ஜுலை மாத மடல் போட்டி பரிசளிப்பு விழா.
 |
தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவித்த முதல் மாத மடல் போட்டி இனிதே நடைபெற்றது. அதற்கான பரிசளிப்பு விழாவும் குறும்பட வட்டத்துடன் நடைபெற்றது. கோவையை சேர்ந்த நா.கி. பிரசாத் அவர்கள் இந்த மாதத்தின் சிறந்த மடல் போட்டிக்கான பரிசுத்தொகையை பெற்றார். இந்தப் பரிசுத் தொகையை சிவகாசியை சேர்ந்த வி.ஆர்.பி. மனோகர் அவர்கள் ஸ்பான்சர் செய்தார். |
பரிசினை எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் வழங்கினார். இந்த மாதம் முதல் மடல் போட்டி குறுகிய நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டு நடைபெற்றதால் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மடல்களை தேர்ந்தெடுக்க இயலவில்லை. எனவே அடுத்த மாதம் முதல் மூன்று இடங்கள் பெற்ற மடல்களும் அறிவிக்கப்படும். தேநீர் விருந்தும் அடுத்த மாதம் முதல் தவறாமல் நடைபெறும். சிரமத்திற்கு வருந்துகிறோம்.
(ஸ்பான்சர் வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். ஸ்பான்சர் ஆங்கில வார்த்தை நீக்கப்படும்.)
அடுத்த மடல் போட்டிக்கான அறிவிப்பு விரைவில்.
|