கேரி ஸ்நைடர்
கவிதைகள் / தமிழில் தேவதாஸ்
நாகரீகம்
அவர்கள் சிக்கலானவற்றைச் செய்பவர்கள்
ஆயிரக்கணக்கில் நம்மை இழுந்து வந்து
செயல்பட வைப்பவர்கள்
உலகம் நரகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது
இவ்வெல்லாக் கிராமங்களுடனும் தடங்களுடனும்
நாட்டு வாத்துத் தடங்கள்
முன்னிருந்தபடி இல்லை
காட்டெருதுகள் வளர்கின்றன அரிதாக
கொண்டுவாருங்கள் என் இறுக்களையும் பிசின்படிவத்தையும்
------------------------------------------------------------------------------------------------------
கழிமுகங்கள் நிறைந்திருக்கையில்
கவிதைகள் பாய்கின்றன
கழிமுகங்கள் தாழ்ந்திருக்கையில்
கற்களைக் குவிக்கின்றோம்
------------------------------------------------------------------------------------------------------
டோட்ஸ§கவா கோர்கில் (Totsugauva Groge) ஏறுதல்
ஒன்றுக்கித்தலைக்
கவனிக்கிறேன்
ஓர் அருவி
------------------------------------------------------------------------------------------------------
சாஞ்சியின் கல்யுவதிக்கு
சில்லிடும் புல்லினில் அரைபாதித் தூக்கத்தில்
மேப்பர்ஸ் மரஙகளிலிருந்து சொட்டுகிறது இரவுமழை
தட்டையான நிலத்தின்மேல்
கவிழ்த்துவைத்த கருங்கிண்ணத்தின் கீழ்
நடுங்கும் துகளின்மேல்
நட்சத்திரங்களை விடவும் சிறியதாய்,
வெளி,
விதையளவாக,
பறவையின் கபாலமென உள்ளீடின்றி
ஒளி பறந்துபோகின்றது அதனூடே
- புலப்படாமல்
உருக்குலைந்த பெரும்பாறை,
கல்லால் மாறின பழைய அடிமரங்கள்,
பாறைகள் பிளக்கின்றன, மணிகள் ஒலிக்கின்றன
எப்போதும்
நேசித்தபடி,
கதையாலான இருவர் மாறுகின்றனர்
நிலைப்படிகளில் ஒட்டி நிற்கின்றனர்
ஈட்டியின் கைப்பிடிக்க ஆண்டுகளின் சிதைவில்
மனதைத் தொடுவதாய்,
இக்கனவு எப்டிப் பார்க்கிறது, நிஜாய் இருந்தது,
இது நீடித்தது என்னெற்றைக்குமா.
---
4. நெடுங்கடந்தல்
வேட்டைக்காலம்
ஆண்டுக்கொருமுறை மான் மானுடரைப் பிடிக்கின்றது
மனிதரை அருகாமையில் கொண்டுவருகின்றன
பல செயல்களைச் செய்கின்றனர்
ஒவ்வொன்றும் குறிப்பிட்டதொரு மனிதரைத் தெரிவு
செய்கிறது. மான் மனிதனைச் சுட்டு,
அவன் தோலை உரித்து, கறியை வீட்டுக்குக்
கொண்டுபோய் தின்கிறது. அப்புறம் மான்
மனிதனுக்குள் இருக்கிறது. அவன் காத்திருக்கிறான்
மற்றும் மறைந்திருக்கிறான், ஆனால் மனிதன்
இதனை அறிவதில்லை. போதுமான மான்கள்
போதுமான மனிதரை ஆக்கிரமித்துக் கொள்ளும்
போது, அனைவரையும் ஒரேயடியாகத் தாக்குகின்
றன. தங்களுக்குள்ளே மான்கள் இல்லாதவர்களும்
திகைப்புற, ஒவ்வொன்றும் சிறிது மாறும்.
''உள்ளிருந்து எடுத்துக்கொள்ளப்படும்'' என்று இது
அழைக்கப்படும்
மான் தடங்கள்
மான் தடங்கள் செல்கின்றன மலைச்சரிவுகளில்
கிராத்தினூடே போகும் ஒற்றையடிப் பாதைகள்
எலும்பு வெள்ளையாய்த் தேய்கின்ற தூசு
தங்குமில்லங்கள் கொண்ட வனச் சரகங்கள்,
வீழ்ந்து போயுள்ளன.
முள்ளாக நெறிபட்டும்
ஊசியெனக் குத்தியும்
உயர்ந்திருக்கும் கோடைகாலப்புற்கள்
மான் தடங்யக்ள இட்டுச் செல்கின்றன தண்ணீருக்கு
பக்கச்சாலைகள் செல்கின்றன எல்லா வழிகளிலும்
ஆகச்சிறந்த சாலையன்றில் குறுகி செல்கின்றன
பின் மங்கிப் போகின்றன எங்கோ சென்றபடி
மான் தடங்கள் சறுக்குகின்றன சாலைகளில்
நழுவிச் செல்கின்றன நகரங்களுக்குள்
தானிய வயல்களிலும் பழத்தோட்டங்களிலும் வந்து போகின்றன
பள்ளிகளின் பக்கமாய் ஓடுகின்றன.
