பாகிஸ்தானியக் கவிஞர் -
கைலா பாஷா (Kyla Pasha)
பாகிஸ்தானின் தற்போதைய கவிஞர்களுள் ஒருவரான பாஷா. இணையதளத்தில் வரும் Chay Magazine-க்காக பெயர் பெற்றவர், 'பெண் கவிஃ என்று அழைத்தால் ஆத்திரம் கொள்பவர்,
பாகிஸ்தானின் அரவாணிகள். தன்பால் காமத்தினர் இன்னும் தலைமறைவாக இயங்கி வருவது பற்றி அதிருப்தி கொண்டிருப்பவர், அவர்களுக்கான இயக்கம் தொடங்கி நடத்துவதில் அக்கறை மிக்கவர்,
"மாற்றுப்பாலிரியல். பாலிரினம் மற்றும் பாரிலினம் என்பன பற்றி எதனை விவாதிக்க வேண்டுமானாலும் அது எவ்வளவு சிரமமானது என்பதைப் பற்றி பார்க்கிறோம், உடல் மற்றும் பாலியல் பற்றி பேசுவது தடை செய்யப்பட்டதாக உள்ளது,
மாற்றுப் பாலினத்திற்கான இயக்கம் மற்றும் chay Magazine ஆகிய இரண்டையும் நடத்துவதில் அவருடன் சேர்ந்து ஒத்துழைப்பவர் அவரது சிநேகிதி சாராஷூஹெல்,
அரவாணிகளுக்கு உதவும் வகையில் அவர்களைப் பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ள பாகிஸ்தானிய உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை பாஷா போன்றவர்களுக்குப் பக்கத் துணையாக இருக்கிறது,
இஸ்லாமாபாத்தைச் சேர்ந்தவரான பாஷா. அமெரிக்காவில் பயின்று. தற்போது லாகூரின் தேசிய பல்கலையில் பேராசிரியை.
தூக்கி எறியப்பட்டது
என்னுடன் தண்ணீர் மீது நடக்க
விரும்புகிறாயா என்று உன்னை வினவினேன்
பதிலளிக்கும் வகையில் நீ
ஆம் என்றாய், தண்ணீர் மீது நடந்தோம்
எந்தக் குற்றமும் நிகழவில்லை.
உன் இருதயம் வேகமாய்த்துடித்தது
உன் காலடியை விடவும் மற்றும்
உன்னைக் கீழே இழுத்தது தவிர,
இப்போது. என் கைகள் இன்னும்
உன் உள்ளங்கையில் பிணைந்திருக்க. நீ
கீழே இருக்கிறாய் மற்றும் கடரிலில் எறியப்பட்ட ஒன்றாக
நீ மாறுவதைக் காண்கிறாய், கடல்
படுக்கையாக இருக்க ஆசைப்படுகிறாய். ஆனால்
நீரின் மெல்ரிலிய சருமத்தின்
கீழே உன்னைக் காண்கிறேன்.
உனக்குச் செதில்கள் முளைப்பதைப் பார்க்கிறேன், என் காதரிலில் சாய்வதற்கு
கடற்படுகை மிகத்தொலைவானது,
நீ தூங்குமுன்னர் நீந்திக் கொண்டிருப்பதாய்
பல காதங்கள்,
இப்போது. என் கை
இன்னும் உன் உள்ளங்கையில் இருக்க.
