணைவி என்று கூறி வியாபாரியுடன் செல்லுமாறு தீர்ப்பளித்தார்.

சக்ரவர்த்தி அக்பர் பீர்பாலிடம் எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டார். பீர்பாலும், "வியாபாரியின் மனைவி, பழக்கத்தின் காரணமாக மை டப்பாவில் தண்ணீரை அளவாக கலந்தாள். இதே உழவனின் மனைவியாக இருந்திருந்தால் தெரியாது." என்றார். அக்பரும் பீர்பாலின் புத்தி கூர்மை கண்டு வியந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கணவன் - மனைவி உறவு

ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் கனவன் மனைவி உறவை பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர்.

"அதிக கனவர்கள் மனைவிக்கு பயந்தவர்களாகவே உள்ளனர்" என்றார் பீர்பால்.

அக்பர் "அதை ஒத்துகொள்ள முடியாது" என்றார்.

"மதிப்பிற்குரிய சக்கரவர்த்தி! இதை நான் நிரூபிக்கின்றேன்" என்றார் பீர்பால்.

"முடிந்தால் நிரூபியுங்கள்"

"கண்டிப்பாக, ஆனால், நீங்கள், யாரேனும் தங்கள் மனைவிக்கு பயந்தவர்கள் என்று தெறிந்தாலோ அல்லது நிரூபிக்கப் பட்டாலோ அவர்கள் ஒரு கோழியை பீர்பாலுக்கு கொடுக்க வேண்டும் என்று மக்களுக்கு உத்தரவிட வேண்டும்" என்றார் பீர்பால்.

சக்கரவர்த்தியும் அவ்வாறே உத்தரவு பிறப்பித்தார்.

சில நாட்கள் கழித்து பீர்பாலிடம் நிறைய கோழிகள் சேர்ந்து விட்டன.

பீர்பால் "மதிப்பிற்குரிய சக்கரவர்த்தி அவர்களே! நிறைய கோழிகள் சேர்ந்து விட்டன. இதை வைத்து கோழி பண்ணை ஆரம்பிக்கலாம் போல் உள்ளது. எனவே உங்கள் உத்தரவை திரும்பப் பெறுங்கள்" என்றார்.

சக்கரவர்த்தி உத்தரவை திரும்பப் பெற மறுத்து விட்டார். வெறுப்படைந்த பீர்பால் மறுநாள் வந்து அக்பரிடம் "மதிப்பிற்குரிய சக்கரவர்த்தி! நமது அண்டை நாட்டு மன்னரின் மகள் மிக அழகாக இருப்பதாக நம்பத் தகுந்தவர்களிடமிருந்து தகவல் வந்துள்ளது. தாங்கள் விருப்பப் பட்டால் அவர்களிடம் தங்களது விருப்பத்தை தெறிவிக்கின்றேன்."

"என்ன பேசுகின்றீர்கள்? பேசுவதற்கு முன்பு கொஞ்சம் யோசித்து பேசவும். ஏற்கனவே அந்தப்புரத்தில் இருவர் உள்ளனர். இதை அவர்கள் கேட்டால் அவ்வுளவு தான் என்னை சும்மா விடமாட்டார்கள்." என்று சொன்னார் மன்னர்.

"மதிப்பிற்குரிய சக்கரவர்த்தி! நீங்களும் இப்போது எனக்கு ஒரு கோழி தர வேண்டும்" என்றார் பீர்பால்.

பீர்பாலின் புத்தி கூர்மையை கண்டு வியந்த மன்னர் தனது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறினார்.

  << முன் பக்கம்  | 1 2 3 4                                                                                                          அடுத்தப் பக்கம் >>

  வடிவமைப்பும் பராமரிப்பும்: விசை