மான் தடம் மற்றும் குறுக்கே ஓடும் தூசுப் பாதைகள்
வீடுகளில் உள்ளன மற்றும் சுவர்களிலிருந்து
வெளிப்படுகின்றன
மற்றும் கட்டுண்டிருக்கிறது மான் என்
கூந்தலினூடே
------------------------------------------------------------------------------------------------------
ரிட்டர் சிகரத்தின் மீது ஜான் மூர்
அதன் முகத்தைத் திரும்பத் திரும்ப அளந்தறிந்ததும்
அதில் ஏறத் தொடங்கினேன், பிடிமானங்களைப் பற்றியபடி
அதீத எச்சரிக்கையுடன் உச்சிக்குப்
போகும் பாதிவழியில் அப்படியே
நிறுத்தப்பட்டேன் கைகள் விரிந்து கிடக்க
பாறை முகத்துடன் ஒட்டிய நிலையில்
கை - காலை
மேலும் - கீழும் அசைக்க முடியாதபடி எனது
விநாசம்
நிச்சயமென்று ஞான்றிற்று. நான் வீழ்ந்தாக வேண்டும்
திகைப்பின் தருணமிக்கும், அப்புறம்
ஜீவனற்ற சரிதல் முகட்டிலிருந்து
கீழுள்ள பனிமலைக்கு
திணறவைக்கும் புகையால்
நிரம்புவதால் தோன்றிற்று என்மனம்
பீதிதரும் இக்கிரகணம்
நீடித்தது கணநேரமே, அப்போது
அதியற்புதமான தெளிவுடன் தகித்தது உயிர்,
சட்டென்று புதியதொரு புலனுணர்வு என்னைப்
பீடித்தாய் தோன்றிற்று. நடுங்கும் என் தசைகள்
திரும்பவும் திமாயின, பாறையின்
ஒவ்வொரு பிளவும் புயலும்
நுண்ணோக்கி மூலம் காண்பாதன ஆயின
என் அங்கங்கள் இயங்கின நேரிதான தன்மையுடனும் துல்லியத்துடனும்
அவற்றுடன் நான் செய்திட எனக்கொன்றும் இல்லை
என்று தோன்றிற்று
------------------------------------------------------------------------------------------------------
முன் வைத்தேன் இவ்வார்த்தைகளை
உன் மனத்தின் முன்னே பாறைகளென
திடமாய் வைக்கப்பட்டது, கைகளால்
இடமறிந்து, மனதின் உடலின் முன்னே
வெளியிலும் காலத்திலும்,
பட்டை, இலை(அ) சுவரின் திண்மை
பொருட்களின் குவியல்
உருளைக் கற்களின்பால்வீதி
திரிகின்ற கோள்கள்,
இக்கவிதைகள், மக்கள் இழுபடும்
சேனல்களுடன் மட்டக்குதிரைகள்-
மற்றும் ஆழப்பதிந்த கல்தடங்கள்
முடிவுறாத நாற்பரிமான விளையாட்டென
உலகங்கள்
எலும்புகளும் கூழாங்கற்களும்
மெலிதான வண்டலில், ஒவ்வொரு பாறையும் ஒருவார்த்தை
கழிமுகத்தால் துவைக்கப்பட்ட கல்
கருங்கல், கனல் மற்றும் பாரத்தின்
வாதை பதியப்பெற்றது.
படிகமும் படிவமும் சூட்டுடன் பிணைந்துள்ள
மாற்ற மனைத்தும், எண்ணங்களில்,
அதுபோலவே பொருட்களிலும்
PoemHunter.com இணைய தளத்திலிருந்து தமிழாக்கம்
--------கேரி ஸ்நைடர் (1930)
சான்ஃபிரான்சிஸ்கோவில் பிறந்த, வளர்ந்த அமெரிக்க கவிஞர். ஜப்பானிய மற்றும் சீன மொழிகள் கற்றவர். விறகுடைப்பவராக, தச்சராக, மாலுமியாகப் பணிபுரிந்தவர். தற்போது கலிஃபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பேராசிரியர். 1975ல் கவிதைக்கான 'புலிட்ஸர்' பரிசு பெற்றர். ஜென் பௌத்தத்தில் ஈடுபாடுடையவர். சில வருடங்கள் ஜப்பானில் வாழ்ந்தவர்.
'மேற்கத்திய கீழைத்தேய பண்பாடுக்கிடையிலான, அமெரிக்காவின் இயந்திரத் தொழில் நுட்பத்திற்கும் இயற்கைக்குமிடையிலான, நகரத்திற்கும் மண்ணிற்குமிடையிலான, வரலாற்றுக்கும் நிகழ்காலத்து சமூகத்திற்கிடையிலான உறவுகள் குறித்துப் பெரிதும் அக்கறைகொண்டுள்ளவர்.
கவிஞர் மட்டுமல்லாது கட்டுரையாளரும், மொழிபெயர்ப்பாளரும், சுற்றுச்சூழலளாரும் ஆசியருமாக இருந்து வருபவர்.
ஜாக் கெரோக்கின் ''The Dharma Bums'' நாவலின் முக்கிய பாத்திரம் ஒன்றிற்கான உத்வேகமாக இருந்தவர்.
950களின் Beat Generation இயக்கத்தில் ஆலன் கின்ஸ்பெர்க் மற்றும் ஜாக் கெரோக்குடன் சேர்ந்து இயங்கியவர்.
இவரது சிந்தனையில் ஜென் பௌத்தத்திற்கு முக்கிய பங்குண்டு.
நேர்காணல் - கேரி ஸ்நைடர்
கே - தனிப்பட்ட முறையில், கிராமிய வாழ்வில் உங்களுக்குள்ள ஈர்ப்பு என்ன?
