த சர்க்கஸ் தொடர்ச்சி...
படம் : த சர்கஸ்
வருடம்: 1928
நடிகர்கள்: சாப்ளின், மெரினா கென்னடி,பெர்க்மேன்
இயக்கம்: சாப்ளின்.
நேரம் : 71 நிமிடங்கள்.
தயாரிப்பு : பர்ஸ்ட் நேஷனல் கார்ப்பெரேஷன்.
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன்
’த சர்கஸ்' படத்தை ஆரம்பித்தவுடனேயே சாப்ளினுக்கு வந்த முதல் பிரச்சனை தன் மனைவியிடமிருந்து. சொந்த வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனைகள்! லீட்டா சாப்ளினிடமிருந்து விவாகரத்து கோரியது மட்டுமின்றி அவர்களது அந்தரங்க விவகாரங்களை வெளியே சொல்லிவிடுவதாக மிரட்டினார். இன்னொரு பக்கம் சாப்ளினுடைய அந்தரங்க விஷயங்களை படம் பிடித்தபடியும் ஒளிப்பதிவு செய்த படியும் அலையும் அமெரிக்க கம்யூனிஸ்ட் ஒழிப்பு பிரிவு.
சாப்ளின் நீதிமன்றதிற்க்கு கூட செல்லாமல் விவாகரத்தை வழங்க ஒப்புக்கொண்டார். அதனுடன் ஜீவனாம்ச தொகையாக சில மில்லியன் டாலர்களையும் வழங்கினார். இன்று வரை உலக அளவில் மிக காஸ்டிலியான விவாகரத்தாக இது சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம், படப்பிடிப்பில் நேர்ந்த பிரச்சனைகள். படத்திற்க்காக அமைக்கபட்டிருந்த செட் தீ விபத்து ஒன்றில் அழிந்துவிட்டது. இதன் நடுவில் அவரது விவாகரத்து பிரச்சனையும், பணப்பிரச்சனையும் சேர்ந்துக்கொள்ள கிட்டத்தட்ட 8 மாதங்கள் படப்பிடிப்பை தள்ளி போட வேண்டியிருந்தது.
 |
அனைத்து பிரச்சனைகளும் சாப்ளினின் மனதை பாதித்தது. இதனால் மன நிலை பாதிப்படைந்து, நியூயார்க்கில் உள்ள மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நிச்சயம் இது சாதாரண விஷயமில்லை, தொடர்ச்சியான பிரச்சனைகள். காய்த்த மரம் தானே கல்லடிப்படும். சாப்ளின் வாழ்க்கையை பொருத்த வரை இரண்டு விதமாக பிரச்சனைகள் அவரை தேடி வந்தன. ஒன்று, அவரின் அரசியல் நிலைப்பாட்டையும், படமெடுக்கும் விதத்தையும் விமர்சித்து வந்தவை;
|
இரண்டாவது, அவராக சொந்த வாழ்க்கையில் ஏற்படுத்திக்கொண்டவை. முதல் பிரச்சனை கலகக்கார கலைஞன் யாருக்கும் ஏற்படக்கூடியவைதான். ஆனால், இரண்டாவது பிரச்சனை சாப்ளினின் தவறான கணிப்பினால் வந்தவை.
சாப்ளினின் வாழ்க்கையில் முதல் காதல் அவரின் பருவ வயதில், ஒரு நாடக குழுவில் ஏற்பட்டது. ஆனால், அந்த காதல் விரவிலேயே தோல்வியும் அடைந்தது. அதன் பின் அவரின் வாழ்க்கையில் காதலின் சுவடு ஏதும் தென்படவில்லை.
அமெரிக்கா வந்து ஒரு நடிகராக மாறிய பின் அவரின் காதல் வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. ஆனால் அவரின் காதல் மனைவிகள் அவரை மன உளைச்சளுக்குதான் உள்ளாகினார்கள்.
சாப்ளின் திருமணம் செய்துக்கொண்ட பெண்கள், அவரை விட பாதி வயது குறந்தவர்களாக தான் இருப்பார்கள். அதனலேயே அவரின் எண்ண ஓட்டமும், அவர்களின் எண்ண ஒட்டமும் வேறாக இருந்தது. இன்னொரு பிரச்சனை, சாப்ளின் எந்நேரமும் சினிமாவை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார். அது அந்த பெண்களின் மனதை பாதித்திருக்க வேண்டும். சாப்ளின் மண வாழ்கை தோல்வியடைய பெரும் பிரச்சனையே, அவர்களின் வாழ்கை முறையில் இருந்த அந்த மிகப் பெரிய தூரம் தான்.
