வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
1  
1  
 
  சார்லி சாப்ளின்
 

The Kid

படம் : த கிட்
வருடம்: 1921
நடிகர்கள்: சாப்ளின், எட்னா, ஜாக்கி கூகன் (சிறுவன்)
இயக்கம்: சாப்ளின்.
நேரம் : 60 நிமிடங்கள்.
தயாரிப்பு : பர்ஸ்ட் நேஷனல் கார்ப்பெரேஷன்.
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன், வளர்ப்பு தந்தை.

’த கிட்’ சாப்ளின் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம். காரணம், இது தான் சாப்ளின் முதலில் எடுத்த முழு நீளத் திரைப்படம் (ஒரு மணி நேரம்). சாப்ளின் தன் முதல் திருமணத்தால் ஏற்பட்டக் கசப்பான அனுபவத்தையும், தன் முதல் குழந்தையின் இறப்பை பற்றிய நினைவையும் மறக்க உதவியாக இருந்தது ‘த கிட்’. இந்த முறை சாப்ளின் தேர்ந்தெடுத்த களமும் ஒரு தந்தைக்கும், மகனுக்குமான பாசத்தை பற்றியது. இந்தப் படத்தின் மூலம் சாப்ளின் நினைத்த மாத்திரத்தில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும், அழ வைக்கவும் முடியும் என்பதை நிருபித்தார்.

கதை சுருக்கம்:
எட்னா, தன்னால் வளர்க்க முடியாமல், தனக்கு முறையற்று பிறந்தக் குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறாள்.

சம்பந்தமே இல்லாமல் நாடோடியான சாப்ளினிடம் அந்த குழந்தை கிடைக்கிறது. ஐந்து வருடங்கள் கழித்து அந்த சிறுவனுக்கும், சாப்ளினுக்குமான உறவு வளருகிறது. அந்த சிறுவன் சாப்ளினின் குழந்தை இல்லை என்பதை அறிந்து அதை அவரிடமிருந்து பிரிக்க முயற்சிக்க, சாப்ளின் அந்த சிறுவனை மீட்டாரா? என்பது தான் மீதி கதை.

முழு நீளத் திரைப்படம்:

இந்தப் படத்தை பற்றி எழுதுவது சாதாரனமானதல்ல, இன்றளவும் உலக சினிமா வரலாற்றில் ஒரு குறிப்பிடும்படியான படமாக இந்தப் படம் உள்ளது. திரைக்கதையில் தொடங்கி படமாக்குதல், நடிப்பு, இசை என அனைத்து துறைகளிலும் இந்தப் படம் ஒரு பாடமாக இருப்பது இந்த படத்தின் சிறப்பு. சாப்ளினின் சிறப்பும் தான்.

இந்த படத்தின் பல காட்சிகளில் ’மாண்டேஜ்’ என்ப்படும் ஒரு யுக்தியை சாப்ளின் அப்பொழுதே முயற்சி செய்திருப்பார். இருந்தாலும் முழுமையாக மாண்டேஜ் முறையை பின்னாட்களில் ஐஸன்ஸ்டையின் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

படத்தின் ஆரம்பத்தில் போடப்படும் கதை விளக்கத்திற்கான அட்டையில் இப்படி எழுதபட்டிருக்கும், “இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கலாம், ஒருவேளை கண்ணீரும் சிந்தவைக்கலாம்”. இந்தப் படம் முழுமையாகவே நகைச்சுவையும், சோகமும் கலந்த திரைப்படம்.

எட்னா முதல் காட்சியில் ஒரு இலவச மருத்துமனையில் இருந்து கைக் குழந்தையுடன் வெளியேறுவார், அப்பொழுது கம்பிகள் போன்றிருக்கும் கதவை திறந்து செவிலி எட்னாவை வெளியே அனுப்புவார், பார்ப்பதற்கு சிறையில் இருந்து வெளியே வருவது போலிருக்கும். எட்னா குழந்தையுடன் அறிமுகமாகும் போது வரும் விளக்க அட்டையில் ”இவளின் ஒரே பாவம் – தாய்மை” என்று காட்டபடும். ஆதரவில்லமல் பெறப்படும் குழந்தையின் நிலையையும், அந்த அன்னையின் நிலையையும் இதைவிட சிறப்பாக ஒரு காட்சியில் சொல்ல முடியாது. சாப்ளின் இந்தப் படத்தை ஒரு சுயசரிதையாகவே எடுத்தார். பல காட்சிகள் சாப்ளின் தன் சிறுவயதில் தன் தாயருடன் கழித்த ஏழ்மை நாட்கள். இங்கு தன் தாயரின் பாத்திரத்தை சாப்ளின் ஏற்றிருந்தார்.

எட்னா தன் குழந்தையை ஒரு காரில் விட்டுவிட்டு வருவார் அந்த காட்சியின் தொடராக ஒரு யேசு நாதரின் சிலை காட்டபடும். இந்தப் படத்தில் சாப்ளினின் அறிமுகம் வழக்கமான நகைசுவையுடன், ஒரு சேரியில் கிழிந்த உடை அனிந்த ஏழையாக வருவார். தன்னிடம் எதிர்பாரமல் வந்த குழந்தையை தொலைக்க பெறும் பாடுபடுவார், ஒரு கட்டத்தில் சேற்றில் வீச கூட யோசிப்பார்.

பின்பு எட்னா எழுதிய கடிதம் கிடைத்தவுடன், பறிவுற்று அந்தக் குழந்தையை வளர்க்க தீர்மானிப்பார்.  சிறுவனாக நடித்திருந்த ஜாக் கூகன், நடிப்பில் தன் முத்திரையை பதித்தார். அனைவரும் இன்றளவும் வியக்கும் ஒரு விஷயம் கூகனின் நடிப்பு. அந்த அளவிற்கு இயல்பு. இந்தப் படத்தில் சாப்ளின் ஒரு கனவுக் காட்சியை வைத்திருப்பார். சந்தோஷமாக இருக்கும் மக்களிடையே பொறாமை என்னும் அரக்கன் புகுந்து அதனால் மக்கள் அடித்துக்கொள்வார்கள்.

அதே மாதிரி, பணக்காரியாகிவிட்டப் பின் எட்னா சேரியில் உள்ள குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் கொடுக்க வருவார். அப்பொழுது காட்டபடும் விளக்க அட்டையில் “தானம் – பலருக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு கடமை” எனக் காட்டபடும். இது அக்மார்க் சாப்ளினின் முத்திரை.

சிறுவனை அதிகாரிகள் கடத்தி செல்ல, அப்பொழுது சிறுவன் கெஞ்சுவதும், மீட்க வந்த சாப்ளின் அன்பு முத்தம் பொழியும்போது அந்தக் காட்சியை பார்க்கும் யாரும் கண் கலங்கிவிடுவார்கள். நாடோடி என்னும் கதாபத்திரம் வென்ற இடம் இது தான். சாப்ளின் தன்னால் நினைத்த மாத்திரத்தில் ரசிகர்களை சிரிக்கவும் வைக்க முடியும், அழவும் வைக்க முடியும் என்று நிற்பித்ததும் இங்கு தான்.

’த கிட்’ தொடரும்….

சாப்ளின் வருவார்....

    அடுத்து



thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.