ப - கவிதை மற்றும் நகரம் (அ) கிராமப்புறம் குறித்துள விவாதங்கள் ஒருபுறமிருக்க, நகரம் சிக்கலாகியிருக்கிறது என்பது தெளிவானது. முற்றிலும் தெளிவானது. வாழ்வதற்கு மககள் பிற வழிவகைகளைத் தேடத் தொடங்குவது இயல்பானதே. கிராமப்புற வாழ்வில் உள்ளார்ந்த நிறைவு இருக்கிறது. சில பேருக்காவது நிறைய சந்தோஷங்கள் இருக்கின்றன. வேலை சிரமமானது. தனது தண்ணீர், எரிபொருள், காய்கறிகள் முதலானவற்றிலிருந்து அந்நியப்பட்டிருப்பதில்லை. அவை அடிப்படையானவை. பழங்காலத்து மானுட அடிப்படைகள்.
லட்சோப லட்சம் ஆண்டுகளாக மக்கள் எப்படி வாழ்ந்து வந்திருந்தார்கள் என்னும் அடிப்படைகளிலிருந்து மிகவும் விலக்கப்பட்டுவிட்டால், மானுட படைப்பாக்கமும் கலைகள் அனைத்தும் வாடத் தொடங்கிவிடும் என்று கூறுவது அதீதமானதாய் இருக்காது. வெயில், தண்ணீர் மற்றும் இலையின் நிகழ்ச்சிப்போக்கால் இவ்வுயிர் மண்டலத்திற்கு கொண்டுவரப்பட்ட மிருகமே நாம் அவற்றிடமிருந்து மிகத் தொலைவுக்கு விலகிச் செல்கிறோமாயின் தாயிடமிருந்தும் நமது பாரம்பரியத்திலிருந்தும் மிகத் தொலைவுக்கு விலகிச்செல்பவர்களாகவே இருப்போம். ஆனால் எனது சில நல்ல கவிதைகளை, மாதக்கணக்கில் ஒரு பசிய இலையினையோ ஈயினையோ காணாது. கப்பல் டேங்கரில் இயந்திர அறையில் பணிபுரிகையில் எழுதியிருக்கிறேன். அது ஒரு பிரச்சினையல்ல. உங்கள் பாதங்களை எங்கே பதிக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகளை எங்கே வளர்க்கிறீர்கள். உங்கள் கைகளால் என்ன செய்கிறீர்கள் என்பதே பிரச்சனை. இப்போது கப்பலின் இயந்திர அறையில், என் உடலாலும் கைகளாலும் வேலைசெய்வது சில வகைகளில், இந்த அழகான காட்சி கண்ணுக்குக் கிடைக்கின்றன இடத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசுவது, தட்டச்சுப் பொறியைத் தொடாதபடி தட்டச்சு செய்வது என்பவற்றைவிடவும், குறைந்த அளவே அந்நியமாதல் கொண்டது. அத்தருணத்தில் உடம்பைப்பயன்படுத்துவது புலன்களை ஈடுபடுத்துவதுதான் முக்கியமானது.
கே - எலியட்டைக் குறிப்பிட்டீர்கள். எலியட் மிகவும் அறிவார்த்தான கவிஞர் இல்லையா?
ப - எலியட்டிடம் வேடிக்கையாக காணப்படுவது அவரது புத்திசாலித்தனம் மற்றும் குறிப்பிட்ட திசை வழிக்கு உங்களைச் செலுத்திடும் மேற்கத்தைய குறியீடுகளை மிகவும் தெரிந்தெடுத்த விதத்திலும் வசீகரமாகவும் பயன்படுத்திக் கொள்வது '''From Ritual to Romance'' -னை வாசித்துவிட்டு 'Prolegomena'', "Greek Religion'' என்றெல்லாம் வாசித்துக் கொண்டே போனேன். கடைசியில் அது உங்களை, ஃப்ரான்சின் ட்ராயி ஃப்ரெரிகுகைகளுக்குக் கொண்டு சேர்க்கும் சாரமுள்ள எதனையும் பின்தொடர்ந்து போனால் அது உங்களை அங்கே கொண்டு சேர்க்கும். ஆகவே எலியட் அதனை அறியாமலேயே, ஆழ்ந்த திசைவழிகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். எலியட்டின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது அது ஒரு பெரும் படைப்பு என்றெண்ணுகிறேன். வேர்கள் பற்றிய உணர்வு கொண்டிருந்தார். பவுண்டால் திரும்பிப்பார்க்க இயலாது போயிற்று. வெண்கல காலம் வரை போகக்கூடியவர்தான் அவர். அவரது கற்பனை மேலும் செல்லவிடாது தடுத்துவிடும். ஆனால் புதிய கற்காலம் வரையாவது போக முடிந்தது.
கே. நவீன கவிஞர்களால் புதியகற்காலம் வரை போக முடிகிறது என்னும்போது என்ன கூற வருகிறீர்கள்?
ப . அவர்தம் கற்பனை அதனை அளந்துவிடக்கூடியதாய், அது அவர்தம் வாழ்வின் ஓர் அங்கம் என்று உணரக்கூடியதாய் இருக்கின்றது. மற்றும் அதனுடன் தோழமை கொள்ளக்கூடியவர்களாய், தங்களுடன் பேசுவதில் உள்ள மானுடத்தைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாய் உள்ளனர் என்கின்றேன். இது நம் வரலாற்றில் நடுப்பகுதி.
