வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி-1
1
1 பகுதி-2
1
1 பகுதி-3
1
1 பகுதி-4
1
1 பகுதி-5
1
1 பகுதி-6
1
1 பகுதி-7
1
1 பகுதி-8
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
1  
 
  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
 
தொடர்கள் முதல் பக்கம்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦07 - அக்னிப்பார்வை

மீண்டும் ஒளிபரப்புங்கள்...

“This is Show Business man, one day you disappear from the show, people going to forget you”
--- Anonyms

ஸ்பீல்பெர்க் ’டூயல்’ சிறுகதையை திரைக்கதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தான் எப்பொழுதும் உழைத்திடாத அளவு இந்த திரைக்கதைக்காக உழைத்தார். பொதுவாக சிறுகதை எழுத்து வடிவம், எழுத்து வடிவத்தில் ஒரு எழுத்தாளருக்கு முழு சுதந்திரம் இருக்கும். எதையும் தன் எழுத்தின் மூலம் படிப்பவர்களை உணர செய்ய முடியும். குறிப்பாக உணர்வுகளை.

காட்சி ஊடகத்தில் சில வேலைகளை செய்வது கடினம். ஒருவரின் உணர்ச்சிகளை மனச்சிக்கலை ‘வாய்ஸ் ஓவர்’ மூலம் சொல்ல வேண்டும். மனசாட்சி என்ற ஒரு கண்ணாடியில் பிம்பம் தோன்றி பேச வேண்டும். சில நேரம் அதுவே வேகமான திரைக்கதைக்கு முட்டுக்கட்டையாகும்.

இதனால், சிறுகதையையும், நாவலையும் திரைப்படமாக்கும்போது காகித்தில் இருக்கும் அத்தனையும் திரையில் வரும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக காட்சிப்படுத்த மெனக்கெட வேண்டும். அதனால் குறிப்பிட்ட அந்த கதையின் முக்கிய சம்பவங்களையும், கருப் பொருளை மட்டும் உணர்ந்து கொண்டு அதற்கான திரைக்கதையை

எழுதுவதுதான் ஓரளவு சிறந்த முறை. ஆரம்பத்தில் திரைப்படமாக்க டூயல் சிறுகதையிலிருந்து இந்த சூட்சுமத்தை ஸ்பீல்பெர்க் கற்றுக்கொண்டார். பின்னர் அவர் இயக்கிய பல படங்கள் புதினங்கள்தான்.

திரைக்கதையை தயார் செய்து விட்டு ஸ்டுடியோவிற்கு செல்லும் பொழுது அவர் இன்னொரு விடயத்தையும் கேள்விப்பட்டார். ஆம்ப்லின் திரைப்படம் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்படாததின். காரணம் இது தான். படத்தில் ஒரு காட்சியில் ஹிப்பிகளான இருவரும் போதை மருந்தை புகைப்பார்கள். அதைத் தொடர்ந்து வரும் சில காட்சிகள் மகிழ்ச்சியானதாகவும், கேளிக்கையாகவும் இருக்கும். இதைப்பொதுவாக அகாதெமி உறுப்பினர்கள் பெரும்பாலனோர் விரும்பவில்லை.

சரிதான். என்ன தான் குடிப்பவரின் பார்வையில் மது அருந்துவது மகிழ்ச்சியானதாகவும், ஆனந்த்மானதாகவும் இருக்கும் என்றாலும், அதன் பின் அவர் உடல் நலக்கேடும், குடும்பம் படும் துன்பத்தையும்தான் சமுதாய அக்கரை கொண்ட படத்தின் இயக்குனர் வைக்கவேண்டும். அதைதான் சமுதாயம் ஏற்குமல்லவா?

சரி. டூயல் கதைக்கு வருவோம். முழுக்க முழுக்க நெடுஞ்சாலையில் ஒரு ட்ரக், ஒரு கார் வைத்துக்கொண்டு இரண்டு கதாப்பத்திரங்கள் மட்டுமே வரப்போகும் படம், பெரும்பாலான படத்தில் வசனமில்லை. கதாப்பாத்திரங்கள் இல்லை, படம் முழுக்க துரத்தல் காட்சிகள்தான்.

படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருந்த நேரம் ஸ்பீல்பெர்க்கை கவர்ந்த இன்னொரு விடயம் ஜப்பானிய திரைப்படங்கள் குறிப்பாக ‘காட்ஸில்லா’. இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த வேலையில் ஜப்பானின் வளர்ச்சியை பார்த்து மற்ற நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்த அதே நேரத்தில் திரைப்பட துறையிலும் ஜப்பானியர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.

அகிரா குரசோவா, ஓசை இன்றி இயக்குனர்கள் உலக அலவில் கலக்கிகொண்டிருந்த அதே வேளையில், 'காட்சில்லா' எனும் ராட்சத பல்லியை வைத்து அதன் அட்டகாசங்களை ஒரு நல்ல பொழுது போக்கு படமாக மாற்றியிருந்தனர்.

மனிதர்களுக்கு சவால் விடக்கூடிய மிகப் பெரிய விலங்கு நகரத்தில் புகுந்துவிடும் கருவை முதலில் உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள் தாம்.

அதிலும் ஸ்பீல்பெர்க்கை கவர்ந்த ஒரு விடயம், அவர்கள் உருவாக்கியிருந்த விதம். இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட அணுகுண்டின் கதிர்வீச்சால் ஒரு விலங்கினம். மிக பெரியதாகவும், ரத்த வேட்கை மிகுந்ததாகவும் ஆகி நகரத்தில் புகுவது. பிற்காலத்தில் இது போன்ற ஒரு படத்தை இயக்க வேண்டும் என ஸ்பீல்பெர்க் மனதில் எண்ணிக்கொண்டார். படப்பிடிப்பு துவங்கியது. ஒரு வார காலம் நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.

அளவான பட சுருள்கள். நான்கு கேமராக்கள். ஏற்கனவே சொன்ன அந்த நான்கு கேமாராக்களை வைத்து என்ன செய்ய வேண்டும் என ஸ்பீல்பெர்கிற்க்கு புரியவேயில்லை.

ஸ்பீல்பெர்கிற்கு பெரிதும் உதவியதே ஸ்டோரிபோர்ட்தான். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் வரைந்துத் தெளிவாக எடுத்து வந்து விட்டனர். படக்குழுவினர். ஒரு வழியாக படம் முடிந்து. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

ஸ்பீல்பெர்க் இரண்டு படங்களை இயக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தை கை எழுத்திட்டார். அவரின் கனவு கொஞ்சம் நினைவாக தொடங்கியது. அவரின் ஆசையே திரைப்படம் இயக்குவது தானே. முதல் படமாக சுகர்லேண்ட் எக்ஸ்ப்ரஸ என்கிற கதைக்கான திரைக்கதையை அமைக்கும் பணியில் இறங்கினார்.

அதே நேரம் அமெரிக்க தொலைக்காட்சியில் டூயல் படம் ஒளிபரப்பப்பட்டது. தொலைக்காட்சி நிலையத்திற்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள். படத்தை இன்னொரு முறை ஒளிபரப்புங்கள். படமும் மறு ஒளிபரப்பு செய்யபட்டது. மீண்டும் அழைப்புகள் இன்னொரு முறை என்று. ஸ்பீல்பெர்க் மக்கள் மனதில் இடம்பிடிக்க தொடங்கினார்.

படத்தில் ஸ்பீல்பெர்க் கடைசி வரை அந்த ட்ரக் ட்ரைவரின் முகத்தை காட்டவேயில்லை. இதுவே படத்தின் மிகப் பெரிய திருப்புமுனையாகவும், சிறுகதையிலிருந்து மாறு பட்டுமிருந்தது. இறுதியில் ட்ரக் மலை உச்சியிலிருந்து கவிழும் காட்சிக்கு பின்னனி இசையாக ஸ்பீல்பெர்க் இணைத்திருந்த ஒளி, காட்சில்லா திரைபடத்தில், காட்சில்லா வீழும் போது அலறும் ஒளி...

பிரம்மாண்டம் வளரும்...

இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.


அடுத்து

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.