ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦04 - அக்னிப்பார்வை
சினிமா எனும் காதலி.
"Life was like a box of chocolates. You never know what you're gonna get."
-Says Forrest Gump in the Movie Forrest Gump.
உண்மையில் ஸ்பில்பெர்கின் தந்தை, ஸ்பீல்பெர்கின் ஆர்வத்தை பார்த்து தன் நண்பர் ஒருவரிடம் சொல்ல, அந்த நண்பர் ஹாலிவுட்டில் யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் வேலை செய்யும் தன் உறவினரிடம் ஸ்பீல்பேர்க் பற்றி கூறியிருந்தார். என்ன அவரை சந்திக்க ஹாலிவுட்டை சுற்றிக்காட்டும் ’டூரிஸ்ட் பஸ்’ அனுமதிக்கவில்லை, அதாவது பேருந்து சுற்றிக்காட்ட புறப்பட வேண்டும். ஒருவருக்காக ஒரே இடத்தில் காத்துக்கொண்டிருக்க முடியாதல்லவா. அதற்கு தான் இந்த கழிவரையில் ஒளிந்துகொள்ளும் நாடகம்..
 |
’சக் சில்வர்ஸ்’. இவர் தான் அந்த யுனிவர்சல் ஸ்டுடியோ ஊழியர். ஸ்பீல்பெர்கின் ஆர்வத்தை பார்த்து அங்கு மூன்று நாட்களுக்கு ஸ்பீல்பெர்க்கை அனுமதிக்கும் நுழைவு சீட்டை வாங்கிக்கொடுத்தார்.அந்த மூன்று நாட்களில் ஸ்பீல்பெர்க் யுனிவர்சல் ஸ்டுடியோ முழுவதும் சுற்றி வந்தார். சின்ன சின்ன எடுபுடி வேலைகளை செய்தார். எல்லா இடங்களிலும் நுழைந்து திரைப்பட வேலைகள் நடக்கும் விந்தைகளை பார்த்தார். பொடிப்பையன், உள்ளே தைரியமாக நுழைவதை யாரும் தடுக்கவில்லை. இவர் ஏதோ ஸ்டுடியோ சொந்தக்காரரின் மகனாக இருக்கலாம் என்று நினைத்துவிட்டனர். அதைவிட கொடுமை. மூன்று நாள் கழித்து இனி உன்னை உள்ளே அனுமதிக்க என்னால் ஒன்றும் செய்ய முடியாது என சக் சில்வர்ஸ் கைவிரித்துவிட, ஸ்பீல்பெர்க் நான்கவது நாள் எப்படி உள்ளே நுழைவது என சிந்தித்தார். வெற்றிகரமாக உள்ளே நுழைந்தார்! |
குழப்பமான அந்த தருணத்தில், முதலில் ஸ்டிவன் செய்தது, நேர்த்தியாக உடையணிந்துக்கொண்டது. அவர் கடந்த மூன்று நாட்களில் நுழைவு சீட்டை காட்டியதில்லை. ஆனால், நுழையும் பொழுது பாதுகாவலரை பார்த்து லேசாக புன்னகைப்பார். இன்று சற்றே தைரியமாக உள்ளே நுழைந்தார். வாசலில் காவலர் நின்றுக் கொண்டிருந்தார். ஸ்பீல்பெர்க் வழக்கம் போல் தன் கையை அசைத்தவாரு ஒரு புன்னகயுடன் உள்ளே நுழைய, காவலரும் புன்னகை செய்து கையசைத்தார். நம்புங்கள் அடுத்த மூன்று மாதங்கள் ஸ்பீல்பெர்க் இது மாதிரி சென்று அங்கு ஊழியராக வேலையே பார்த்தார்.
பெரும்பாலும் எடுபுடி வேலைகள். சம்பளமெல்லாம் இல்லை. என்ன யூனியன் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்பீல்பெர்க் அங்கு எல்லா துறைகளிலும் எடுபுடி வேலைகள் செய்தார். எடிட்டிங் கற்றார். திரைக்கதை எழுதுவதை பற்றி கற்றுக்கொண்டார். ஷூட்டிங் என்றால் அங்கும் எடுபுடி வேலைகள் என்று அங்கு நடக்கும் பல வேலைகளை பற்றியும் கற்றுக்கொண்டார்.
ஸ்பீல்பெர்க் முறையாக சினிமாவை பாடமாக ஏற்று படிக்கவில்லை. உண்மையாக சொன்னால் யுனிவர்சல் ஸ்டுடியோதான் ஸ்பீல்பெர்கின் பள்ளி. சக் சில்வர்ஸ் தான் ஆசிரியர். இவருடன் கோலோச்சிய பல முக்கிய இயக்குனர்களான கபோலா, மார்ட்டின் ஸ்கர்ஸீஸே, ஜார்ஜ் லூகாஸ் எல்லாம் அமெரிக்க தேசிய திரைப்பட கல்லுரியில் திரைப்பட தொழில்நுட்பத்தை படித்தவர்கள். ஸ்பீல்பெர்க் சாதரண கல்லூரி பட்டம் கூட வாங்காதவர்.