கே . நீங்கள் எழுதுகையில் கவிதையின் ஆரம்பம் எப்படி அமைகின்றது? குறிப்புகள் எடுத்துக் கொள்கிறீர்களா (அ) இவ்விஷயங்கள் அப்படியே உங்களுக்குத் தோன்றுகின்றனவா? இவை எப்படி வருகின்றன மற்றும் முதலில் என்ன செய்கிறீர்கள்?
ப - எனது உள்ளார்ந்த மனத்தின் இசையைக் வனமாகக் கேட்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அங்கே சுவையாக எதுவும் நடப்பதில்லை. ஆனால் எப்போதாவது ஒருமுறை, கவிதைத் தளத்துக்குரியது என்று என்னால் கண்டு கொள்ளப்படக்கூடியதை கேட்க முடிகிறது. அதனைக் கவனாகக் கேட்கிறேன்.
கே - உள்ளார்ந்து
ப - உள்ளார்ந்து. ஆனால் அது வெளியிலிருந்து வருவது என் முதுகுதண்டில் இருக்கக்கூடும்.
கே - உங்கள்பால் செலுத்தப்படும் குரல்கள் கருத்துக்களைக் குறிப்பிடுகிறீர்களா? உதாரணமாக எதனையாவது ஏவிவிடும் கடல்முனை பற்றி உங்கள் மகன் ஏதாவது சொல்வது.
ப. அதனையும் என்னால் கேட்க முடியும். அது உண்மையே, கவிதைகள் எழுதுவதற்கு ன்பு, நான் அறிந்து கொள்ளவேண்டியவை புள்ளிகளாக உருவாகத் தொடங்குகின்றன. என் வாழ்வில் உருவாகத் தொடங்குகின்றன என்று நான் கவனிக்கக்கூடிய முக்கிய பிரதேசங்கள் குறித்த உணர்வோட்டம் இருக்கும் அவற்றிலிருந்து காலத்தே கவிதைகள் வெளிப்படும். இப்போது நான் கவனிக்க வேண்டியவற்றின் இதோ (நிறைய அட்டைகள் உள்ள கோப்பு ஒன்றினை எடுக்கின்றார். இம்மூன்று அட்டைகள், இப்படித்தான் நாம் விஷயங்களை அடையாளம் காண்கிறோம். சிறு தொடர்களினூடாக எனது உளவியல் மற்றும் ஆன்மீகப் பரிணாமத்தின் ஓரங்கம் அதனுடன் பிணைந்தது. அதனிடமிருந்து மிகத் துல்லியான மொழியும் குறியீடும் இறுதியில் வெளியாகும். மிகத் துல்லிய இசை வெளியாகும். நான் பாடுவதற்கு முன்பு எழுதிவைப்பதற்கு முன்பு, கவிதைகளை நீண்ட நேரம் மனத்தில் வளர்த்தெடுப்பதுண்டு. எனவே அவை பிறக்கும்போது அவை சரியாக அமைந்துவிடும். திருத்தவேண்டியதோ மெட்டினை மாற்றுவதோ தேவைப்படாது.
கே - அப்படியானால், நீங்கள் அவ்வளவாக திருத்தி எழுதுவது கிடையாதா?
ப - கிடையாது. மனதில் செய்து விடுகிறேன். அவை வெளிவருமுன் நிறைய நேரம் செலவழிக்கின்றேன். சிறு கவிதைகளைப் பொறுத்தவரை என்பது போன்று இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நீண்ட கவிதைகளைப் பொறுத்தமட்டில் நான் நிறைய ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் நிறைய நீண்ட கவிதைகளை ஒரே நேரத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். (பல்வேறு கோப்புகளைத் திறந்து, ஏகப்பட்ட கத்திரிப்புகள், அட்டைகள் மற்றும் குறிப்புகளை எடுத்துக் காட்டுகிறார்) நான் சொல்லவருவது, இதனைச் செய்துமுடிக்க ஓர் ஒழுங்கமைப்பை பயன்படுத்துகிறேன்.
கே - கவிதை கற்றுத் தரும் நல்லதொரு ஆசிரியராக ஒருவரை உங்களால் நினைத்துப்பார்க்க முடியுமா?
ப - பயிற்சிமுறையை அதனை அடைவதற்கான வழியாக காண்கிறேன். ஓர் ஆசிரியரை வேண்டுகிற இளைஞர் ஒருபலைக்கலைக்கழகத்தை பல்கலைக்கழகமாக காணக்கூடாது என்று கருதுகிறேன். மாறாக ஆசிரியராகக் காணவேண்டும். அந்த ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தால், நல்லதே. இல்லாவிடில், நல்லதில்லை எதுவாயினும், நிர்வாகக் கட்டிடத்திடம் நீங்கள் போவதில்லை. அந்நபரிடன் சென்றுதான் உங்கள் மாணவனாயிருக்க விரும்புகிறேன். நான்என்ன செய்யவேண்டும்? என்று கேட்கிறீர்கள். அப்படிச் செய்வதன் வாயிலாக, மிகவும் தனிப்பட்டதாக, மிகவும் ஊழியம் சார்ந்ததாக, மிகவும் நேரிடையானதாக உறவினை நீங்கள் விரிவுபடுத்திக் கொள்கிறீர்கள்.
