புதிதாக குறும்படம் / ஆவணப்படம் எடுக்க விரும்பும் ஆர்வலர்கள் பலருக்கு அது பற்றிய பல தொழிநுட்ப தகவல்களும், தேவைப்படும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களும் தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் பல திறமைகள் வாய்க்கப் பெற்றும் சரியான களம் இல்லாததால் முடங்கிப் போய்க் கிடக்கும் பல கலைஞர்களும் இங்கு உண்டு. இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமே, கலைஞர்கள் பகுதி.
இந்தப் பகுதியில் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் (இயக்குனர்கள், படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் உட்பட) அனைவரும் தங்கள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் பதிவு செய்துக் கொள்ளலாம். உங்களுக்கானத் தேவை இருப்பின் தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்கள் உங்களைத் தொடர்புக் கொள்ளுவார்கள்.
பதிவு செய்ய விரும்பும் கலைஞர்கள், தங்கள் பற்றிய முழு விவரம், தங்களின் திறமை (படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர் போன்ற விவரம்), தங்கள் தொலைபேசி என் மற்றும் முழு முகவரி, மேலும் தாங்கள் சார்ந்த துறையில் தங்களுக்கு இருக்கும் படிப்பறிவு, முன் அனுபவம், தங்கள் புகைப்படம் போன்றவற்றை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தங்களை பற்றிய அனைத்து தகவல்களும் திரையில் காண்பிக்கப் படமாட்டாது. தங்கள் புகைப்படம் மற்றும் சுருக்கமானக் குறிப்பு மட்டுமே திரையில் இருக்கும். உங்களுக்கானத் தேவை இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோர் தமிழ் ஸ்டுடியோவை தொடர்புக் கொண்டு உங்களின் மற்றத் தகவல்களை பெற்றுக் கொள்வார்கள்.
புதிதாக குறும்படம் / ஆவணப்படம் எடுக்கும் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கானத் தகவல்களை தமிழ் ஸ்டுடியோ விலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆவணப்படம் எடுக்கும் கலைஞர்கள் தங்கள் ஆவணப்படக் கருவுக்கான மேல் தகவல்கள் மற்றும் ஆய்வுத் தகவல்களையும் எங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். புதிதாக வரும் கலைஞர்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகள் மற்றும் வசதிகள் செய்துக் கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ எப்போதும் முன்னணியில் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்தப் பகுதியில் குறும்படங்கள் / ஆவணப்படங்களுக்கான முழு தொழில்நுட்ப விவரங்களும், (படம் தொடங்கி விற்பனை செய்வது வரை) உங்களுக்கு எளிதில் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நீங்கள் தேடும் விவரங்கள் இல்லையெனில் தமிழ் ஸ்டுடியோவை தொடர்புக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் விவரங்களும் உடனே வழங்கப்படும்.
கேமிரா கிடைக்குமிடம், கேமிராவின் ஒருநாள் வாடகை, மேலும் படங்கள் எடுக்க உதவும் அனைத்து விதமான சாதனங்களும் அவற்றின் வாடகை போன்ற தகவல்களும், உங்கள் படத்திற்கான முழு பட்ஜெட் மற்றும் தேவை இல்லாத செலவுகளைக் குறைக்கும் விதம் போன்றவற்றிக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
கலைஞர்களே! வாருங்கள்! உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் திறமையை உலகம் உணர இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
புதியப் படைப்பாளிகளே! அச்சத்தை விட்டு புதிய சரித்திரம் படைக்க வாருங்கள். உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மக்களை சென்றடைய தமிழ் ஸ்டுடியோ ஒரு பாலமாக தன்னை அமைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
விவரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
|