வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  சார்லி சாப்ளின்
 

Monsieur Verdoux

பெயர்: மோன்ஷ்யூர் வெர்டக்ஸ்
ஆண்டு: 1947
நேரம்: 124 நிமிடம்
இயக்கம்: சார்லி சாப்ளின்
நடிகர்கள்: சாப்ளின், மேடி கோரல், ராபர்ட் லிவிஸ்

உலக பொருளாதார நெருக்கடியால் வேலையிழக்கும் ஹென்றி வெர்டக்ஸ் (சாப்ளின்) தன்னுடைய ஊனமுற்ற மனைவியையும், குழந்தையையும் காப்பாற்ற ஒரூ மோசமான உத்தியை கையாளுகிறார்.தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் அதன் பொருட்டு ஊர் ஊராக சுற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். ஆனால், அவர் பணம் சம்பாதிக்க மேற்கொள்ளும் முறையோ, பணக்கார விதவைகளை காதாலித்து அவர்களின் கணவன் போல் நடித்து அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த பின் அவர்களை கொலை செய்துவிடுவார். ஒரே மாதிரியான கொலைகள் பிரான்ஸ் முழுவதும் அதிகரிக்க உஷாரான போலிஸார் கொலைக்காரனை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.

ஒரு சிறு கவனக்குறைவால் சாப்ளின் மாட்டிக்கொண்டு அதற்கான தண்டனையும் அனுபவிக்கிறார்.

சாப்ளின் ஒரு கொலைக்காரன்:

ட்ராம்ப் கதாபாத்திரங்களில் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்த சாப்ளின், தன்னுடைய வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டால் அமெரிக்காவில் அப்போது பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. சினிமா உலகமும் டாக்கிகளுக்கு மாறி, இவரே ’தெ கிரேட் டிக்டேடரில்’ அதை ஏற்றுக்கோண்டார் அடுத்தது என்ன படம் என யோசித்து கொண்டிருந்த போது ஆர்ஸன் வெல்ஸ் (இவரும் புகழ் பெற்ற டைரக்டர் தான், விரைவில் இவரை பற்றியும் பார்ப்போம்) மூலம் ஒரு செய்தி வந்த்து.

அப்பொழுது பிரான்ஸ் முழுவதும் இருந்த பொருளாதார நெருக்கடியால் , பல விதவை பெண்களை கொன்று அவர்களின் சொத்துக்களை அபகரித்த ஒரு சீரியல் கொலைக்காரனை பற்றிய செய்தியை வைத்து ஆர்ஸன் வில்ஸ் ஒரு கதையமைத்திருந்தார். முதலில் அந்த படத்தை ஆர்ஸன் வில்ஸ் இயக்க சாப்ளின் நடிக்கப் போவதாகவே திட்டமிருந்தது. ஆனால் சாப்ளினுக்கோ இன்னொரு டைரக்டர் என்றால் சிறிது தயக்கம் அதனால் ஆர்ஸன் வில்சிடமிருந்து அந்த திரைக்கதை முழுவதுமாக வாங்கி, தனக்கு தகுந்த மாதிரி சிறு சிறு மாற்றங்களை செய்து அவரே இயக்குவது என முடிவு செய்தார்.

ஆர்ஸன் வில்ஸின் பெயரை மூலகதை எழுதியவர் என்ற குறிப்புடன் படம் வெளிவந்தது. இதில் தன்னை விட்டுப் பிரிந்திருந்த பவுலாவிற்கு ஒரு சிறு கதாபாத்திரம் கொடுக்க முன்வந்தாலும் அது காட்சி படுத்தப்படமாலேயே போனது.

சாப்ளின் இந்த படத்தில் பணக்கார விதவைகளை மயக்கி அவர்களை திருமணம் செய்துக்கொண்டு ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு வேலையை செய்வதாக சொல்லி பணம் பிடுங்குவார். அவர்கள் மறுத்தாலோ அல்லது அவர்களுக்கு உண்மை தெரிந்துவிட்டாலோ கொன்று விடுவார். சாப்ளினின் ட்ராம்ப் கதாப்பாத்திரத்தை ஒப்பிடும்போது இது கொஞ்சம் வித்தியாசமான கதாப்பாத்திரம்.

ஆனால் கேமரா கோணங்கள் எல்லாமுமே சாப்ளினின் ட்ரேட்மார்க் கோணங்களாகவே இருந்தது. ஒவ்வொரு பெண்ணையயும் பேசி மயக்கும்போதும், அவர்களிடம் பொய் சொல்லும்போதும் நமக்கு சாப்ளின் சிரிப்பை வரவழைப்பார்.

படத்தை அமெரிக்காவில் திரையிட்டபோது அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளால் படம் மிக மோசமான வசூலையே பெற்றது, ஆனால் ஐரோப்பிய தேசங்களிளோ அபாரமான வசூலை பெற்றது. குறிப்பாக பிரான்சில். சாப்ளின் இந்த முறை கொஞ்சம் தோற்றிருந்தார்.