எனக்கு அதற்கான முன்மாதிரி பயிற்சியாளர்களை வைத்துக் கொள்ளும் ஜப்பானியப் பானை தயாரிப்பாளர்கள், பயிற்சியாளர்கள் முதலில் கற்றுக் கொள்வது களிமண்ணைப் பிசைந்து தயாரிப்பதுதான். (அ) கருவிகளால் வேலைசெய்யத் தொடங்குவதற்குமுன், மாதக்கணக்கில் உளிகளையும் இதரகருவிகளையும் கூர்மைப்படுத்துகின்றன ஜப்பானியத் தச்சுத் தொழில் பயிற்சியாளர்கள்.
கே - கவிஞர்களைப் பொறுத்தமட்டில் காணவேண்டுமா (அ) மொழியைக் கூர்மைப்படுத்தவேண்டுமா?
ப - அவ்வேளையில் என்ன பயின்றுகொண்டிருக்கின்றனர் மற்றும் ஆசிரியர் யார் என்பவற்றைப் பொறுத்தது. அந்த ஆசிரியர் காரினை பழுது பார்ப்பவராக இருக்கவும் கூடும் எவ்விதம் இயங்குகிறீர்கள் மற்றும் அது எவ்வகையில் செயல்படுகின்றது என்பதை நல்லதொரு மெக்கானிக்கிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். தொழில் தெரிந்தவரிடமிருந்து தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்கிறீர்கள். அது எந்தத் தொழில் என்பது பிரச்சனையில்லை. பாகங்களைக் கையாள்வதிலும் செயல்படுத்துவதிலும் உங்கள் மனதைப பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்கிறீர்கள். வேலைசெய்வது எப்படி என்று கற்றுக் கொள்கிறீர்கள். எவ்வாறு விஷயங்கள் ஒன்றிணைகின்றன என்று கற்றுக்கொள்கிறீர்கள்.
கே - இங்கே நீங்கள் உவமானம் ஒன்றைக் காட்டுகிறீர்கள்.
ப - ஆனால் இது அந்த உண்மையான உவமானம். தலைவன் எப்போதும் தலைவனே. தலைமை மெக்கானிக்கினை நீங்கள் பார்த்தால், நீங்கள் சிறப்பாக ஆவீர்கள். கவிஞனாக விரும்பினால் தலைமை மெக்கானிக் (அ) பெரிய சமையல்காரரைப் பார்க்க வேண்டும் தலைவனல்லாத இன்னொரு கவிஞரின்கீழ் தலைவனென்று நீங்கள் அங்கீகரிக்காத ஒருவரின் கீழ் பயில்வதை விடவும் அவரிடம் பயில்வது கவிஞரென்ற முறையில் உங்களுக்கு நல்லது.
கே - யார் உண்மையான கவிஞன் இல்லை?
ப - உண்மையான கவிஞன் மட்டுமல்லாது தலைவனும் ஆக இருப்பவன். ஓர் உண்மையான தொழில் நுட்பம் தெரிந்தவன் கற்பிக்க இயலாத உண்¬யான கவிஞர்கள் இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் உத்வேகம். தன்னெழுச்சியான இயல்பு, குரல், மொழி ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் எழுதுகிறார்கள். விவரணங்களில் இறங்குவதில்லை. அவர்களுக்கு நிஜமாகவே சாதனங்களைத் தெரியாது. ஒரு தச்சனும் ஒரு மேஸ்திரியும், பாண்டுடெரோஸா பைன் மரம் எதற்குதவும். டக்ளஸ் ஃபிர் மரம் என்ன சிறப்புடையது. இன்ஸென்ஸ் செடாரின் நேர்ததி என்ன என்பதெல்லாம் தெரியும். அதன்படி அவர்கள் செயல்படுவார்கள். இதனை அறியாமலேயே மிக நேர்த்தியான வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும். ஆனால் அவற்றில் சில இறுதியில் உதவாது போகும்.
எனவே, பின்புலத்தில் கவிதையைப் பொறுத்தவரை, சாதனங்களின் அமைப்பியல் மற்றும் அடிப்படை அறிவு உள்ளது. தலைமை மெக்கானிக்கிடமிருந்து கற்றுக்கொள்ளவதைப் போலவே நீங்களுக்கு அளிக்கக்கூடியது என்கிறேன்.
கே - நுட்பமிகுந்த (அ) கிளர்ச்சி கொள்ளக்கூடிய கீழைத்தேய மெக்கானிக் பற்றியே அதிகம் பேசுகின்றீர்கள் என்று தோன்றுகிறது.
ப - இல்லை எனக்கொரு தலைமை மெக்கானிக் தெரியும் என்பதால் தலைமை மெக்கானிக் என்ற தொடரைப் பயன்படுத்துகிறேன். அவருடன் நேரத்தைச் செலவிடும் போதெல்லாம் அவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்கிறேன்.
கே - எதைப்பற்றி
ப - எல்லாவற்றைப்பற்றியும் கவிஞன் என்ற என் தொழிற்முறைக்கேற்றபடி இவற்றை நான் காண்கிறேன். கவிஞனாக என் தொழிலை நான் கற்றுக்கொள்கிறேன். தொழில்திறனாளியாக இருக்க என்ன செய்யவேண்டும். அர்ப்பணிப்பு கொண்டிருத்தல் என்றால் என்ன, வேலை செய்வது என்றால் என்ன என்றெல்லாம் கற்றுக் கொள்கிறேன். விடப்படும் சவால்களிலிருந்து பின்வாங்காதிருத்தல் புத்தகங்களை வாசிக்கதிருக்க விரும்புதல் மரபினிலிருந்து எதனையும் வாசிக்க விரும்பாமல் கவிதை எழுதவிரும்புவோர் எதிர்ப்படுவார்கள். நீங்கள் பயன்படுத்துகின்ற மரங்களின் பேதங்களை அறியாது, மேஸ்திரியாக விரும்புவது போல,
கே - ஒருவர் கவிதையைக் கற்பிக்கையில், உத்வேகம் குறித்து அவர் பேசியாக வேண்டுமா?
