A King in New York
பெயர் : எ கிங் இன் நியூயார்க்
ஆண்டு: 1956
நேரம்: 124 நிமிடம்.
இயக்கம்: சார்லி சாப்ளின்
நடிகர்கள்: சாப்ளின், மைக்கல் சாப்ளின்
இந்த படத்தை பற்றி சொல்வதற்க்கு முன் சில விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கர்களை அந்த நாட்களில் அதிக பட்சமாக பயமுறுத்தியது பேயோ பிசாசோ அல்ல. கொள்ளை நோய்கள் அல்ல. அதைவிடவம் அவர்கள் மோசமாக கருதியது கம்யூனிஸத்தை. அமெரிக்காவால் எப்போதுமே காம்யூனிச அரசியலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முடிந்த வரை தங்கள் நாட்டில் கம்யூனிஸம் நுழைந்துவிட கூடாது என்பதில் அவர்கள் உறுதியாகவே இருந்தார்கள்.
 |
ரஷ்யாவில் கம்யூனிஸம் அரசியலை ஆக்கிரமித்தபோது அமெரிக்கர்கள் உஷாராகவே இருந்தார்கள். ஆனால் இராணடாம் உலக போரில் ஹிட்லர் எனும் மகா சக்தியை எதிர்க்க, வேண்டா வெறுப்பாக கைக்கோர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானர்கள். இரண்டாம் உலக போர் முடிந்ததும் முதல் வேலையாக காம்யூனிச எதிர்ப்பை முன் வைத்தார்கள். உளவு துறைக்கும் அதே வேலை. மக்களுக்கும் அதே வேலை அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கூட அதே வேலை. ரஷ்யாவுடன் நடந்த பனிப்போர் காலங்களில் அமெரிக்காவில் மெக்கார்த்தி என்ற ஒரு செனடரை (நம்ம நாட்டு எம்பி மாதிரி) பிடித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியால் உருவாகி வரும் கம்யூனிஸ்ட்டுகளையும், அவர்களுக்கு துணைப் |
போவோரையும் பிடித்து, அதற்காக தனியாக நியமிக்கபட்டிருந்த நீதி மன்றத்தில் விசாரிக்கபட்டு தண்டிக்கப்படும் பொறுப்பை வழங்கினர்.
ஆனால் மெக்கார்த்தி கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்கிரேன் பேர்வழி என்று சகட்டு மேனிக்கு எல்லார் மீதும் பழி போட தொடங்கினார். அதிகாரம் தலைக்கு ஏறி இன்னார் என்றில்லாமல் அணைவரையும் குற்றம் சாட்ட தொடங்கினார். உதாரணம் ‘சிவப்பாக டை’ அணிபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் எனும் அளவிற்கு அவர் அழிச்சாட்டியம் தொடர்ந்தது.
சாப்ளின் ஏற்கனவே இடதுசாரி கொள்கைகளை கொண்டவர். அதை படத்தில் வேறு தயவு தாட்சினயமின்றி வெளிபடுத்தியவர். மெக்கார்த்தி சாப்ளினை உண்டு இல்லையென்று செய்தார். சாப்ளின் உடலுறவு கொள்ளும் சப்தங்களை ஒட்டு கேட்டு ரிக்கார்ட் செய்யும் அளவுக்கு முற்றியது.
சாப்ளின் நாட்டை விட்டே வெளியேற்றபட்டார்.
அவர் வெளியேறியவுடன் எடுத்த முக்கியமான படங்களில் ஒன்று ’எ கிங் இன் நியுயார்க்’. இந்த படம் அமெரிக்காவில் பெரிய அளவு வெற்றிபெறவில்லையென்றாலும், ஐரோப்பிய நாடுகளில் நல்ல வசூலை கொடுத்தது.
கதை சுருக்கம்:
 |
அரசன் ஷடவ் (சாப்ளின்) தன் நாட்டில் நடக்கும் புரட்சியால் வெளியேற்றப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் நியுயார்க் நகருக்கு செல்கிறார். அங்கு பிரதம மந்திரி சாப்ளினை ஏமாற்றி அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட, சாப்ளின் தான் கொண்டுவந்துள்ள ஒரு அணு ஆயுத திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். |
நடுவே, தன் அன்றாட வாழ்க்கைக்கு பணம் சம்பாதிக்க விளம்பரங்களில் நடிக்கிறார். அங்கு புகழடைகிறார். அதன் நடுவே ஒரு இளம் சிறு வயது மேதையான ரூபார்ட் எனும் சிறுவனை சந்திக்கிறார். ரூபார்ட்டின் தந்தையும் தாயும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவி செய்து போலிஸடம் சிக்குகிறார்கள்.
