ஹோசாங்க் மெர்சண்ட் : (Hoshang Merchant)
ஹைதராபாத்தின் பார்ஸியோகி
குறிப்பு :
ஹோசாங்க் (பி,1947) பார்ஸி இனத்தவர், ஹைதராபாத் பல்கலையில் Professor of Poetry and gay studies ஆகப் பணியாற்றி வருகிறார், 20 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார், yarana : Gay Stories from india (Penguin, 1999) என்பதன் தொகுப்பாசிரியர், ஜமீலா நிஷாத்தின் உருதுக் கவிதைகளை சாகித்திய அக்காதெமிக்காக மொழி பெயர்த்திருக்கிறார் (2008).
உலகமெல்லாம் சுற்றி வருவதில் ஆசை கொண்ட ஹோசாங்க். தர்மஸாலாவில் பௌத்தத்தையும். பாலஸ்தீனம் மற்றும் இரானில் சூஃப்பித் தத்துவத்தையும் பயின்றுள்ளார்.
தனது தன்பால் காமத்தை முதல்முறையாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட கவிஞர், ஒரு கலகக்காரனாகவும் பாலினத்தில் தலித் என்றும் தன்னை விவரித்துக் கொள்பவர்.
"புர்டூ பல்கலையில் இருந்தபோது. தன்னை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துச் சென்றவன். தனக்கு உச்சகட்டம் வரவில்லை என்றதால், தன்னைத் தாறுமாறாக அடித்து வீதியில் போட்டுவிட்டுப் போய்விட்டான். அதிலே அவன் விரும்பிய உச்சகட்டம் கிடைத்திருக்கிறது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் கவிதை எழுதத் தொடங்கினேன் என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
தனது பாலியல் சிக்கல்களை அவர் எதிர்கொண்டது பற்றி இப்படி விவரிக்கிறார்;
என் பாலியல் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் பொருட்டு, பௌத்தத் துறவியாக விரும்பினேன். மனதளவில் என்னைக் காயடித்துக் கொள்ள விரும்பினேன். உடல் ரீதியில் என்னைக் காயடித்துக் கொள்ள முடியாததால்! அமெரிக்காவிலுள்ள எனது தன்பால் காம நண்பர்கள் தங்களை காயடித்துக் கொண்டு, ஆணுறுப்புகளை அகற்றிப் பெண்ணுறுப்புகளைப் பொருத்திக் கொண்டனர், என்னையும் அதுமாதிரி செய்து கொள்ளத் தூண்டினர். அந்த இரவுதான் என் வாழ்வில் மிகவும் பீதிமிக்கது ஆகும். அமெரிக்கப் பண்பாடு அப்படியானது. உலகியல் ரீதியானது. இந்தியாவில் அப்படி இல்லை. அர்த்தநாரீஸ்வரர் என்றே ஒரு தெய்வம், ஒரேநேரத்தில் நீங்கள் உங்கள் உடலில் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்க முடியும் என்கிறது. மனம் என்பது தொட்டுணரக் கூடியது. உடல் அங்கே வேண்டியிருக்கிறது - என்று அவரக்ள் எண்ணிப் பார்ப்பதில்லை,
கவிதை :
ஹோசாங்க் மெர்சண்ட் : ஹைதராபாத்தின் பார்ஸியோகி
சிந்து
"நான் பாவம் புரிந்திருக்கிறேன், நேபியர்
நான் முதலில் காதலைக் கண்டறிந்தது சிந்திப் பையனிடம்
அவன் காதலை உணர்ந்தாலும் சிறுவனாயிருக்கவே பின்புறம் இயங்கினான்
ஓரிரவில் கடவுளிடம் செல்லும் செங்குத்துப் படிக்கட்டில்
புனித யோவானைப் பற்றிய புனித ஆவிபோல
அது ஒரு சில்லிட்ட இரவு
இரயில் கிழித்துச் சென்று கொண்டிருந்தது
இஸ்துஸ்தானத்தின் இருதயத்தை
அது ஓர் நிலையத்தில் நின்றபோது
விடிந்திருந்தது மற்றும் எங்கள் காதல் அறியப்பட்டிருந்தது,
இந்துஸ் கடலைச் சந்திக்கும்போது
தான் பனியின் குளிர்ந்த மகளென்பதை மறந்து போகின்றது
ஆழம் குறைந்து வெதுவெதுப்பாகி காணாது போகிறது மணலில்
இம்மணல் தேசத்தினை
சிந்து என்கின்றனர்
மற்றும் அரேபியர் வந்தனர்
அங்கே இந்துக்களைக் கண்டு
இப்புதை மணல்களின் பூமியை இந்துஸ்தான் என்றனர்.