ப - உத்வேகம் என்பது பேசப்படக்கூடியது, ஆனால் பல்கலைக்கழகச் சூழலில் கற்பிக்கப்பட இயலாதது. உத்வேகம் கிடைக்க உத்தமமானவழி, ஒன்று தனியாக நெடுந்தூரம் உலவுவது (அ) வெந்நீர் குளியல் போடுவது
கே - தன்னெழுச்சித்தன்மை குறித்து கெரோக் நிறையவே பேசுகிறார் என்றெல்லாம், கவிதை உருவாக்கம் குறித்து அப்படியே நீங்கள் உணருகிறீர்களா?
ப - அது ஒரு பகுதிதான், தன்னெழுச்சித்தன்மை அழகானது. அவரின் ஹைகூ ஆகியவை ஆங்கில மொழியின் அற்புதமான கவிதைகள். ஆனால் நம்காலத்தில் கவிதையின் பணியை நிறைவேற்றிட, அது போதழது.
கே - உத்வேகத்தை வளப்படுத்துவது முந்தைய அனுபவமா?
ப. ஆமாம் கல்வி மற்றும் பண்பாடு என்னும்போது அதையே குறிப்பிடுகிறோம். எந்த ஒரு நேரத்திலும் உங்களுக்கு கிடைத்திருப்பதை வளப்படுத்தி, ஆழமாக்குவது காலத்தின் யெல்முறையே. எந்த ஒரு நேரத்திலும் கணிசமாகப் பெற்றிருந்து, அதனுடன் இசைவு கொண்டிருந்தால், வளான ஒன்றை நீங்கள் வெளியிடக்கூடும். பெரிய குயவனைப் பொறுத்தவரை அதுதான் விஷயம்.
கே - பல்கலைக்கழகத்தின் முக்கியத்தும் என்பது வகைப்படுத்துதல் என ஆலன் கின்ஸ்பர்க் உணர்வதற்கம் மேலான நிபுணத்துவம் இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?
ப - நல்லது. அது ஒரு பெரிய மதிப்புத்தான். ஆனால் உண்மையில் நமது மரபினை கல்வியை, ஒவ்வொரு தலைமுறையினை மறு மதிப்பீடு செய்யும் வேலையும் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. இந்நிகழ்ச்சிப்போக்கில், இதற்கு முன்னர் நழுவவிட்டுவிட்டவற்றைக் கண்டறிந்து, மீண்டும் நம் கவனத்திற்கு கொண்டு வருதல் பிளேக் நம்மிடம் அளித்தது போல் (அ) மெல்வில்லின் கவிதை நமக்கு அளித்தது, பால் இல்லாதது போனால் அவை காணாது போயிருக்கும். ஆகவே ஆங்கிலத்துறை என்பது தபாலில்வரும் கவிதை இதழ ஒவ்வொன்றையும், நல்லது இதனை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் இப்போது வாசிக்க நேரமில்லை என்று கூறி எறிகின்ற அட்டைப் பெட்டி போன்றது. ஆக காலத்தில் பின்னோக்கிய பணி இது. கல்வித்துறை சார்ந்ததும் அறிவுத்துறை சார்ந்ததுமான தேடல்கள் சில முன்னோக்கியதாக இருப்பதுபோல் பெரும்பாலான அறிவியல்கள் புதிய சாதனைகளை, புதிய கண்டுபிடிப்புகளை நோக்கியனவாகவே உள்ளன. ஆங்கிலத்துறை காலத்தில் பின்னோக்கியதாக இருக்கிறது. அப்படிப் பின்னோக்கிப் போகையில் நிகழ்வதைப் புரிந்து கொண்டு அதனைத் தொடர்பு படுத்திப்பார்த்திட முயல்கிறது.
ஆக அவர்கள் மரபினை நிறுவுகின்றனர். அதுவே அவர்தம் மதிப்பு. அதனை நான் மதிக்கின்றேன். அதன்பால் பெரும் மரியாதை கொண்டுள்ளேன். தம் பணியில் போதுமான பெருமிதமோ போதுமான சந்தோசமோ கொள்ளுமளவுக்குத் தம் பணியை புரிந்து கொண்டுள்ளார்கள் என்று நான் எண்ணவில்லை. அதுவே என்னை விசனம் கொள்ள வைக்கிறது. தம்பணிகுறித்து பழங்குடி உணர்வு அவர்களுக்கில்லை அது உண்மையிலேயே ஒரு பழங்குடிப்பணியே.
கே - அவர்களுக்கு என்ன ஆலோசனை கூறுவீர்கள்.
ப. இவ்விஷயங்களில் அவர்கள் மானுடவியல் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய நோக்கு கொள்ளவேண்டும் என்பேன். அப்புறம் தாம் செய்வது எங்கே பொருத்தப்போகிறது என்பதைக் கண்டு கொள்வார்கள். ஆங்கிலத்துறைப் பேராசிரியர்கள் , சிவா புரோகிதர்கள் போல் இக்கழுகு இறகின்மேலே, சற்றுச் சிவப்புத் தீற்றலுடன் கூடிய, மூன்று கோடுகள் ஏன் தீட்டப்பட்டுள்ளன? அதன் காரணமென்ன? என்று கேட்டுக்கொண்டிருப்பார்கள். தமக்கா அதனை மனதில் வைத்திருப்பார்கள்.