மேலே வா மூச்சு வாங்க (அ) கீழே போ. எல்லாம் ஒன்றுதான்,
இப்போது உன் ரோமக் கால்களுக்குள்
கசிய. என்னைப் போகவிடு (அ) என்னைப் போகவிடாதே,
எல்லாம் ஒன்றுதான்,
நீ
தண்ணீர் மீது நடப்பவன்,
நீ
கடலின் அபிமானத்துக்குரியவன்,
முக்கியமற்ற புள்ளிவிபரமாக காதல்
இருந்தபோது நாளினை நகர்த்திற்ற பூமி,
மார்புக்கருகில் நெருங்கியிருந்த
துண்டிக்கப்பட்ட கைகள் சாட்சியமாயிருந்தன,
கூட்டத்தின் மத்தியிலே முக்கியமற்ற புள்ளிவிபரத்தை –
யாருக்காக கடவுள்விட்டுச் சென்றார்,
என்னை தகர்த்தெறி. என் வாழ்வில்
எடுத்துக்காட்ட இவ்விளக்குகள் தவிர்த்து வேறெதுவும் இல்லை,
என்னை இழுத்துப்போடு. அழித்து விடு. என்தலையை உருட்டி விடு,
தரை மீது – என்னிடம் வேறெதுவும் இல்லை
மூடியுள்ள என் விழிகள் தவிர,
நாம் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டோம்
வீதிகளில் நாட்களின் சின்ன இறுதியில் அப்போது பூமி
இயக்கத்தை நிறுத்திற்று, நம்மைப் பைகளுக்குள்
நுழைத்துக் கொண்டோம் - பிற்பாடு பெயரிட்டுக் கொள்ளலாம் என –
ஆம். இத்தோன் என் காதலனுடையதாக இருந்தது. நானறிவேன்
அந்தச் ஷுக்களை அவற்றைப் புதைக்க என்னிடம் திரும்பத்தா;
புதிதாய் ஒருவரை நான் நேசிக்க வேண்டும்,
மற்றும் பூமி மீண்டும் இயங்கிற்று,
இரத்தம். நிணம். அதிர்ச்சி. சிவப்புக் குறி ஒன்று
எண்ணத்தின் இரயிலென விரைந்து
எங்களை எடுத்துச் செல்ல. நிஜமாகவே
தொலைதூரத்திற்கு எடுத்துச் செல்லும்
எங்கள் வாழ்க்கை வெள்ளித் திரை
விபத்தில் விரிவதைக் கண்டோம் – அங்கே
என்னை நீ தகர்த்தெறிய முடியாது. என் வாழ்வை
இரகசியமாக நான் ஆக்கினாலும்; அல்லது
என்னை இழுத்துப் போடு. அழித்து விடு. என் குருதியைத்
தரை மீது பரப்பு,
எடுத்துக்காட்ட என்னிடம் எதுவுமில்லை
மூடியுள்ள
உன் விழிகளைத் தவிர,
கலவை
நமக்குரியவை அல்ல இந்நாட்கள்
நீயும் நானும் நடக்கப் போகும் சாலைகள்
சிப்பாய்கள் போடுகின்றனர்
நமக்கென வாழ்வொன்று இருந்து.
நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளைப் புதைக்கின்றனர்,
நமக்குரியவை அல்ல இவ்வில்லங்கள்.
ரோந்து செல்லும் சிப்பாய்கள் சுட்டுத்தள்ளுகின்றனர்
ஓநாய்களையும். பேய்களையும் ஆண்களையும். பெண்களையும்
சாப்பாட்டுக்கு என்ன கிடைக்குமென்று ஜன்னல்களில் பார்க்கின்றனர்,
மீட்பவர்களுக்காக அதியற்புத நாயகர்களுக்காக
காத்திருங்கள். சாலையில் பரப்பப்பட
வேண்டிய முட்கம்பிகளும் கபாலங்களும் கண்ணிவெடிகளும்
சாலையில் கிடக்கும் என்று எதிர்காலங்கள்
பொய்யுரைக்கின்றன – காலம் வரும்போது
கலவையுடன் சேர்ந்து கலவையாகும்
என்கின்றன நல்ல புத்தகங்கள்,
சாலைக் கற்களில் வசிக்கிறேன், பொந்திலுள்ள
களையென என்னை விடுவித்து.
தெருக்கம்பத்தை. தெருவிளக்கை. கட்டிடங்களுக்கிடையிலான வானத்தை
அடைய முற்பட்டேன் – ஆனால்
பின்னோக்கித் துள்ளினேன், வானுயர்
கட்டிடங்களில் என்ன இருக்கிறது
ஆனால் கற்களின் கீழே ஊர்வதும். வலை பின்னுவதும்
பூமியைத் தழுவுவதும் – இதுதான் என் நிலம்,
இதுதான் என் தூசு. நீ மிகவும் பெரிய ஒன்று.
உன் பக்கமாக உன்னைத் திருப்பி. உன்
ஜன்னல்களுக்குள் பார்ப்பேன்.