அந்த சிறுவனை காப்பாற்றும் சாப்ளின் தன்னுடைய அனைத்து திட்டங்களும் தோலிவியடைய வேறொரு நாட்டிற்க்கு சென்று நிம்மதியாக வாழ முற்படுகிறார்.
கம்யூனிஸ்ட்:
இந்த படத்தில் சாப்ளின் அமெரிக்காவை சகட்டு மேனிக்கு விமர்சித்தார். இந்த படத்திலும் சாப்ளின் தனது சொந்த வாழகையின் சில முக்கிய சம்பவங்களை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருந்தார்.
இதில் அமெரிக்காவின் போலியான வாழ்க்கை முறை, விளம்பரங்கள், கம்யுனிஸ்ட் எதிர்ப்பு என்ற பெயரில் நடக்கும் அதிகார அடக்குமுறை, கருத்து சுத்ந்திரமின்மை என்பதோடு நிற்க்காமல், அமெரிக்க திரைப்படங்களையும் விமர்சித்தார்.
உதாரணம், சாப்ளின் பார்க்க போகும் ஒரு திரைப்படத்தின் டிரையிலரில் இப்படி சொல்லுவார்கள். “ஒரு திரில்லர் படம், மோசமான கொலைக்காரன், கவர்ச்சியான பெண், அவளை காமுகித்து சொலை செய்கிறான். அமெரிக்க திரைப்பட வரலாற்றில் முதல் குடும்ப சித்திரம், குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்”.
அங்கு ஆரம்பித்தவர், மெக்கார்த்தியிச்ட்சத்தை கொன்றார். இந்த படத்தில் இன்னொரு சிறப்பு சாப்ளின் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான ’ஹாம்லட்’ கதாப்பாத்திரத்தை போன்று ஒரு சின்ன நடிப்பை இதில் வெளிபடுத்தியிருந்தார்.
 |
அமெரிக்க அதிகார முறையையும், கம்யூனிஸ ஒழிப்பையும் விமர்சித்து திரைப்படத்தின் இறுதியில் ஒரு நாள் இதற்க்கு விடிவு வரும் என முடித்திருந்தார். சிந்தியுங்கள். அமெரிக்காவை தைரியமாக விமர்சிக்க முடியுமா? சாப்ளினால் முடியும் அவர் கலககாரர், சினிமா பிழைப்புக்கும் புகழுக்கும் மாத்திரம் உபயோகிக்காமல், தன்னுடைய கருத்தை சொல்லவும் உபயோகித்தார். |
தன்னுடைய கருத்து எதுவானாலும் அதை சொல்ல தயங்காதவர். அதைவிடவும் அஞ்சாதவர். ஹிட்லரையே விமர்சித்தவர். இவருக்கு அமெரிக்காவெல்லாம் தூசி.
தன்னுடைய கருத்திலும், மக்களின் நலனிலும் அக்கரைக்கொள்ளும் கலைஞர்கள் மிக சிலரே. அவர்களுள் சாப்ளின் முதன்மையானவர்.
அத்துடன் நின்றாரா? ரஷியா கொடுத்த பரிசை வாங்கினார், பணத்தை ஏழைகளுகு கொடுத்தார். அமெரிக்காவின் கண்டனங்களை சம்பாத்திதாலும் தன் குடும்பத்தாருடன் சுவிஸில் அமைதியாக வாழ்ந்தார்.
தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாள்வரைக்கூட தன் படங்களுக்கு இசை கோர்ப்பதில் நேரத்தை செலவிட்டார்.
நல்ல கலைஞனை எத்தனை நாள் மறைக்க முடியும். உலகின் மிக சிறந்த வாழ் நாள் சதனையாளர் விருதுகள் அவரை தேடி வந்தன. குறிப்பானது கான் திரைப்பட விருது ஒன்று இன்னொன்று ஆஸ்கர் விருது.
சினிமாவிற்கு சேவை செய்ததற்க்கும் மிக சிறந்த கலைஞர்களுக்கெல்லாம் வழங்கப்படும் இந்த சிறப்பு ஆஸ்கர் விருது சாப்ளீனுக்கு வழங்கபட்டது.
துரத்தியடிக்கப்பட்ட அமெரிக்கா தன் தவறை திருத்திக்கொண்டு அவரை மீண்டும் அமெரிக்காவிற்க்கு அழைத்தது.
அமெரிக்காவில் சாப்ளினின் அந்த உணர்ச்சிகரமான நாட்கள் அடுத்த வாரம்..
சாப்ளின் வருவார்....