’த கிட்’ தொடர்ச்சி….
படம் : த கிட்
வருடம்: 1921
நடிகர்கள்: சாப்ளின், எட்னா, ஜாக்கி கூகன் (சிறுவன்)
இயக்கம்: சாப்ளின்.
நேரம் : 60 நிமிடங்கள்.
தயாரிப்பு : பர்ஸ்ட் நேஷனல் கார்ப்பெரேஷன்.
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன், வளர்ப்பு தந்தை.
 |
சாப்ளின் நிறைய பணம் சம்பாதித்தாலும், அதனை மீண்டும் திரைபடங்களுக்கே செலவு செய்தார். அதே சமயம் அவர் படம் உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்து வசூலை அள்ளியது. சாப்ளின் சகோதரர் சிட்னி, இந்த விஷயத்தில் சாப்ளினுக்கு பேருதவியாக இருந்தார். இதை சொல்ல முக்கிய காரணம், த கிட் படத்தை தயாரித்து முடித்ததும், வெளியீட்டு நிறுவனம் சாப்ளினுக்கு வெறும் இரண்டு ரீல்களுக்கான பணத்தை மட்டுமே தருவோம் என பிடிவாதம் பிடித்தது.
|
உண்மையாக த கிட் படம் 8 ரீல்கள். இதனால் கோபம் கொண்ட சாப்ளின் படத்தின் ரீல்களை எடுத்து சென்றுவிட்டார். பின்பு ஒரு வழியாக 8 ரீல்களுக்கான பணமும், சாப்ளினுக்கு சிறப்பு ஊதியமும் கொடுத்தனர். அதற்க்கு முக்கிய காரனம் சிட்னியின் பேச்சு திறமை.
சாப்ளின் வாழ்க்கையில் பண பிரச்சனை வராமல், அவருக்கு உறுதுணையாக இருந்தாவர் சிட்னி. மீண்டும் த கிட் படதிற்க்கு வருவோம்.
இதில் ஜாக் கூகன் எனும் சிறுவன் அருமையாக நடித்திருந்தார். என்று மேலே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. அதற்கு சாப்ளினின் பிடிவாதம் ஒரு காரணம் என்றாலும், சிறுவனை பயமுறுத்தியது இன்னொரு காரணம்.
உதாரணத்திற்கு, த கிட் படத்தில் மிக முக்கிய காட்சியில் சாப்ளினும் அந்த சிறுவனும் அழுவது நம் நெஞ்சை உருக்கும். உண்மையில் அந்த சிறுவனுக்கு அழுகை வரவில்லை, பின்பு அவன் தந்தை ஒழுங்காக அழவில்லை என்றால் உண்மையாகவே குழந்தைகள் நல காப்பகத்திற்க்கு அனுப்பிவிடுவேன் என்று பயமுறுத்தினார். அதற்கு அழ ஆரம்பித்த சிறுவன்தான். ஷாட் முடிந்தும் அழுதுக்கொண்டிருந்தான்.
இப்பொழுது கூட ஏதாவது ஒரு உலகப் பட விழாவில் சாப்ளினின் இந்த படத்தை கட்டாயம் பார்க்கலாம். உங்கள் குழந்தைகள் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்ப்பார்கள். மோசமான படங்களுக்கு பதில் சில நல்ல படங்களை காண வைப்பது நம் கடமை. அதிலும் த கிட் படத்தை காண வைப்பது நமக்கு பெருமை.
ஒரு வழியாக த கிட் வெற்றி பெற்ற உற்சாகம் சாப்ளினை லண்டன் செல்ல வைத்தது. ஓய்வாக ஒரு சிறு பயணம் மேற்க்கொண்டார். எங்கு சென்றாலும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பு.
அதே மாதிரி சாப்ளின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு வேடிக்கையான சம்பவம். ஒரு முறை சாப்ளின் கலிபோர்னியாவில் தங்கியிருந்தபோது, அங்கு அன்றிரவு சாப்ளின் 'மாறுவேட போட்டி’ நடக்க போவதை அறிந்தார்.. சாப்ளினுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அவரும் போய் அந்த போட்டியில் கலந்துக்கொண்டார். பல பேர் சாப்ளின் போல் வேடமனிந்து நடித்து, நடந்து காட்டினர். சாப்ளினும் ஒருவராக அவர் போலவே நடித்தார், நடந்தார். சொன்னால் நம்புங்கள் சாப்ளினுக்கு அந்த போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்து.