அதற்காக, இது குறித்து அவர்கள் நிறைய அக்கறை கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் தம் பங்குபணி தம் செயல்பாடு பற்ற¤அவர்கள் அக்கறைகொள்ளவேண்டும். அவர்தம் பணி அழகான கவிஞன் (அ) அழகான நர்த்தகியாக விரும்பும் இளைஞன் ஒருவனுக்கு தான் செய்து கொண்டிருப்பதை ஆழப்படுத்துவதான கூடுதல் தகவல் ஒன்றினைக் கூறுவது போன்றது.
விசய ஞானத்தை அவர்கள் கொண்டிருப்பதால் அதனைத் தாங்கிக் கொண்டிருப்பதால் அதனைக் தாங்கிக் கொண்டிருக்கின்றனர். அரங்கில் உத்வேகம் கொண்டுவிடும் நர்த்தியரின் நலனுக்காக தாங்கிக்கொண்டிருக்கின்றனர்.
ஆதிகாலங்களில் கதை சொல்வது முடிந்து பார்வையார்கள் கலைந்து போனபிற்பாடு, தெரிந்தெடுத்த மாணவர் சிலருக்கு உட்பொருளையும் பின்புலத்தகவலையும் தொழில் ரகசியங்கள் சிலவற்றையும் கூறிடும் கதை சொல்லி போல ஆங்கிலப் பேராசிரியர் அக்கதையை உருவாக்கிய கவிஞனாக அவர் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இல்லையா?
கே - கவிதை என்பது தன்வெளிப்பாடு உன்னால் முடியும் போதெல்லாம் உன்னால் இயன்றதை எழுது என்று சிலர் இளங்கவிஞன் ஒருவனுக்கு கூறுவார்கள். நீங்கள் அதனைக் கூறுவீர்களா?
ப - மாட்டேன். அதனைக் கூறமாட்டேன். அது உண்மை என்று நான் எண்ணவில்லை. கவிதை என்பது அதன் கடந்த காலத்துடன், குறிப்பாக அதன் மொழியுடன் பிணைப்புண்டுள்ள, சமூக மற்றும் மரபார்ந்த கலை, தன் கடந்த காலத்தை வளையமிட்டு ஈர்ப்பது நமது நனவிலியின் ஆழங்களுடன் தொடர்புகொள்வதற்கான சாதனமாகப் பயன்படுவது செயல்படுவதன் வாயிலாக சீராக மேம்படுவது, தொடங்குவதற்கு நன்றாக இருப்பினும் கவிதை எதனையும் உருவாக்குவதில்லை.
ஒருவர் தன்மை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நாம் உணர்வதில் ஒருபெரும் கவிதையின் ஆற்றல் இருப்பதில்லை. நாம் அவ்வாறு எண்ணுவதில்லை. எவ்வளவு ஆழமாக நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன் என்று தான் எண்ணுகிறோம். நமது அளவிலான எதிர்வினை அதுவே, ஆக பெரிய கவிஞன் தன் அகத்தை வெளியிடுவதில்லை. நமது அகங்கள் அனைத்துயு« அவன் வெளியிடுகிறான். நமது அகங்கள் அனைத்தையும் வெளிப்படுத்திட நீங்கள் உங்கள் அகத்தைத் தாண்டி போகவேண்டும். ஜென் மாஸ்டர் டோஜென் கூறியதுபோல, அகத்தை மறிப்பதற்காக அகத்தைப் பயில்கிறோம். அகத்தை மறுக்கையில், அனைத்துடனும் சங்கமித்து விடுகிறீர்கள். எனவேதான் கவிதை தன் வெளிப்பாடில்லை.
கே - உங்கள் கவிதையில் ஜப்பான் கணிசமான பங்கு வகிக்கின்றது. இளங்கவிஞன் ஒருவனிடம் ஜப்பானுக்குப் போங்கள் என்று கூறுவீர்களா?
ப. மாட்டேன். ஆலோசனை என்ற அளவில் இங்கே ஜப்பான் உணர்த்துவது முக்கியமென்று நீங்கள் உணரும் ஆன்மிகப் பாதை ஒன்று இருப்பின், என்னவானாலும் சரி, அதில் சென்று ஆய்வு செய்யுங்கள். அது உணர்த்தும் இன்னொன்று, உங்களுக்கு மன உறுதியும் தைரியமும் சந்தர்ப்பமும் இருந்தால், அந்நிய கலாசாரம் ஒன்றில் சிறிது காலம் வாழுங்கள். அது உண்மையிலேயே உங்களை விசாலமாக்கும். (சிரிக்கின்றார்)
கே . ஆக. கவிஞன் ஒருவன் நாவலாசிரியன்போல், மானுட இயல்பை அறிந்து கொள்ள வேண்டுமா?