பையன்கள் துருக்கியர் ஆயினர்
சீக்கிரமே பிற கடவுளரின் பிரதிபலிக்கப்பட்ட வெளிச்சத்தில்
விழிகள் கண்ணாடிகள் ஆயின
மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையே
கதகதப்பான நேசம் பிழியப்பட்டது ஓயினென
மக்கள் மறந்து போயினர் தம்பெயர்களை
நினைவுபடுத்தினர் பெயரினை
அதனையும் அவர்கள் சீக்கிரமே மறந்தனர்;
பெயரை ஏன் வினவுகிறாய்? என்றனர்
மற்றும் நினைவுபடுத்தினர் நேசத்தை மட்டும்
ஓர் இடையன் குழல் இசைத்தான்
ஒரு மன்னன் வனத்தில் அவனைப் பின்தொடர்ந்தான்
மொகலாய மன்னனின் மகன் ஒருவன்
வெற்றி கொள்ளச் செல்லும் வழியில்
பாரசீகத்தில் உள்ள இந்துக் கடவுளரைக்
குறித்துக் கொள்ள வேண்டும் என்று
நினைவு கூர்ந்தான்
நிலைமை காட்டுமிராண்டித்தனமானபோது
வாரிசுகள் வேதனையின்றி மடியத்
துணை புரிந்தது அபின்
ஒரு நண்பன் துரோகியானபோது மரணம் நண்பனாயிற்று
ஆனால் மரணத்தை எதிர்கொள்வது - அபினின்றி?
அல்லது வாழ்வை எதிர்கொள்வது - கவிதையின்றி!
நதி சிவந்து சென்றது அன்று
பெண்கள் தன் முலைகளை தட்டில் எடுத்துச் சென்றனர்
வன்புணர்ச்சியாளரிடம்
மனிதர்கள் தம் தலைகளை எடுத்துச் சென்றனர்
வெற்றி கொள்பவனிடம்
மற்றும் இவ்விநாசங்களைக் கூறும் கவிதைகள்
தூசு படிந்து கிடக்கின்றன இரயில் நிலையங்களில்
ஆனால் ஸாஜரிலின் பாலும் ரூமியின் ஒயினும்
தென்றலின் மூச்சும் இல்லை என்பதினூடாக
வீசிச் சென்று கூறுகின்றன ; அவன்
யாருடைய கைகளில் மடிந்தேனோ அவனை
எண்ணிக்கொள்கையில் :
அப்போது சிந்தனை நின்றுவிட்டது அந்த இரவு இரயிலைப் போல
மற்றும் என் இதயத்துடிப்பு பொது நிகழ்வானாது.
நேர்முகம் :
சென்னையில் பிரகிருதி திருவிழாவுக்கு வந்திருந்தபோது ஹோசாங்க் அளித்த நேர்முகம்;
கே : ஆளுமை என்பதில்லை என்று புத்தர் கூறுவதால். கவிஞர்கள் நேர்முகங்கள் தரமுடியுமா - தர வேண்டுமா?
ப : ஆமாம். ஆளுமை என்பதில்லை. என்னுடையதும் ஙண்ர்ட்ஹன்ஷ் -னுடையதுமான உதாரணங்களைக் கூறுகிறேன். பௌத்தமதத்தினன் ஆகிட எண்ணினேன்; மாறாக நாட்டியமாடி கவிதையிடம் திரும்பிவிட்டேன். நான்காம் தலாய்லாமாவினுடையது போன்ற பௌத்தக் கவிதை இல்லை. என்னிடம் சிலவான உடமைகளே உண்டு. ஆனால் என்னால் புத்தனாகிட இயலாது. ஏனெனில் நான் யாரோ ஒருவர் ஆவதுபற்றி நிறையவே யோசித்தேன். ஹென்றி மியோஹாக்ஸ் தன் கவிதை புனிதமாக்கப்படுவதை விரும்பவில்லை. தன்னைப் புகைப்படம் எடுக்கக்கூட அவர் அனுமதிக்கவில்லை அவர் இறக்குந்தருவாயில். "நான் இப்போது தலாய் லாமாவின் மனத்தில் இருக்கிறேன்" என்று செவிலியிடம் கூறினார். அவள் ஆக்ஸிஜன் அளிக்க முற்பட்டபோது. "வேண்டாம்! என்னைப் பயணிக்க விட்டுவிடு" என்றார்.
கே : உங்கள் கவிதையின் நோக்கம் என்ன?
