ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦03 - அக்னிப்பார்வை
முதல் படம்.
Pick up a camera. Shoot something. No matter how small, no matter how cheesy, no matter whether your friends and your sister star in it. Put your name on it as director. Now you're a director. Everything after that you're just negotiating your budget and your fee.
--James Cameron
பள்ளியை வெறுத்த ஸ்பீல்பெர்க், அதே நேரம் தன் கேமராவிற்கும் அதில் இருக்கும் நிழற்படங்கள் கொடுக்கும் போதைக்கும் அடிமையாகினார். அந்த நேரங்களில் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனர் டேவிட் லீன். ஒரு நாள் டேவிட் லீன், இராண்டாம் உலகப் போரை மையமாக வைத்து இயக்கியிருந்த “The Bridge on the River Kwai” பார்த்தார். தனக்கு தன் தந்தை சொல்லிய இராண்டாம் உலகப் போரை பற்றியப் பல கதைகள் நினைவிற்கு வர, இராண்டாம் உலகப் போரை மையமாக வைத்து தானும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார். படத்தின் பெயர் ”Fighters Squad”.
 |
படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஸ்பீல்பெர்க். செட், தங்கள் வீட்டு கார் ஷெட், நடிகர்கள் தன் பள்ளி நண்பர்கள். படத்தின் மையமே போரிட செல்லும் ஒரு விமான ஓட்டியை பற்றியது. மற்றவர்கள் எடுக்கும் படத்திலிருந்து தன் படத்தை வேறுபடுத்த ஸ்பீல்பெர்க் அப்போதைய இராண்டாம் உலகப் போரின் சில ஆவணப்படங்களை பயன்படுத்தி கொண்டார். அதை அடுத்து அவர் கேள்வி |
பட்ட செய்தி ஒன்று அவரை மகிழ்ச்சியின் உச்சதிற்கு எடுத்து சென்றது. அவர்கள் வீட்டின் அருகே ஒரு விமான தளம் இருப்பதும் அங்கு சில முதல் உலகப் போரின், போர் விமானங்கள் இருப்பதும் அவருக்கு தெரிய வந்தது. உடனடியாக ஸ்பீல்பெர்க் அந்த விமான நிலையத்தின் அலுவலரை சந்தித்தார். தன் பள்ளி போட்டிக்காக ஒரு படம் எடுப்பதாகவும் அதற்கு ஷூட்டிங் செய்ய அனுமதி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். அவரும் நிற்கும் விமானம் ஒன்றில் அதை சேதப்படுத்தாமல் படம்பிடித்துக் கொள்ள அனுமதித்தார்.
தன் நண்பனை போர் உடையில் அந்த விமானத்தில் ஏற சொன்னார். பின்பு அவர் சில கருவிகளை இயக்குவது போலவும், உடனடியாக ஆவணப்படத்தில் இருந்த விமானம் புறப்படும் காட்சியை சேர்த்து விமானம் புறப்படுவது போலவும் பின்பு நின்று கொண்டிருக்கும் விமனத்தை தன் கேமரவை அசைப்பதாலும், சில கோணங்களிலும் படம்பிடித்து சேர்க்க உண்மையாக பறக்கும் விமானத்தில் இருப்பது போன்ற ஒரு காட்சியை உருவாக்கினார்.
நன்றாக கவனியுங்கள். பறக்காத ஒரு விமானம். அதை தன் கேமராவை அசைப்பதை கொண்டு படம்பிடித்து விமானம் பறப்பது போல் மாற்றியுள்ளார். அந்த அறிவு தான் பிற்காலத்தில் ஸ்பீல்பெர்கை ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனராக உயர்த்தியது.
யூத சமயத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ’சபாத்’, அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் யூதர்கள் தங்களுக்குள் இனக்கமாகவே இருப்பார்கள் சொந்தாமக இல்லையென்றாலும் கூட. சபாத் நாளன்று யூதர்கள் ஒன்று கூடி இறைவனை பிரார்த்தித்து, அன்று மாலை வரை உண்ணா நோன்பு இருந்து, பின்னர் ஒன்றாக உணவு உட்கொள்ளுவார்கள். அப்படி ஸ்பீல்பெர்க் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்சியிலும் பல யூதர்கள் தாங்கள் ஜெர்மெனியில் ஹிட்லர் காலத்தில் பட்ட கொடுமைகளையும், சித்திரவதைகளையும், வதை முகாம்களின் கொடுமைகளையும் விளக்குவார்கள். ஸ்பீல்பெர்க் அதை கேட்டபடி இருப்பார். மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருக்கும்.
ஸ்பீல்பெர்க் தன்னுடைய அடுத்த படத்தை எடுக்க முடிவு செய்தார், அதுவும் இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி தான் ”Escape to Nowhere”. இந்த முறை தன் தாயின் உதவியை நாடினார், படத்தின் இசைக்காக.
பெரும்பாலும் ஸ்பீல்பெர்க் பள்ளிக்கு செல்வதை விட படம் பிடிப்பதிலே அதிகம் கவனம் செலுத்தினார். பள்ளிக்கு மட்டம் போட தனக்கு உடம்பு சரியில்லை என்பார். அவர் தாயார் வாயில் தெர்மாமீட்டரை வைத்துவிட்டு சமையலறை சென்று திரும்புவதற்குள் அதை பல்பின் மேல் வைத்து சூட்டை அதிகமாக காட்ட வைத்துவிடுவார் ஸ்பீல்பெர்க். அனைவரும் சென்றவுடன் அவரது படம்மெடுக்கும் வேலை தொடங்கும்.