ஸ்பீல்பெர்கின் தந்தைக்கு இதே பெரிய கவலையாக போய்விட்டது. அவர் சினிமாவை பொழுதுபோக்காக மாத்திரம் தான் பார்த்தார். அது எப்படி தொழிலாகும்? ஸ்பீல்பெர்க் ஒரு எஞ்சினியராக வரவேண்டும் என்பது அவரின் ஆசை. காரணம் முறையாக திரைப்படத்தை பற்றி கல்லுரியில் படித்தவர்களே டிஸ்னி பூங்காவில் நுழைவுச்சீட்டு பரிசோதகராக மாறும்போது, பொழுதுபோக்கிற்கு 8மிமி கேமராவில் படம்பிடிக்கும் ஸ்பீல்பெர்கின் எதிர்காலத்தை பற்றி அர்னால்ட் மிகவும் வருந்தினார்.
 |
ஸ்பீல்பெர்கை லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார். ஸ்பீல்பெர்கிற்கு பள்ளி சுத்தமாக பிடிக்கவில்லை. என்ன ஹாலிவுட் பக்கத்தில் இருப்பதால் அந்த பள்ளியில் சேர சம்மதித்தார். அர்னால்ட், சக் ஸில்வர்ஸுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். “என் மகன் ஸ்டுடியோ பக்கம் வராமல் ஒழுங்காக பள்ளிக்கு செல்கிறானா என்று மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.” |
அதற்கு சக் சில்வர்ஸ் சொன்ன பதில், “நிச்சயமாக மாட்டேன்". ஸ்பீல்பெர்க் மாதிரியான அறிவாளிகள் நிச்சயம் திரைப்பட துறையில் சாதிப்பார்கள். அதனால், அவனை அவன் போக்கில் விட்டால் நிச்சயம் அவனால் சாதிக்க முடியும். நீங்கள் ஒரு நல்ல தந்தை. அதனால் அவன் எதிர்காலத்தை பற்றிய பயம் உங்களுக்கு உள்ளது. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஸ்பீல்பெர்கின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவதை விட, அவனை நம்புவது மாத்திரம் தான்.”
அர்னால்ட் நம்பினார். ஸ்பீல்பேர்க் தன் வேலைகளை தொடர்ந்தார். பள்ளிக்கும் அவ்வப்பொழுது சென்றார். பள்ளியில் ஸ்பீல்பெர்க் படுமோசம். சேட்டைகளில் அல்ல படிப்பில்.
ஒரு நாள் வகுப்பில் தவளையை அறுத்து பாகங்களை பிரிக்க வேண்டும். அறுத்தவுடன் ஸ்பீல்பெர்க் ஓடிப்போய் வாந்தியெடுக்க தொடங்கினார். அவருடன் வாந்தியெடுத்த மற்ற அனைவரும் பெண்பிள்ளைகள். யாருமே தவளைகளை அடைக்காமல் வர தவளைகள் அங்குமிங்கும் துள்ளி வகுப்பே ரணகளமாகி போனது.
எப்பொழுதும் ஸ்பீல்பெர்க் ஏதவாது ஒன்றை யோசித்தபடியிருப்பார். குறிப்பாக அடுத்து என்ன செய்வது. தந்தை ஒருபக்கம் அழுத்தம் கொடுத்தபடி, தான் தேர்ந்தெடுத்திருக்கும் துறையின் கடினங்கள் ஒருபக்கம்.
ஸ்பீல்பேர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். உண்மையாக சொல்லவேண்டுமானால் அது தான் ஸ்பீல்பெர்கின் இந்த மாபெரும் வெற்றியின் சூத்திரம். காதல்....சினிமாவின் மீது காதல்.. சினிமா எடுப்பதின் மீது காதல்.
ஸ்பீல்பெர்க் இயக்குனராக ஆகவேண்டும் என்று முடிவு செய்தது, தனித்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. புகழ் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஒரே காரணம், அவருக்கு படம் எடுப்பது மிகவும் பிடித்திருந்தது. சம்பவங்கள், திரைக்கதை, அதை படமாக்கும் விதம், அதை மற்றவர்கள் ரசிப்பது என இந்த துறையின் அனைத்து விஷயங்களும் அவருக்கு பிடித்திருந்தது. அதனால் அவருக்கு கஷ்டம் தெரியவில்லை, தெரிந்தாலும் இஷ்ட்டபட்டு கஷ்டப்பட்டார்.
ஸ்பீல்பெர்கின் எதிர்காலத்தை மாற்றும் ஒரு நிகழ்வு அப்பொழுது நடந்தது. அவர் எடுத்த ஒரு குறும்படத்தால்.. அடுத்த வாரம்
பிரம்மாண்டம் வளரும்...
இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.