நல்ல உடல் நிலை வந்தபின் சாப்ளின் சர்கஸ் படத்தை தொடர்ந்தார். இந்த முறை எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் மனபலத்தை பெற்றிருந்தார். ஒரு வழியாக இந்த முறை படபிடிப்பு நல்ல முன்னேற்றமடைந்தது.
சர்கஸ் திரப்படத்தின் ஆதாரம், அந்த வழிப்போக்கன். அவன் தான் சர்கஸ் வருமானம் பெற காரணம் என்பதை அவனுக்கு புரிய விடாமல், தந்திரமாக அவனை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைத்திருப்பார்கள். இது சாப்ளினின் வாழ்க்கையில் அப்பட்டமாக நடந்தவை.
அவரை வைத்து பணம் சம்பாதித்த பெரும் நிறுவனங்கள் அவருக்கு குறைந்த ஊதியத்தையே கொடுத்தன. இதை ஓரளவு புரிந்துக்கொண்ட அவரின் சகோதரர் சிட்னி சாப்ளின், ஒரு வழியாக சாப்ளினுக்கு அதிக பணம் சம்பளமாக வர காரணமாக இருந்தவர்.
 |
அதே மாதிரியாக இந்த படத்தில் கூண்டுக்குள் சிங்கத்துடன் மாட்டிக்கொள்ளும் காட்சியை சாப்ளின், முதல் திரைக்கதையில் அமைக்கவில்லை, பின்னர் தனியாக எடுத்து சேர்க்கப்ப்பட்ட காட்சிதான் அது. சாப்ளின் படங்களில் வழக்கமாக வருவது போல், படத்தின் நாயகியை சாப்ளின் காதலிக்க, நாயகியோ சாப்ளினை விட அழகான ஆணை காதலிப்பர். இந்த படத்திலும் அதே மாதிரியான கதை அமைப்புதான். சர்கஸ் களத்தை தன் நகைச்சுவைக்கு வசதியாக மாற்றிக்கொண்ட
|
சாப்ளின், அதில் வரும் காதல் களத்தை அணைவரின் மனம் வருடும் சோக களத்திற்க்கு பயன் படுத்திக்கொண்டார்.
குறிப்பாக படத்தின் இறுதி காட்சி. உண்மையாக கதநாயகி சாப்ளினிடம் வந்து தன்னை ஏற்றுக்கொள்ள சொல்வார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வதை போல் அமைத்திருந்தால் அது சாதாரன படமாகியிருக்கும்.
இறுதியில், அனைத்து வாகனங்களும் புறப்பட்டுவிட, சாப்ளின் சோகமாக நடக்கும் அந்தக் காட்சியை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். படத்தை முழுமையாக பார்க்கும் பொழுது அது ஏற்படுத்தும் பாதிப்பு சொல்ல முடியாதது.
படத்தின் வெற்றியும், வசூலும் சாப்ளின் மீண்டும் எழ செய்ய, அதற்கும் ஒரு படி மேலே, அமெரிக்க அகடெமியின் விருதான ஆஸ்கர் விருதும் கொடுத்தது. ’த சர்கஸ்’ படத்தில் பங்காற்றியதற்காக அந்த விருது கொடுக்கப்பட்டது.
என்ன வெற்றி பெற்று என்ன பையன் அமெரிக்க கம்யூனிஸ்ட் ஒழிப்பு துறை சாப்ளினை கண்கானித்துக்கொண்டிருந்த்து வலுவான ஆதாரங்கள் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த அவர்களுக்கு, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக, சாப்ளின் கம்யூனிஸ்ட் என்று சொல்ல வலுவான ஆதாரத்தை சாப்ளின் தன் படத்தில் ஏற்படுத்தி கொடுத்தார்.
அந்த படம் “ தெ மாடர்ன் டைம்ஸ்” சாப்ளினின் மாஸ்டர் பீஸ். சாப்ளினை அமெரிக்கவினுள் நுழைய விடாமல் செய்த படம் என்றால் சும்மாவா. அதை பற்றி அடுத்த வாரம்.
சாப்ளின் வருவார்....