பள்ளியில் படிக்கும் மானவர்களிடமே அதிக பரபரப்பானதாக இருந்தது ”ஸ்பீல்பெர்க் இயக்கும் படத்தில் நடிக்கிறாயா?” எனும் வாசகம் தான் அந்தாளவிற்கு அனைவரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல், இந்த முறை படத்திற்காக பரிசையும் பெற்றார். பரிசு எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊத்தியது போல் முன்பை விட வெறித்தனமாக படம் எடுப்பதில் கவனத்தை திரும்ப வைத்தது.
அர்னால்டிற்கு தன் மகன் கணிப்பொறி வல்லுனராக வேண்டும் என்று ஆசை. ஸ்பீல்பெர்கிற்கோ தன் எதிர்காலத்தின் மீது குழப்பம். அர்னால்ட்-ஸ்பீல்பெர்க் உறவில் விரிசல் விழத் தொடங்கியது. தன் மகன் தன் பேச்சை கேட்பதில்லை. ஒழுங்காக படிப்பதில்லை. இது அர்னால்டின் ஆதங்கம்..
இதன் நடுவே ஸ்பீல்பெர்க் ஒரு முழுநீள திரைப்படத்தை இயக்க முடிவு செய்தார். அது அறிவியல் புனைவுக் கதை. படத்தின் பெயர் “Fire Light” .
வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஒரு பறக்கும் தட்டால் ஒரு நகரத்தில் ஏற்படும் நிகழ்வுகளே கதை.பிற்காலத்தில் இதையே “Closest encounter of the third Kind” என்று எடுத்தார். பயர் லைட் படத்தை பொருத்த வரையில் அந்த படத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியில்லாமல் சிறந்த படமாக எடுக்க முக்கிய காரணமே ஸ்பீல்பெர்கின் அறிவு தான்.
பறக்கும் தட்டு, விண்ணிலிருந்து வருவதை படம் பிடிக்க இரண்டு கண்ணாடியின் நடுவே ’வாசிலனை’ தடவி அதை வெளிசத்தில் காமிரா முன்பு வைக்க ஒரு வித ஆரஞ்சு நிறத்தில் மின்னிய ஒலிகளை படம்பிடித்தார். தன் அம்மாவிடம் சொல்லி செர்ரி பாட்டில்களை வாங்கிவர வைத்தார். அதை சுவர் முழுவதும் விசிரியடித்து படம்பித்தார். இப்படி வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே ஒரு முழுநீள படத்தை எடுத்துவிட்டார்.
படம் சின்சினாட்டியிலிருக்கும் ஒரு திரையரங்கில் காட்டப்பட்டு மிக ஆரவரத்துடன் பாரட்டப்பட்டது. படத்தின் தயாரிப்பு செலவான 600$ வசூல் செய்தும் கொடுத்தது. நகர பத்திரிக்கைகளும் ஸ்பீல்பெர்க்கை கவனிக்க தொடங்கினார். ஸ்பீல்பெர்க் முடிவு செய்துவிட்டர் சினிமா தான், தன் வாழ்க்கை என்று. அப்பொழுது அவருக்கு வயது 15.
சினிமா என்று முடிவு செய்துவிட்டபின் அதை பற்றி சிந்திக்க தொடங்கினார். படிப்பு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து ஸ்பீல்பெர்கின் வாழ்க்கையில் இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அது பள்ளியில் விடப்பட்ட கோடைக்கால விடுமுறை.
நாம் இன்று அமெரிக்கர்களின் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உடையில், நடையில், உணவில் சரி மனதளவில்?
அமெரிக்கர்களை பொருத்தவரையில் ஒரு குழந்தை 15 வயது வந்தவுடன் அவர்களுக்கான செலவுக்கு அவர்கள் ஏதாவது வேலை செய்துக்கொள்ள வேண்டும். பணம் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். நம்மில் எத்தனை பேர் இப்படி வாழ்கிறோம்.
அதனால் கோடைக்கால விடுமுறையில் மாணவர்கள் சின்ன சின்ன வேலை செய்வது சகஜம் தான். ஸ்பீல்பெர்க் தன் கோடை விடுமுறையில் முதலில் வேலைக்கு செல்லவில்லை. ஹாலிவுட்டை சுற்றி பார்க்க சென்றார். அங்கு யுனிவர்சல் ஸ்டியோவை பார்த்ததும் ஒரு எண்ணம் தோன்றியது.. தன்னை ஏற்றி வந்த பேருந்தை வேண்டுமென்றே தவறவிட்டார். ஒரு கழிவரைக்குள் ஒளிந்துக்கொண்டார். பேருந்து போனது. ஸ்பீல்பெர்க் வெளியே வந்தார்.. ஸ்டியோவில் நுழைந்து தன் சோகக் கதையை சொல்லத் தொடங்கினார்...
பிரம்மாண்டம் வளரும்...
இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.