வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஒளிப்பதிவு
1
 
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  ஒளிப்பதிவு
   
 
இந்த வார பகுதிக்கு செல்ல (பகுதி - 7)
பேச்சால் அறியப்படுவது மொழி. ஆனால் கலையைப் பொறுத்தவரை உணர்வுகளும் கண்களும் மட்டுமே பேசும். திரைப்படத்திற்கு அத்தகையக் கண்களாக விளங்கக் கூடியவர் ஒளிப்பதிவாளர். இந்தப் பகுதியில் ஒளிப்பதிவு கலையை நமக்குக் கற்றுக் கொடுக்கப் போகிறார். ஒளிப்பதிவாளர் திரு. சி. ஜெ. ராஜ்குமார்


இனி அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

சி.ஜெ. ராஜ்குமார் இவர் P.S.G கல்லூரியில் மெக்கானிக்கல் பட்டயப் படிப்பு படிக்கும்போதே ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொண்டு கல்லூரியின் மூலமாகவே பல போட்டிகளில் கலந்துக் கொண்டு தேசிய அளவிலான ஒளிப்படப் போட்டிகளில் பரிசுகளை வென்றதோடு உடன் படித்த மாணவர்களையும் ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொள்ள செய்தார். பின்னர், திரைப்பட ஒளிப்பதிவை பெங்களூரில் S.J.P. கல்லூரியில் மூன்றாண்டுகள் படித்து முடித்தார்.

பின்னர், ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் "காதல் கோட்டை" படத்திலிருந்து "பாண்டவர் பூமி" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.

இவர் ஒளிப்பதிவு செய்த மற்றொரு திரைப்படமான "மண்" இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் எடுக்கப்பட்ட முதல் படம். ரா. புதியவன் இயக்கிய இப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது. பெரியார் படத்தில் முக்கியமானக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது இவரே.

சமீபத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" எனும் குறும்படம் "பெர்லின் திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் பங்கேற்றுள்ளது. இது வரை வேறெந்த தமிழ் படங்களும் இப்பெருமையை பெற்றதில்லை. மேலும் இப்படம் உலக பல விருதுகளை பெற்றுள்ளது.

நம்முடைய தமிழ் ஸ்டுடியோவிற்காக திரு. சி.ஜெ. ராஜ்குமார் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்த ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தின் பாடத்திட்டங்கள்:

1. ஒளிப்படம் மற்றும் திரைப்படக் கலை வரலாறு.
2. கேமரா வகைகள்
3. பிலிம் தோற்றமும் வளர்ச்சியும்
4. பிலிம் வகைகள்
5. கேமராக் கோணங்களும், அதனை இயக்குதலும்
6. லென்ஸ் வகைகளும், அதன் செயல்பாடுகளும்

மேலும், திரைப்படத் தயாரிப்பின்

முன்னேற்பாடுகள் (Pre-Production)
படப்பிடிப்பு (Shooting)
இறுதிக் கட்டப் படப்பிடிப்பு (Post Production)

ஆகியவையும் இதில் அடங்கும். மேலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் நாட்களும் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

உங்கள் வினாக்கள் மற்றும் பாடங்களில் ஏற்படும் ஐயங்கள் தீர தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

இப்பகுதி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை (15 நாட்களுக்கு) புதுப்பிக்கப்படும்.

thamizhstudio@gmail.com


                                                                                                                                             உள்ளே

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.