வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி-1
1
1 பகுதி-2
1
1 பகுதி-3
1
1 பகுதி-4
1
1 பகுதி-5
1
1 பகுதி-6
1
1 பகுதி-7
1
1 பகுதி-8
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
1  
 
  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
 
தொடர்கள் முதல் பக்கம்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦05 - அக்னிப்பார்வை

A good director's not sure when he gets on the set what he's going to do.
--Elia Kazan

ஸ்பீல்பெர்க் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்ததும் அமெரிக்க திரைபட கல்லூரியில் படிக்க விண்ணபித்தார். தோல்வி தான் மிஞ்சியது. சரி என ஒரு கல்லூரியில் தன் தந்தை விருப்பத்திற்கேற்ப ஏதோ ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்தார். உண்மையில் கல்லூரி பக்கமெல்லாம் தலை வைத்துக்கூட படுக்கவில்லை. வழக்கமான ஊட்தியமில்லா வேலையாளாக யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு திரும்பினார்.

ஸ்பீல்பெர்கிற்கு ஒரு கதை கிடைத்து, அதை படமாக எடுக்க முடிவு செய்தார். என்ன ஒரு 20 நிமிடம் வரை ஓடும் குறும்படம். இன்னொரு அதிசயமாக அதை தயாரிக்க ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தர். அவர்தான் ஹாஃப்மேன். என்ன ஒரு சின்ன ஒப்பந்தம்.

ஸ்பீல்பெர்க் இயக்கும் இந்த படத்திற்கு தேவையான பணத்தை கொடுத்து தயாரிப்பதால், சில நிபந்தனைகள்:

1. இந்த படத்தை இயக்குவதற்கு தனியாக ஸ்பீல்பெர்கிற்கு சம்பளம் ஏதும் கிடையாது.
2. அடுத்த 10 வருடதிற்கு ஹாஃப்மேனின் நிறுவனதிற்கு இயக்குனராக பணிபுரிய வேண்டும்.
3. இரண்டாம் படம் இயக்கும்போது, முதல் படத்தின் ஈடாக ஸ்பீல்பெர்கிற்கு 25000$ சம்பளமும், 5 சதவிகித பங்கும் அளிக்கபடும்.

ஸ்பீல்பெர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். படத்தின் வேலைகள் துவங்கின. ஸ்பீல்பெர்க் உற்சாகத்துடன் இயக்க தொடங்கினார். அந்தப் படம் ஆம்பிலின்(Amblin).

அப்பொழுது அமெரிக்காவில் ஹிப்பிகள் எனும் ஒரு புது கலாச்சார சூழல் உருவாகியிருந்தது. இளைஞர்கள் திடிரென வாழ்க்கையை முழுவதுமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்து, தங்களுக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்ய தொடங்கினர். தலைமுடியை பெரியதாக் வளர்த்து, கணடபடி உடைகளை அணிந்து போதை மருந்து புகைப்பது என்று தங்களுக்கான வாழ்க்கையை வாழ தொடங்கினார். கையில் ஒரு கிட்டாருடன், ஹிப்பி தலையுடன் உலகம் சுற்ற புறப்பட்டுவிடும் ஹிப்பிக்கள் எண்ணிக்கை மிக அதிகம். ஆண் பெண் என்ற பேதமில்லை.

ஹிப்பிகளான ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் எதேச்சையாக ஆள் அரவம் இல்லாத நெடுஞசாலை ஒன்றில் சந்திக்கிறார்கள். இருவரும் நட்பு கொண்டு பயணம் மேற்கொள்ள ஒன்றாக இணைந்து வண்டியை பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

வண்டி கிடைக்காமல், சாலையில் நடந்து, இரவு காடு போன்ற பகுதியில் தங்குகிறார்கள். அந்த இளைஞன் கிட்டார் பெட்டியை வைத்திருந்தும், அதை வாசிக்காமல் இருப்பதை பார்த்து அந்த பெண் ஆச்சரியமடைகிறாள்.

இரவு போதை மருந்து புகைக்கிறார்கள். சந்தோசமாக காதல் புரிகிறர்கள். ம்கிழ்ச்சியுடன் அந்த இரவு கழிகிறது.

மறு நாள் அந்த பெண் எதேச்சையாக அவன் கிட்டார் பெட்டியை திரைக்கிறாள். அதில் சில துணிகள் இருக்கின்றன. அவளை போல் அந்த இளைஞன் ஒரு ஹிப்பியில்லை. மாறாக வீடு, குடும்பம் இல்லாமல் அலையும் ஒரு அனாதை. அவன் வழக்கமான தன் உற்சாகமான நாளை தொடங்க அவளும் தன் வாழ்க்கையை தொடருகிறாள். இருவரும் பிரிந்து அவர்களுக்கான வழியில் பயணிக்கிறார்கள்.

படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை தன் குருவான சக் சில்வர்ஸுக்கு போட்டு காட்டினார் ஸ்பீல்பெர்க். சக் சில்வர்ஸ் படத்தை பார்த்ததும் உடனடியாக யுனிவர்சல் தொலைக்காட்சி தயாரிப்பு பிரிவு தலைவர் சிட் ஸ்டைன்பேர்க்கை (Sid Steinberg) தொடர்பு கொண்டார்.

