வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  சார்லி சாப்ளின்
 


The Great Dictator தொடர்ச்சி...

பெயர் : த கிரேட் டிக்டேடர்
ஆண்டு: 1940
நேரம்: 125 நிமிடம்.
இயக்கம்: சார்லி சாப்ளின்.
நடிகர்கள்: சாப்ளின், பவுல கோடார்ட்

இத்தனைக்கும் சாப்ளின் அதுவரை பெற்றிருந்த கோமாளி என்ற இமேஜை வெற்றிகரமாக ‘தெ டிக்டேடர்’ படத்தின் மூலம் உடைத்தார். கதையை சொல்லவேண்டுமென்றால், ஹீரோ இரட்டை வேடம், ஆள் மாறாட்டத்தினால் ஏற்படும் குழப்பம் என்று மசாலாவகைதான். ஆனால் சாப்ளின் கதையை அவ்வாறு நகர்த்தாமால், ஹிட்லரின் கொடுமையை மக்களுக்கு விளக்க இந்த களத்தை பயன்படுத்திக்கொண்டார்.

ஆள் மாறாட்டத்தில் யூத சாப்ளின், ஹென்கெலாக உறையாற்றும் அந்த இறுதிகாட்சியில் சாப்ளீன் தன்னுடய நல்ல எண்ணத்தையும் சமுதாயத்தை பற்றிய விமர்சனத்தயும் முன் வைத்தார். அது ஒரு உணர்ச்சிகரமான உரை, வெகுளியாக நகைச்சுவையாக நடித்துக் கொண்டிருந்த சாப்ளின், இப்படியொரு உணர்ச்சிமிகு நடிப்பை வெளிப்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மனித நேயத்தையும் சமாதானத்தையும், ஒற்றுமையையும், சோஷலிசத்தையும் வெளிப்படுத்திய சாப்ளினை அந்த நேரத்தில் அமெரிக்காவே கொண்டாடியது உண்மைத்தான். காரணம் அப்பொழுது இராண்டம் உலக யுத்ததில் அமெரிக்கா வலுகட்டயமாக பங்கெடுக்க வைக்கப்பட்டிருந்தது.

ராணுவவீரர்களையும், மக்களையும் உற்சாக படுத்தவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் அந்த படத்தை அமெரிக்க அரசு பயன்படுத்தினாலும் யுத்தம் முடிந்தவுடன் அதன் புத்தியை காட்டிவிட்டது.அதற்க்கு முன் சாப்ளினின் அந்த உணர்ச்சி மிகு உரையை பற்றி பார்ப்போம்.

“Look up Hanna” என தொடங்கும் அந்த சரித்திர புகழ் பெற்ற உரையை என்னால் முடிந்த அளவு தமிழில் மொழி பெயர்க்க முயற்சி செய்திருக்கிறேன்.

ஹென்கல்- ” என்னை மன்னித்துவிடுங்கள், எனக்கு மன்னனாக இருக்க விருப்பமில்லை; அது என் தொழிலுமில்லை. நான் யாரையும் ஆள வேணிடியவனுமில்லை, எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கப் போவதுமில்லை, அதற்கு பதில் என்னால் முடிந்தால் மற்றவருக்குக் உதவி செய்யவேண்டும். நிற பேதமின்றி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக்கொள்ள வேண்டும்.

மனித இனம் அப்படிப்பட்டதுதான். நம் வாழ்க்கை ஒருவரின் மகிழ்ச்சியினால் ஆனதாக இருக்க வேண்டும், இன்னொருவரின் கண்ணீரினால் ஆனதாக இருக்க கூடாது.

நாம் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பெரிய உலகில் அனைவருக்கும் இடமிருக்கிறது. பொருளிருக்கிறது. இந்த உலகம் மிக பெரியது. இங்கு வாழ்க்கை அழகானதாகவும், சுதந்திரமானதாகவும் இருக்கும்.

