வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
 
  சார்லி சாப்ளின்
 

செல்லுலாய்ட் கலகக்காரன்

எஸ்னி ஸ்டோயொவில் சாப்ளினுக்கு கனிசமான பணம் வழங்கபட்டது. பெரும்பாலான எஸ்னி திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும், கீ ஸ்டோனில் வெற்றி பெற்ற பல பழைய படங்களின் கதை அம்சம் கொண்டவையாக இருந்தது. ஒரு படம் வெற்றி பெற்றவுடன் அதே மாதிரி படங்கள் வருவது இயல்பு தான் என்றாலும், ஒரு கலைஞனுக்கோ அல்லது ஒரு படைபாளிக்கோ அது ஏற்றதல்ல.

விதவிதமான கதாபத்திரங்கள், வித்தியசமான படங்கள் தாம் ஒரு படைப்பாளியின் கனவாக இருக்கும். சாப்ளினோ பிறவி கலைஞன், சினிமாவை தன் உயிராக நினைப்பவன், எந்நேரமும் புதிய புதிய நகைச்சுவை காட்சிகள் பற்றி நினைத்துக்கொண்டிருப்பவர். அதற்கு நேர்மாறானவர்கள் மக்களும், சினிமா வியபாரிகளும். சாப்ளினின் Tramp ஒரு வெற்றிகரமான கதாப்பாத்திரம் ஆகிவிட்டது. அதனால் சாப்ளின் புதிய கதாப்பாத்திரங்கள் ஏற்க வாய்பில்லாமல் போனது. படங்களும் பழைய படங்கள் சார்ந்தே வரத் துவங்கியது.

Chaplin's Family
அதே நேரம் சாப்ளின் நகைச்சுவையின் மன்னராக மாறியிருந்தார். சாப்ளின் படம் போட்ட தொப்பிகள், பொருட்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இன்னொரு பக்கம் சாப்ளின் படங்கள் உலக அளவில் அவருக்கு ரசிகர்களை உருவாக்கி கொண்டிருந்தது. அதே நேரம் அவருக்கு ஒரு புது கதாநாயகியும் கிடைத்தார். அவர்தான் எட்னா. சாப்ளினுடன் அதிகமான படங்களில் நடித்தவர்.
இப்பொழுது சாப்ளின் மில்லியன் டாலர் நடிகராக மாறியிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த மில்லியன் டாலரை எஸ்னி கொடுக்க முன் வராததால் சாப்ளின் ஒப்பந்தம் முடிந்ததும், இன்னொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட வேண்டியதாக இருந்த்து. இப்படியாக எஸ்னியுடனான உறவு முடிவுக்கு வந்தது.

எஸ்னியில் இருக்கும் போது சாப்ளின் நடித்ததில் குறிப்பிடும்படியான படம் “ A Woman” ஏனென்றால் இதில் சாப்ளின் பெண் வேடமிட்டு நடித்திருந்தார்.

எஸ்னியில் சாப்ளின் நடித்த படங்கள் பின்வருமாறு,

  1. His New Job
  2. A Night Out
  3. The Champion
  4. In the Park 
  5. A Jitney Elopement
  6. The Tramp 
  7. By the Sea
  8. Work 
  9. A Woman 
  10. The Bank 
  11. Shanghaied 
  12. A Night in the Show
  13. Burlesque on Carmen
  14. Police
  15. Triple Trouble  (படம் முடிக்கபடவில்லை)

அதை அடுத்து ஒரு மில்லியன் டாலர்கள் சம்பாதித்த இளம் பணக்காரராக சாப்ளின் கைக்கோர்த்தது மியுட்சுவல் பிலிம் கார்பெரஷனுடன் (இனி மியுட்சுவல்). சாப்ளின் தான் மிக சந்தோஷமாக இருந்த காலம் மியுட்சுவல் காலங்களில் தான் என பின்னாளில் குறிப்பிடும் அளவு சந்தோஷமாக வேலை பார்த்தார்.

Chaplin's Family
பொதுவாக சாப்ளின் நீண்ட நாட்களுக்கு படம் எடுப்பார், ஒரு காட்சி தனக்கு திருப்தி ஏற்படும் வரை எத்தனை தடவை வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானலும் எடுத்துக்கொண்டேயிருப்பார். இது பட தயாரிப்பாளர்களை கோபப்படுத்தும், இருந்தாலும் சாப்ளினின் படம் கொடுக்கும் வெற்றியும் பணமும் அவர்களை முனங்க மட்டுமே செய்யும்.

உண்மையாகவே இப்பொழுது எடுத்துப் பார்த்தல் சாப்ளினின் மியுட்சுவல் திரைப்படங்கள் அவருடைய முந்தைய படங்களைவிட தனித்தே இருக்கின்றன.அதே சமயம் அவர் மனதிலிருந்த விளிம்பு நிலை மக்களை பற்றிய எண்ணங்களும் வெளிப்படத் தொடங்கின. இதுவே பின்னாளில் இவர் கம்யூனிஸ்ட் ன்று முத்திரைக் குத்தவும் காரணமாக இருந்தது.

தன் படங்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த மக்களை, அந்த சிரிப்பின் வழியே சிந்திக்க செய்யும் காட்சிகள் சாப்ளினின் படங்களில் இடம்பெற தொடங்கின. அப்படிபட்ட படங்களில் குறிப்பிட பட வேண்டிய படங்கள் Easy Street & The Immigrant.

மியுட்சுவலில் சாப்ளின் பணியாற்றிய படங்கள் மொத்தம் 12. பின்னாளில் பணப் பிரச்சனையுடன் இன்னும் கொஞ்ச பிரச்சனைகள் இணைந்துக்கொள்ள, இவர்கள் பிரிய நேர்ந்தது. மியுட்சுவல் காலத்தில் சாப்ளின் பணியாற்றிய படங்கள் பின்வருமாறு,

  1. The Floorwalker
  2. The Fireman 
  3. The Vagabond
  4. One A.M. 
  5. The Count
  6. The Pawnshop 
  7. Behind the Screen 
  8. The Rink 
  9. Easy Street 
  10. The Cure 
  11. The Immigrant
  12. The Adventurer

அடுத்த வாரம் சாப்ளினின் இரண்டு முக்கிய படங்களை, அலசி ஆராயலாம். இனி இந்த தொடர் சாப்ளினின் படங்களை தனித்தனியாக எடுத்து ஆராயத் தொடங்கும். 

சாப்ளின் வருவார்....

    அடுத்து



thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.