சிட், ‘சக் , என்ன அவசரம், நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன், இங்கு இவர்கள் என்னை கொன்று விடுவார்கள் போலிருக்கிறது. விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்கள்.”

சக்,” சிட் இங்கு நம் திரையரங்கில் ஒரு படத்தை வைத்திருக்கிறேன். அந்தப் படத்தை பார்க்கதான் உங்களை அழைத்தேன். மிக அருமையான படம். வந்து பாருங்கள்.”

சிட்,” சக், இப்பொழுது அந்த படத்தை பார்ப்பது அவ்வளவு முக்கியமா?”

சக், “ சிட் இன்று நீங்கள் பார்க்கவில்லை என்றால் நாளை யாராவது பார்த்துவிடுவார்கள். நான் படத்தை பார்த்துவிட்டு இங்கே வைத்துவிட்டு போகிறேன். இரவு நிச்சயமாக0 நீங்கள் பாருங்கள்.”

சக் சில்வர்ஸுக்கு அந்த படத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை. அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. மறுநாளே சிட்டின் உத்வியாளர் ஸ்பீல்பெர்கை தொடர்பு கொண்டு யூனிவர்சல் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

சக் ஒரு சந்திபிற்கு ஏற்பாடு செய்தார். ஸ்பீல்பெர்கை நன்று உற்சாக படுத்தினார். யுனிவர்சல் ஸ்டுடியோ ஒரு ஏழு வருட வேலை ஒப்பந்தத்தை நீட்டியது. ஸ்பீல்பெர்க் யோசிக்கவில்லை. வாரத்திற்கு 250$ சம்பளம். ஒரு அலுவலகம். யுனிவர்சல் சொல்லும் தொலைக்காட்சி தொடர்களை இயக்க வேண்டும்.

தொலைக்காட்சி தொடர் என்று சாதரணமாக நினைக்க வேண்டாம். கொஞ்சம் நம்பிக்கை வந்தால் படம் இயக்கலாம். அப்போதெல்லாம் தொலைக்காட்சி தொடர்கள் திரைத்துறைக்குள் நுழைய ஒரு எளிய வழி.

என்ன ஸ்பீல்பெர்கிற்கு இருந்த ஒரே கவலை, தன் தந்தை நினைத்தபடி பொறியாளர் ஆகாதது தான்.

ஸ்பீல்பெர்க், சக் ஸில்வர்சை நாடி அவர் செய்த இந்த உதவிக்கு தான் சக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

அதற்க்கு சக், “ நான் எப்படி உனக்கு உதவி செய்தேனோ அது மாதிரி, பிற்காலத்தில் நீயும் பல இளைஞர்களுக்கு உதவி செய்” என்றார். ஸ்பீல்பெர்க் அதை வேதவாக்காக இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்.

ஸ்பீல்பெர்க் - “சக் நான் அதை நிச்சயம் செய்கிறேன். உங்களுக்கு தனி பட்ட முறையில் என்ன வேண்டும் என்று கேளுங்கள்.”

சக்,” சரி, இனிமேல் நான் உன்னை எப்பொழுது சந்தித்தாலும் உன்னை கட்டிபிடிப்பேன், நீ மறுக்காமல் கட்டிபிடிக்க வேண்டும். ”ஸ்பீல்பேர்க் சம்மதித்தார். இன்று வரை அது தொடர்கிறது.

சரி ஹாஃப்மேனின் அந்த 10 வருட ஒப்பந்தம்? அந்த பூதம் இன்னும் 5 வருடம் கழித்து வெளியே வரும் அப்பொழுது பார்க்க்லாம். ஸ்பீல்பெர்க் வளர தொடங்கிவிட்டாரே பிரச்சனைகள் இல்லாமலா?

ஸ்பீல்பெர்க் அடுத்து யுனிவர்சல் ஸ்டுடியோவில் சும்மா தான் சுற்றிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நாள் ஸ்பீல்பெர்கிற்க்கு கொடுக்கப்பட்ட வேலை, புதிதாக கதை பிரிவில் சேர்ந்திருக்கும் மைக்கல் கிரிக்ட்டன் என்பவருக்கு யுனிவர்சல் ஸ்டுடியோவை சுற்றி காண்பிப்பது. (மைக்கல் கிரிக்ட்டன் வேறு யாருமில்லை ஜுராஸிக் பார்க் எனும் நாவலை எழுதியவர்).

ஒரு நாள் ஸ்பீல்பெர்கிற்க்கு அந்த அழைப்பு வந்தது. ஒரு தொலைக்காட்சி தொடரின் சில பகுதிகளை இயக்க வேண்டும். நடிக்கப்போவது ஜோன் கிராஃபோர்ட்.

ஸ்பீல்பெர்க் 22 வயது இளைஞர். ஜோன் கிராஃபோர்ட்டோ ஹாலிவுட்டின் முக்கிய நடிகை, கிட்டத்தட்ட ஸ்பீல்பெர்க் வயதை விட 10 வருடம் அதிகமான ஹாலிவுட் அனுபவம் பெற்றவர். ’ஜானி கிட்டார்’ போன்ற மிக அருமையான வெற்றி படங்களிலும், 50 க்கும் அதிகமான படங்களிலும் நடித்தவர்.