“Chaplin once partcipated in ‘Chaplin look alike contest’ and the judgs awarded second prize’. இந்த வாசகம் என் அறையில் இருக்கும். நான் பலருக்கும் சொல்வது. உங்கள் திறமையை நீங்கள் தான் முதலில் பரிசோதித்திக்கொள்ள வேண்டும் இன்னொருவரை பரிசோதிக்க சொன்னால் சாப்ளின் நிலமை தான். இதை இப்படியும் சொல்லலாம். மற்றவர் உங்களை குறைத்து மதிப்பிட்டால்.. விடுங்கள்.. அவர்கள் மதிப்பீடு தவறாகவும் இருக்கலாம்.
 |
மீண்டும் பல 2 ரீல் படங்களை இயக்கத் தொடங்கினார் சாப்ளின். அதில் மீண்டும் சாப்ளினின் வேடிக்கைகள் நிறைந்த இன்னொரு 2 ரீல் திரைப்படம் ‘தெ பே டே(The Pay Day)’. மோசமான தன் மனைவியிடமும் கருணையே இல்லாத தன் முதலாளியிடமும் சாப்ளின் மாட்டிக்கொண்டு முழிக்கும் கதை. உங்கள் வயிரை பதம் பார்க்கும். குறிப்பாக சாப்ளின் தன் வீட்டிற்க்கு செல்ல வண்டிக்காக காத்திருக்கும் அந்த காட்சி. |
ஒரு வழியாக First National உடனான காண்ட்ராக்ட் முடிவுக்கு வர, சாப்ளின் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்தார். அதாவது சொந்தமாக சினிமா தயாரிப்பு மற்றும் வெளியிடும் நிறுவனத்தை தொடங்கினார்.
சாப்ளீனும் அவரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரிச்சர்ட் பேர்பேங்க்ஸ் சொந்தமாக நிறுவனம் தொடங்குவதை பற்றி நிறையவே பேசினார்கள். ஆனால் காலம் கைகூடவில்லை.
நாட்கள் ஆக ஆக தயாரிப்பு நிறுவனங்களும், வெளியீடு நிறுவனங்களும் படைப்பாளிகள் மீது தங்கள் சர்வாதிகாரத்தை காட்டத் தொடங்கினார். இது சாப்ளின் மாதிரியான படைப்பாளிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உருவாக்கும் படங்களில் இது வேண்டும். இது வேண்டாம் என கூறுவதும், அவர்களின் சம்பளத்தை குறைப்பதுமாக, அவர்களின் அதிகார போக்கு பிடிக்காமல் நிறைய நடிகர்கள் தடுமாற, சாப்ளினுக்கும், ரிச்சர்டுக்கும் இது சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. உருவானது யுனைடட் ஆர்டிஸ்ட் நிறுவனம்.
சாப்ளின், ரிச்சர்ட் பேர்பேங்க்ஸ், கிரிபித், மேரி பிக்போர்ட் என்ற நான்கு நடிகர்களும் ஆளுக்கு 20 சதவீத பங்குகளுடணும், வில்லியம் கிப்ஸ் என்ற வழக்குரைஞர் 20 சதவீத பங்குடனும் அந்நிறுவனத்தை தொடங்கினர். அந்நிறுவனத்திற்காக சாப்ளின் இயக்கிய முதல் படம் ‘A women in paris’.
இந்தப்படத்தில் சாப்ளின் ஒரு காட்சியில் மட்டும்தான் வருவார். அதுவும் சாப்ளின் என்று யாருக்கும் தெரியாது. முழுக்க முழுக்க எட்னாவிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை கதாநாயகியாக்கி சாப்ளின் இயக்கிய திரைப்படம். அனைவராலும் பாராட்டப்பட்டாலும் வணிக வெற்றி பெறவில்லை. இந்த படத்தை பற்றி விரிவாக பின்பு பார்க்க்லாம்.
அதற்க்கு பின்பு சாப்ளின் இயக்கிய இன்னொரு திரைப்படம் ‘The Gold Rush’. உண்மையில் அப்பொழுது பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆனால் சாப்ளின் பிடிவாதமாக பேசாப் படங்களையே எடுத்தார். வழிப்போக்கன் என்னும் அவரின் கதாப்பாத்திரம் பேசினால் அதன் உண்மை கவித்துவம் குறைந்துவிடும் என சாப்ளின் நினைத்தார்.
சொல்லபோனால் அந்த வழிப்போக்கன் கதாப்பாத்திரம் ஒரே படத்தில் மட்டும் தான் பேசியது அது ‘The Great Dictator’. அதனால் 'கோல்ட் ரஷ்' திரைப்படம் பேசவில்லை. கவித்துவமான காதலும், அழுகும் நகைச்சுவையும் நிறைந்த படம் கோல்ட் ரஷ். அதைப் பற்றி அடுத்த வாரம்.
’த கிட்’ தொடரும்….
சாப்ளின் வருவார்....