பிரிவு பிரிவாக என்ன சமைத்திருக்கிறாய் என்று பார்ப்பேன்.
உன் அலமாரிகளில் என்ன சேகரித்துள்ளாய் என்று பார்ப்பேன் –
உன்னைத் திறப்பேன். நோயுற்றவனென உன்னைத் திறப்பேன்.
உன்னை நலமாக்க உன் இருதயம் வேண்டும்.
இங்கிருந்தே. உன்னை எழுப்பியுள்ள சரளைக் கற்களிலிருந்தே.
உன்னை நலமாக்குவேன்,
நான் கலவை மற்றும் கலவை
காலம் வரும்போது கலவை வீட்டிடம் செல்கிறது,
அவனது பிரிவின் உஷ்ணம்
அவன் வருந்தவில்லை அவ்வளவாக,
தெருக்களை அளக்கும் கவலைகள்
அவனை அடைந்திருக்காது குறைந்தபட்சம்
இன்னும் இறந்திருக்காதவர்களைக் கொண்டு
நாட்களை எண்ணத் தெரியும் அவனுக்கு,
தன்பாதங்களால் நகரத்தை அளந்தறிந்து
தன் இருதயத்தின் புதுப்படங்களை அவளிடம்
கொண்டு சேர்க்க நினைத்தான்,
ஆனால் சாலைகளின் சங்கீதத்தையும் விளக்குகளையும்
அவள் கேட்டதே கிடையாது. அவளறிந்ததெல்லாம்
வறண்ட சாலையை மிதிக்கும் அவன்
பாதங்களை மட்டுமே. அவனில்லது அவள்
வீட்டுக்குப் புறப்பட்டாள்,
நடப்பது அலுத்துப்போய் நிற்கத் தவறி,
விளிம்பொன்றைக் காணாது. விழவில்லை;
ஆனால் மெதுவாக. திடீரெனத் தனக்கு மேலுள்ள
அவளது மேகங்களை எண்ணிப் பார்க்காது.
தனக்குரிய வழியில் ஈரமாகி தாராக கலவையாக கரைந்தான்,
பல ஆண்டுகளுக்குப் பின்னர். அவன்
பிரிவின் உஷ்ணத்தை அவள் இன்னும் உணர்வாள்
வறண்ட அவன் வீதிகளில்
அவள் கொட்டித் தீர்க்கும்போது,
தூய்மையில்
தனக்குக் காதல்
தெரியாது என்கிறாள், ஆனால்
அவள் கடலில் அலையும்போது மணலுக்கும்
இரும்புக்குமான காதல் இருக்கிறது, இறந்தவர் மீதான காதல் இருக்கிறது,
அவள் உன்னிடம் வரப்போவதில்லை இப்படியே,
சுழலொன்றில் விழுந்துபோய்விட்டாள்
உலர்ந்த அத்தருணத்தில் கடற்படுகைகளில்
அவள் வாசிப்பது என்னவென்று யாரறிவார்?
அவள்
கரையில் இருக்கும் பெண்
அவள் காலடியில் இருப்பவன்
மற்றும் காத்திருத்தல்,
நீ
அவள்
உம்மென்று சொல்லும்போது நீ கேட்பது – மற்றும் அதற்கும் மேலே –
இறந்தவர் மீதான காதல்
அவளை மிதிக்க வைக்கின்றது மற்றும் அவள் கைகள்
திறந்து நிற்கின்றன – அவள்
உள்ளங்கைகளில் இருப்பது உன் முகம்
உன்னால் நிற்க முடியவில்லை – ஆனால் அவள்
நேசிக்கிறாள் உன்னை,
அவள் கடலில் அலையும்போது
உஷ்ணத்தில்
நீ எங்கிருப்பாய் என்பது
அவளுக்குத் தெரியாது,
இரும்பு உன்னை மீண்டும்
பற்றியிருக்குமென்று அவளறிவாள்,
இரும்பு உன்னை வைத்திருக்கும் என்று
அவள் நம்புகின்றாள்,
ஆதாரங்கள் :
1) The New Indian Express, Feb 20, 2010
2) Internet
|