ஆனால் நாம் அத்தகைய உலகை இழந்துவிட்டோம். பொறாமை மனிதனின் மனதில் நஞ்சை விளைத்துவிட்டது, அதனால் உலகம் எங்கும் வெறுப்பால் சூழப்பட்டுள்ளது. நாம் மிக மோசமான ரத்தகளரியான உலகில் வாழ்ந்துவருகிறோம்.இயந்திரமய்மான உலகத்தில் மனிதத்தை தொலைத்துவிட்டோம்.

நம் அறிவு நம்மை கல் நெஞ்சம் படைத்தவராகவும், இரக்கமில்லாதவராகவும் ஆக்கியுள்ளது. நாம் நிறைய சிந்திக்க கற்றுக்கொண்டோம் ஆனால், இரக்கபடுவதை குறைத்துக்கொண்டோம். நமக்கு இயந்திரங்களைவிட மனிதமே தேவை. இந்த மாதிரியான குணங்கள் இல்லாத வாழ்க்கை கொடூரமானதாகவும், ரத்தக்களரியாகவும் இருக்கும்.

ஆகாய விமானமும், வானொளியும் நமக்குள்ளான நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. அது உலகளவிலான நம் சகோதரத்துவத்தை அதிகபடுத்த முயற்சிக்கிறது. இப்பொழுது கூட நான் பேசுவது லட்ச கணக்கானவர்களுக்கு கேட்கும் வசதியுள்ளது. இதை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கொடூரமானவர்கள், வதை செய்பவர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னுடைய இந்த பேசை கேட்பவர்களுக்கு உறுதியாக ஒன்றை கூற விரும்புகிறேன். நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் அழிவார்கள். சர்வாதிகாரிகள் கையில் உள்ள அரசாங்கம் நிச்சயம் ஜனநாயகமாக மாறும்.

ராணுவ வீரர்களே, உங்களை மோசமானவர்களுக்கு அடிமைபடுத்திக்கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களை அடிமைபடுத்திவிடுவார்கள். உங்கள் மனதை அவர்களுக்கு அடிமையாக்கி விடாதீர்கள். உங்கள் மனதில் இரக்கமும், காதலும் உள்ளது. நீங்கள் இயந்திரங்கல்ல, இயந்திர மனம் படைத்தவர்களின் சொல்லை கண் மூடி விலங்குகள் போல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் மனிதர்கள்.

ராணுவ வீரர்களே அடிமைப்படுத்தப் போரிடாதீர்கள். சுதந்திரம் பெற போராடுங்கள். அனைவரிடமும் கடவுள் இருக்கிறார். உங்களால் இயந்திரங்களை மட்டுமல்ல உங்களுக்கான சந்தோசத்தையும், உங்கள் வாழ்க்கையில் சுந்த்திரத்தையும், மேன்மையையும் ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்.

அனைவரும் ஒன்றுபடுங்கள். இணையுங்கள். போராடலாம். நல்ல உலகை அமைக்க போராடலாம். அங்கு மனிதனுக்கு செய்ய வேலையிருக்கும். உண்ண உணவிருக்கும். ஒரு சுதந்திரமான உலகத்திற்காக சண்டையிடலாம்.

வீரர்களே, ஜனநாயகத்தின் பெயரில் ஒன்று படுங்கள்.

ஹன்னா, நான் பேசுவது கேட்கிறதா? எங்கே இருக்கிறாய். என்னை பார் ஹன்னா. மேகங்கள் மறைகின்றன. இருள் விலகுகிறது. நாம் ஒளிமயமான உலகை பார்க்கபோகிறோம். என்னுடன் வா ஹன்னா.

என்ன செய்து என்ன பிரோயஜனம்? அமெரிக்கா தன் வேலையை காட்ட தொடங்கியது. மக்கள் நிராகரிகக் தொடங்கினார். ஆனால் இன்னும் சிறந்த படங்கள் சாப்ளினிடமிருந்து வரத்தான் செய்தது.

சாப்ளின் வருவார்....

    அடுத்து



thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.