|
தினமணி மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2009 இணைந்து நடத்தும் குறும்படப் போட்டி. - கடைசித் தேதி: ஜூன் 10, 2009.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் பன்னிரண்டாவது ஆண்டாக 03-07-2009 முதல் 12-07-2009 முடிய நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியை ஒட்டித் தினமணி மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவும் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டிக்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
பரிசுகள்
முதல் பரிசு: ரூபாய் 15000/-
இரண்டாம் பரிசு: ரூபாய் 10,000/-
மூன்றாம் பரிசு: ரூபாய் 5,000/-
ஐந்து ஆறுதல் பரிசுகள்: ரூபாய் 1,000
போட்டிக்கான விதிமுறைகள்:
1. குறும்படங்கள் தமிழின் பண்பாட்டு மேன்மை, சமூதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள், போன்றவற்றை பிரதிப்பலிப்பதாக இருத்தல் வேண்டும்.
2. குறும்படங்கள் 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. குறும்படங்கள் D.V.D. அல்லது V.C.D. வடிவில் தரமானதாக இருக்க வேண்டும்.
4. இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கனவே பரிசுப் பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கிய காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இயக்குனரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன.
6. போட்டியில் கலந்துக் கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
7. தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 2009 இல் திரையிடப்படும்.
8. குறும்படங்கள் 01-01-2007 க்குப் பின்னர் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
9. போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள் அனுமதிக்கப் பட மாட்டா.
10. போட்டி முடிவுகள் ஜுலை முதல் வாரம் தினமணி நாளிதழில் வெளியிடப்படும்.
11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
13. பரிசுகள் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 2009 இல் வழங்கப்படும்.
14. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: ஜூன் 10, 2009.
குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர் - நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி,
ஜவஹர் அறிவியல் கல்லூரி,
நகர்க்கூறு - 14, நெய்வேலி - 607 803.
|