ஸ்பீல்பெர்க் சற்றே பயந்துவிட்டார். சக் ஸில்வர்ஸ் உதவிக்கு வந்தார்.

இயக்குனர் என்ற முறையில் ஸ்பீல்பெர்க் ஜோனை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன் அதில் நடிப்பதாக இருந்த பெட்டி டேவிஸ் எனும் நடிகை, அறிமுக இயக்குனருடன் பணியாற்ற முடியாது என பிரசசணை செய்ய, அவர் அந்தப் படத்திலிருந்து தூக்கபட்டார். அந்த செய்தி வேறு ஸ்பீல்பெர்க்கை பாதித்திருந்தது.

சக், ஸ்பீல்பெர்கிடம் தெளிவாக சில விடயங்களை கூறினார், “காரின் கதவை சேவகன் திறக்காமல் நீ திறக்காதே; நன்றாக உடையணிந்து செல்; ஜோனுக்காக காத்திருக்கும் போது, அவர் நடித்து உனக்கு பிடித்த படங்களை ஒரு பேப்பரில் வரிசை படுத்தி எழுது” என்றார். ஒரே காரணம் ஸ்பீல்பெர்க் பதட்டமாக இருந்ததால் அவரை அமைதிப்படுத்த நினைத்தார்.

ஸ்பீல்பெர்க் ஜோனின் வீட்டிற்கு சென்றார். “ஸ்டிவன் உள்ளே வா” என ஜோன் அழைக்க உள்ள சென்றவருக்கு அதிர்ச்சி. ஜோன் கண்ணில் கட்டுப் போட்டுக்கொண்டு, தடவி தடவி நடந்தவாறு தன் இருப்பிடத்தில் அமர்ந்தார்.

ஸ்டிவன் குழப்பமாக பார்க்க, ஜோன் மெதுவாக அந்த கட்டை அவிழ்த்து “படத்திற்க்கு ஒத்திகை பார்க்கிறேன் என்றார்” (கதை படி ஜோன் அதில் கண் தெரியாதவர்). ஸ்டிவன் சற்று கூச்சமாகவே இருந்தார். ஸ்டிவன் தான் இயக்கிய குறும்படத்தை பற்றி கூறினார். ஜோன் ஸ்டிவனை சகஜப்படுத்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார். குறிப்பாக தன் கணவர் விட்டு சென்ற ’பெப்ஸி’ குளிர்பான நிறுவனத்தை தான் நிர்வகிப்பது பற்றி.

ஸ்டிவன் கொஞ்சம் சகஜமாகி “அப்பா நாமிருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை. நான் பெப்ஸி குடிப்பேன். நீங்கள் தயாரிக்கிறீர்கள்” என்றார். ஜோன் அதை வெகுவாக ரசித்தார். விடை பெறும் போது ஸ்பீல்பெர்க் யுனிவர்சல் ஸ்டுடியோவில் யாருக்காவது சொந்தக்காரரா எனக் கேட்டார். ஸ்டிவன் இல்லை என்று கூற, “ ஓ, நீயும் என்னை மாதிரி சுயமாக முன்னேரியவனா” என்று ஸ்டிவனை வாழ்த்தினார்.

“சரி ஸ்டிவன் என்னை உன் நண்பனாக நினைத்துகொள், என்ன பிரச்சணை என்றாலும் என்னிடம் கூறு. நான் உன்னை காப்பாற்றுகிறேன்” என்றார் அந்த படப்பிடிப்பின்போது மாத்திரமல்ல, ஜோன் மரணம் அடையும் வரை ஸ்பீல்பெர்குடன் நல்ல நட்புறவை வைத்திருந்தார்.

படபிடிப்பு தளத்துக்கு வந்தால் ஸ்பீல்பெர்கை தவற அங்கு இளைஞர்களே இல்லை. ஸ்பீல்பெர்கிற்கு எதை செய்யவும் முதலில் கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது.

ஸ்பீல்பெர்கை பொருத்தவரை சிறப்பான காட்சிக்காக பயங்கரமாக மெனக்கெடுவார். "ஆம்பலின்" படப்பிடிப்பின் போது ஒரு சூரிய உதயக் காட்சியை காட்ட வேண்டும். ஒரு வார படபிடிப்பு நாட்களில் தினமும் சூரியனை காட்சிப்படுத்துவார் ஸ்பீல்பேர்க். நிறைய காட்சியிலிருந்து சிறப்பான ஒன்றை எடுத்துக்கொள்ளலாம் என்பது அவரின் தியரி.

அதனால் அந்த தொடரின் படப்பிடிப்பில் கொஞ்சம் சுதந்திரமின்மையை உணர்ந்தார். ஆனால் கொடுக்கப்பட்ட கதையை சிறப்பாக எடுத்திருந்தார்..

பிரம்மாண்டம் வளரும்...

இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.


அடுத்து

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.