City Lights தொடர்ச்சி...
நான் ஊமை படம் தான் எடுப்பேன், பேசும் படம் எடுக்க மாட்டேன் என சாப்ளின் பிடிவாதமாக சொன்னாலும், சாப்ளினின் குரல் முதல் முதலில் பதிவானது இந்த படத்தில் தான். ஆம், முதல் காட்சியில் ஒரு சிலை திறப்பு விழாவில் சிலர் பேசும் போது இசையுடன் பின்னால், ஒரு வித மனித குரலின் ’நையாண்டி குரல்’ கேட்கும் அது சாப்ளினின் குரல் தான்.
சிட்டி லைட்ஸ் படத்தின் கதை ஒரு வகை ரொமாண்ட்டிக் காமெடி வகை.படத்தில் ஒரு கண் தெரியாத ஏழை பெண், கிழிந்த உடைகளுடன் அலையும் நாடோடி, என்ற கதாபத்திரங்கள் இருந்தாலும் சாப்ளினின் ட்ரேட்மார் நகைச்சுவக்கு பஞசமில்லை.கடைசி காட்சியில் கூட சோகம் ததும்பாமல் ஒரு வித பரவசமாகவே முடித்திருப்பார்.ஒரு விதத்தில் நாடோடி காதலியுடன் இணைந்த, சந்தோஷமான முடிவை கொண்ட சில சாப்ளின் படங்களில் இதுவும் ஒன்று.
சிட்டி லைட்ஸ் படத்தை எடுக்கும் காலத்தில் அமெரிக்கவில் “The Great Depression” என்று சொல்லபட்ட பொருளாதர நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த்து. இன்னொரு பக்கம் ஹிட்லர் ஐரோப்பிய நாடுகளில் கோலோச்சி கொண்டிருந்தார். இராண்டாம் உலக போர் தொடங்குவத்ற்க்கு சில வருடங்களே பாக்கியிருந்தன..
 |
அத்தனை நாள் வரை சாப்ளின் தன் படங்களில் காட்டிக்கொண்டிருந்த அமெரிக்க விளிம்பு நிலை மக்களை திரையில் மாத்திரமே பார்த்திருந்த அமெரிக்கர்கள், இந்த பொருளாதார நெருக்கடியால் தாங்களே விளிம்பு நிலைக்கு தள்ளபட்டிருந்தார்க்ள். ஒரு வேலை இப்பொழுது அவர்களுக்கு சாப்ளின் பேசா படங்களில் பேசிக்கொண்டிருந்த கருத்துக்கள் எளிதாக புரிந்திருக்கும். சில பிரச்ச்னைகள் வழக்கமாக வருவது போல் வந்தாலும் சிட்டி லைட்ஸ் அனைத்தும் முறியடித்து வெற்றிகரமாக ஓடியாது. சாப்ளின் சினிமா வாழ்க்கையில் |
இன்னொரு மைல்கல். சிட்டி லைட்ஸ் திரைப்படத்தில் சாப்ளினின் கற்பனையின் உச்சம் அவர் தன் காதலியின் மருத்துவ செலவிற்க்கு பணம் திரட்ட அவ்ர் பங்கேற்க்கும் குத்து சண்டை போட்டி. சாப்ளினும், இன்னொரு நபரும் நாடகமாடி போட்டியில் வென்று பரிசை பங்குபோட்டுக்கொள்ள முடிவு செய்வார்கள், விபரீதம் என்னவென்றால், சாப்ளின் ஒரு நிஜ குத்து சண்டை வீரருடன் மோத வேண்டிய சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார். அப்பொழுது அவர் அந்த நிஜ குத்து சண்டை வீரரிடம் வெகுளியாக சமாதானம் பேசும் காட்சியும், அதை தொடர்ந்து வரும் குத்து சண்டை காட்சியும் உங்கள் விளாவை நோக வைக்கும்.
சாப்ளினின் இந்த படத்தையும் அதன் காட்சிகளையும் தழுவிமாத்திரம் எத்தனை சினிமாக்கள் உலகில் வந்திருக்கும் என்று கணகில்லை. வெற்றிகளிப்பில் சாப்ளின் உலகத்தை சுற்றி வர முடிவு செய்தார்.
உலக சுற்று பயணம்
சாப்ளின், மீண்டும் தன் தாய் நாடான லண்டனில் பயணத்தை தொடங்கினார், போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். லண்டனில் தன் பழைய நினைவுகளை சுமந்தபடி அவர் வசித்த தெருவை சுற்றி வந்தார். அங்கு பல முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிட தக்கவர்கள் பெர்னாட் ஷா, காந்தி.