பின்னாளில் அமெரிக்காவில் அந்தப் படம் ரிலிசாகி சக்கை போடு போட்டதும் இன்று வரை உலக சினிமாவில் ஒரு தனி இடம் பெற்றிருப்பதும் அதன் சிறப்பு. 1947 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் பரிந்துரை பெற்றது. ஆனால் பரிசு ஏதும் வெல்லவில்லை.

பெணகளை மயக்கும் வாய்ஜாலம் புரியும் கதாபாத்திரத்திலும் சாப்ளின் கச்சிதமாகவே செய்தார். குறிப்பாக தன் குழந்தை ஒரு பூனையை துன்புறுத்த்ம் போது,’பீட்டர் இந்த பழக்கத்தை எங்கிருந்து கற்றுக்கொண்டாய் உயிர்களை சித்திரவதை செய்யாதே” என்பார். அதே போல் படத்தின் சாப்ளின் அறிமுகக் காட்சியில் தோட்டத்தில் உள்ள புழுவை மிதிக்காமல் காப்பாற்றி பத்திரமாக ஒரு இடத்தில் அதை விட்டுவிடுவார்.

புழுவையோ, பூனையையோ கொள்ளாத சாப்ளின் பணக்கார விதவைகளைக் கொள்வது என்கிற முரண்பாடு காம்யூனிஸ்ட் வகையராவாகவே இருந்தது. சாப்ளின் மீது அமெரிக்கா கோபம் கொள்ள இது போதுமானதாக இருந்தது.

ஆனால் மறுபக்கம் சாப்ளினுக்கோ அரசியல் ஆர்வம் குறையத் தொடங்கின. அதன் வெளிப்பாடுதான் அவரின் அடுத்த படமான லைம்லைட். கிட்டத்தட்ட தன்னுடைய சொந்த வாழ்க்கையையே படமாக எடுத்திருந்தார். பிகாஸோ ஒருமுறை இப்படி கூறினார் "என் ஓவியத்தைப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு, நான் எனது சுய சரிதையை எழுதியுள்ளேன்".

அதுப் போல சாப்ளினின் திரைப்படங்களை படிக்கத் தெரிந்தவர்களுக்கு அவர் தனது சுய சரிதையை எழுதியுள்ளார், என்றாலும் லைம்லைட் விஷயத்தை பொருத்தவரை அவர் திரைப்படமாக்க முயற்சித்தது உணமையானது.

மக்கள் வெளிச்சத்தில் இருக்கும் ஒரு கோமாளி மெதுவாக மக்களால் புறக்கணிக்கப்படுகிறான். அதனால் அவன் எவ்வளவு பாதிப்படைகிறான் என்பதை சாப்ளின் சொல்லியிருந்தார். இதில் மிக சிறந்த இன்னோரு நடிகரான பாஸ்டன் கீட்டானும் நடித்திருந்தார்.

மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அருமையான் காமெடியும், சோகமும் நிறைந்த இந்தப்படம் மக்களால் புறக்கனிக்கபட்டது. சாப்ளினையும் கம்யூனிஸ்ட் என்ற முத்திரை குத்தி அமெரிக்கா வெளியேற்றியது. தன்னுடயை நாட்டிற்கு வழக்கம்போல் சுற்றுலா சென்ற சாப்ளின் அமெரிக்கா திரும்புகையில் உள்ளே விட அமெரிக்க அரசு மறுத்துவிட்டது.

இத்தனை நாள் தன்னை தூக்கிவைத்துக் கொண்டாடிய நாடே தன்னை உதறியதை நினைத்து சாப்ளின் வருந்தினார். அடுத்து அவர் ஸ்விட்ச்லேண்டில் தங்க முடிவு செய்தார். தன்னுடைய அமெரிக்க சொத்துக்களை பத்திரமாக அவரது சகோதரர் மீட்டு வந்தது சாப்ளினுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

வீட்டிலும் வெறுமென உட்காராமல், பழைய படங்களுக்கு இசையமைப்பது, இசையை திருத்துவது போன்ற வேலைகளை செய்துக்கொண்டிருந்தார். சாப்ளின் கலகக்கார புத்தி அடுத்தப் படத்திற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்தது.

புரட்சியால் தன் நாட்டை இழந்த மன்னனும், கம்யூநிசம் பேசியாதால் தன் குடும்பத்தை இழந்து கம்யூனிச சிந்தனையில் வாழும் ஒரு சிறுவனுக்கும் இடையேயான பாசத்தை மையமாக கொண்டு சாப்ளின் எடுத்த அடுத்தப் படம் “A King In Newyork”. சாப்ளினின் வழக்கமான நகைச்சுவையும், அரசியல் நையாண்டிகளும் கொண்ட இந்தப் படத்தில் சாப்ளின் கிட்டத்தட்ட அமெரிக்காவின், வாழ்க்கை முறை, திரைப்படங்கள், அரசியல் நிலையென அனைத்தையும் கிண்டலடித்தார். அதைப் பற்றி அடுத்த வாரம்.

சாப்ளின் வருவார்....

    அடுத்து



thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.