ப : தன்பால் கவிதையின் நோக்கம் கூட சட்டத்தை மாற்றுவது அல்ல. "பொருள்களற்ற பார்வைக் கோணத்திற்கு வந்து சேருவதே எல்லாக் கவிதையினுடையதுமான நிஜமான நோக்கம்" என்பது நான் என் கவிதைகளில் பயன்படுத்தும் வரையறை. "பொருட்களற்ற" என்பது "புறவயமற்ற" என்று அர்த்தமாகாது. ஏனெனில் எந்தவகையிலும் கவிதை என்பது அகவயக் கலைதான். கவிஞர்களுக்கு முடிவு கட்ட வேண்டியது பிரச்சினைகள் இல்லை என்பது இதன் பொருள். அவர்களது இலட்சியம் கவிதையே. வாசக அனுபவத்திற்குப் பொருந்திப் போகும் வகையில் கவிஞர்களாகிய நாம் நம் அனுபவத்தை "ஆக்கும்படி வேண்டி இருப்பினும். நாமெல்லாம் ஒரே வெளி/காலத்தினைப் பகிர்ந்து கொள்கிறோம். சில மாபெரும் கவிஞர்கள் தமக்கான வெளியையும் காலத்தையும் ஆக்கிக் கொள்கின்றனர். விட்மனும் மெல்வில்லும் டிக்கின்ஸனும் தன்பால்மோகங் கொண்டவர்கள் என்று அறியவரும்போது ஆச்சரியமாய் உள்ளது. அவை தன்பால் கவிதைகள் என்று நாம் அறிந்து கொள்வதில்லை, மாறாக 150 ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட ஆழ்நிலையாளர்கள் என்றே அறிந்து கொள்கிறோம். இந்த சூழ்நிலை பற்றி ஒரு கவிதை, டிக்கின்ஸன் வார்த்தைகளில் சுருக்கிக் கூறுவதானால்.
"To make a praise
It takes fancy, a clover and a bee
fancy alone will do
if bees are few''
கே : தன்பால் மோகங் கொண்டவருடன் தலித்துகளை ஏன் சமப்படுத்துகிறீர்கள்?
ப : ஏனெனில் பெண்களைப் போலவே தன்பால் காமத்தினர் பாலினதலித்துகள். அத்துடன் சமூகக் காரணங்களுக்காக அடையாளங் காணப்படுவதை மறுதலிக்கும் தன்பால் காம தலித்துகள் உள்ளனர், இருவருமே ஒடுக்கப்பட்டவர்கள்தான். ஒடுக்குமுறை வடிவங்கள் வேறுபடுவதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒடுக்குமுறை ஒடுக்குமுறையே. அரசியலுக்குக் கூட்டணிகள் தேவைப்படுகின்றன. தன்பால் காமத்தினரை பெண்கள் ஒடுக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், தன்பால் காமத்தினரை ஒடுக்கும் சில பெண்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்றே தலித்துகளுக்கும். சிறுபான்மையினரைப் பிரித்து அவர்கள் பொது மேடையில் ஒன்றுபடுவதைத் தடுப்பது. தம் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக. எதிர்பால் காமங்கொண்ட ஆண்களின் தந்திரமே. பொதுவான விடுதலை மற்றும் வாழ்தலுக்கான சாத்தியப்பாட்டினை திறக்காதுபோனால் என் போராட்டம் முக்கியமற்றதாகிவிடும்.
கே : நீங்கள் இந்தியாவில் உங்கள் காலகட்டத்திற்கு முன்பே வந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா?
ப : இல்லை ! கவிஞன் எப்போதும் தன் காலத்தவனே, பின்தங்கி இருப்பவர்கள் மற்றவர்களே.
கே : எழுத்து ஓர் அரசியல் நடவடிக்கையா?
ப : இல்லை, ஆனால் நீங்கள் அரசியல் சாராதவர் என்றால். நீங்கள் ஆளும் அமைப்புடன் சேர்ந்திருக்கிறீர்கள் என்றாகும். உங்கள் இருதயம், மனம் மற்றும் உடலினை மாற்ற விரும்பினால் அது அரசியலாகும். பாலுணர்வு அந்தரங்கமானது என்று கூறுவது பாலுணர்வு காதலைப்பற்றியதே. சுரண்டும் தன்மை கொண்டதல்ல என்று பாவனை செய்வதாகும்.
கே : நீங்கள் ஏன் அதிகப்படியாக பயணிக்கிறீர்கள்?
ப : புதிய அடையாளங்கள் பெறுவதற்காகப் பயணிக்கிறேன் மற்றும் அவைபற்றி எழுதும் பொருட்டு. காணாமல் போய்விடுவதை அனுபவிக்கும் குழந்தைகளின் நிலை போன்றது, ஆளுமை திடமானது அல்ல என்றெனக்கு இது நினைவூட்டுகிறது, புதியதொரு தேசத்தில் மக்களுக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் விரும்பியபடி மாறிக் கொள்ளலாம்.
கே : பார்வையாளர் எதிர்வினை எப்படி இருக்கிறது? உங்களின் பிடிவாதம் அவர்களுடன் எப்படி சேர்ந்து அமர்ந்திருக்கிறது?
ப : என்னுடையது தார்மீகப் பிரபஞ்சமல்ல, ஆனால் அது கவிதையின் அழகான பிரபஞ்சம், அவர்களுக்கு நான் எரிச்சலூட்டினால், அவர்களது ஈடுபாட்டுக்கு மன்றாடுகிறேன். பெரும்பாலும் அது கிடைத்துவிடுகிறது!
ஆதாரங்கள் :
(1) Hyderabad's Parsi yogi / Deepti Nair / The New Indian Express, April 17, 2010
(2) Universe of Verse /இணையதள நேர்முகம்
(3) Muse India / / இணையதளம் - கவிதைக்கான ஆதாரம்.
|