காந்தியை சந்தித்த சாப்ளின், அவரின் போரட்ட முறைகளை வெகுவாக பராட்டினார் அதே சமயம் அவ்ர் போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்தினார். காந்தியோ உலக பிரபலமாக இருக்கும் சாப்ளினின் ஒரு திரைப்படத்தையும் கூட பார்க்கவில்லையென்று ஒப்பு கொண்டார்.
பத்தரிக்கயாளர்களை சந்தித்த சாப்ளின், தன் மனதில் இருக்கும் பல கருத்துக்களை ஆணி அடித்தது போல் கூறினார். உலகம் முழவதும் வியாபித்திருக்கும் பொருளாதார சுமைகளுக்கு சில யோசமைகளையும் கூறினார். அதை தொடர்ந்து தான் ஐன்ஸ்டீன் சாப்ளினை பற்றி சொன்ன அந்த புகழ் பெற்ற வாச்கத்தை கூறினார். “சாப்ளின் நீ ஒரு நகைச்சுவையாளன் மட்டுமில்லை, தேர்ந்த பொருளதார மேதையும் கூட".
உலகில் நடக்கும் போராட்டங்களை பற்றி குறிபிட்ட சாப்ளின், “காந்தியோ, லெனினோ போரட்டம் செய்ய வேண்டும் என் துடிப்பதில்லை. மாறாக அவர்கள் சார்ந்த சமூகமும், சூழ்நிலையும் அவர்களை போராட்டம் செய்ய தூண்டுகிறது என்றார்”.
ஹிட்லரின் ஜெர்மனியையும் சுற்றி பார்த்த சாப்ளின் அங்கு நிலவும் சூழ்நிலையை முழுமையாக உள்வாங்கிகொண்டார். அதன் பிரதிபளிப்பு பின்னாளில் அவர் எடுத்த கிரேட் டிக்ட்டேடரில் பிரதிபலித்தது. ஒரு விஷ்யத்தை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம், த்ன்னை சுற்றியிருக்கும் சமூகம் மற்றும் மனிதர்களின் சூழ்நிலையை கவனித்து, அதன் மீது அதிக ஈடுபாடுக்கொள்கிறவனால் தான் மிக சிறந்த படைப்பாளியாக மக்கள் மனதை கவர முடிகிறது. சாப்ளின் அதில் தன்னிகரற்றவர்.
 |
காந்தியுடன் அவர் கலந்துரையாடும் பொழுது சாப்ளின் காந்தியை பற்றி வியந்த இன்னொரு முக்கிய விஷ்யம், காந்தி எதிர்த்து வந்த இயந்திர புரட்சியை. காந்தியோ ஆங்கிலேயர்கள் தயாரிக்கும் இயந்திர நூற்ப்பு துணிகளை விட நம் இந்தியாவில் கையினால் ராட்டையில் நூற்க்கப் படும் உடையை அணிய சொன்னார், இதன் பின்னால் உள்ள பொருள், நவினத்தின் எதிர்ப்பல்ல. சமூகத்தில் உள்ள மனிதர்களின் பொருளாதாரத்தை சார்ந்த்து. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இயந்திரங்கள், வேலை இல்லா திண்டாட்டத்தை |
ஏற்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால் மனிதர்களின் வேலையை சூறையாடும் இயந்திர புரட்சியை காந்தி வன்மையாக எதிர்த்து வந்தார்.
இந்த கருத்துக்க்களை நன்கு உண்ர்ந்த பின் இதை முழுமையாக புரிந்துகொண்ட சாப்ளின் இயந்திரங்களை பற்றி இன்னொரு பரிமாணத்தில் யோசித்தார், அது தொழிற் புரட்சியின் பின்னனியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மனிதர்களை பற்றி...
அமெரிக்கா திரும்பியவுடன் அடுத்த படத்தின் வேலை துவங்கபட்டது. சாப்ளினின் திறமையை உச்சிக்கேற்றி அழகு பார்த்த அதே நேரம், அமெரிக்க கம்யூனிச ஒழிப்புத் துறை சந்தோசமாக சாப்ளினை ஒழிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். சாப்ளினின் த மாடர்ன் டைம்ஸ் வந்தது, சாப்ளினை நாடு கடத்த உதவியது.
சாப்ளின் வருவார்....