ப. தூய மற்றும் உண்மையான கவிதையெல்லாம் இறுதியில் தோற்றம் கொள்வதற்கு உத்வேகம் பெறுகின்றதாக ஜேக் ஸ்பைசர் கண்டதையே நான் விரும்புகிறேன். வெளியிலிருந்து வரும் குரலாக அது நம்மிடம் வருகின்றது. உள்ளிருந்து வருகின்றனது என்று கூறுவது கூட உங்களைத் தவறாக இட்டுச் சென்றுவிடும். ஆக நாமே அதன் குரல் எனினும், அக்குரலைக் கேட்கக் கூடியவர்கள் நாமாயின், நம்மால் முடிந்த அளவுக்கு சாத்தியமாகக் கூடிய அளவுக்கு அக்குரலின் சிறந்த சாதனமாக இருக்க, நாம் முயலவேண்டும். அதன்பொருள், பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல், விசாலமான மானுடராக இருத்தல், நம்மால் முடிந்த அளவுக்கு விசய ஞானமும் விழிப்புணர்வும் கொண்டிருத்தல் என்றாகும். ஏனெனில் அக்குரலின் ஆற்றலை வெளியிடுவதிலும் கையாள்வதிலும் அது நமக்கு வல்லமையளிக்கும்.
கே - மொழிபெயர்ப்புகள் உட்பட?
ப - ஆம், மொழிபெயர்ப்புகள் உட்பட வாசித்தல், மொழிபெயர்ப்புகளை எவ்வாறு செய்வது என்று கற்றுக்கொள்ளல்
கே - மொழிபெயர்ப்பாளர் ஒட்டுண்ணி என்றார் வால்ஸ் ஸ்டீவன்ஸ். அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?
ப - அதனைச் செய்திடும் ஒவ்வொருவரும் நமக்குத் தேவை. எந்தவொரு நல்ல மொழிபெயர்ப்பாளரும் நமக்கெல்லாம் பெரும் உதவியாக இருக்கின்றார். வளைகுடா விளிம்பில் நின்று கொண்டு வணிகம் செய்ய கற்றுக்கொடுக்கும் விளக்கவுரையாளர் என்னும் ஒட்டுண்ணியை விடவும் அதிக அளவு ஒட்டுண்ணியல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர். அது ஒரு மதிப்புக்குரிய செயல்பாடு. ஆற்றல் பரிவர்த்தனையின் போக்கில் மொழிபெயர்ப்பாளர் ஒரு மதிப்புமிகு விசை.
கவிதையின் செயற்பாடு என்ன என்று நீங்கள் வினவுவதால் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த கவிதையின் செயற்பாடு என்ன? என்று எண்ணிப்பார்க்கிறேன். எல்லாப் பண்பாடுகளிலும் அந்த அர்த்தத்தில் மொழியின் உள்ளாந்த ஆற்றல்களையெல்லாம் தீவிரப்படுத்தலும் தெளிவுபடுத்தலும் மட்டுமல்ல. அது மொழியின் சாதாரண செயல்பாடுகளுக்கு கூர்மையினையும் மேலும் ஆனந்தத்தையும் அளிக்கக் கூடியது என நாம் நம்பலாம். மேலும், மொழி என்பது தொடர்புறுத்தலாக இருப்பதால், அது இன்னும் மேலாகச் செயல்படும். ஆனால் இன்னொரு மட்டத்தில் எந்தவொரு பண்பாட்டினதும் அடிப்படை உலகநோக்கு விஷய ஞானத்துடன் கவிதை நெருங்கிய பிணைப்பு கொண்டிருப்பதால் அதன் தொன்மத்தளமாக அதன் குறியீட்டுத் தளமமாக இருப்பதால் மற்றும் அதன் மதிப்புகளுக்கான ஆதாரமாக இருப்பதால் அத்தொன் விஷய ஞான ஆதாரம் எந்தவொரு சமூகத்தினது அடிப்படையாயும் இருக்கிறது. கவிதைகளால், அதாவது பாடல்களால், அந்த அடித்தளம் மிகச் சாதாரணாக பண்பாட்டில் வெளியிடப்படுகிறது. தொற்றவைக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாடக பூர்வமான சடங்குரீதியிலான நிகழ்வொன்றுடன் பிணைப்புண்டுள்ள பாடல்களாம்.
கே - அப்படியானால் அது கவிதையாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியமில்லை. அது நாடகம் நாவல்கள் மூலமாகவும் உண்டாக்கப்படலாம்.
ப. ஆனால் நாற்பதாயிரம் ஆண்டுகளாக நம்மிடையே நாவல்கள் இருந்ததில்லை. கவிதைகள் இருந்திருக்கின்றன.
கே - இல்லை. தொல்கதைகள் இருந்திருக்கின்றன. ஜில்காமெஸ் மற்றும் அதுபோன்றவை.
ப. சரிதான் ஆனால் அவையெல்லாம் வாய்மொழியாடல் நாம் பேசிக் கொண்டிருப்பது இதிகாசம் பற்றிய அது பாடப்படுவது ஓதப்படுவதன் காரணாக அது ஒரு கவிதைவகை நினைவுகூரச்சுலபாகவும் ஓதப்படக்கூடியதாகவும் உள்ள அளவீடான மொழியில் வாய்மொழிமரபு தன் செய்தித்தொடர்பினை செய்து கொள்கிறது. உலக விசய ஞானத்தின் பெரும்பகுதியும் ஏதோஒரு விதத்தில் கவிதை வடிவங்கள் அளவீடான மொழி (அ) பாடப்படும் மொழியினூடாகவே தொடர்புறுத்தப்பட்டுள்ளது.
கே - இன்றைய சமூக நிலையில் குறிப்பாக அமெரிக்க சமூகச் சூழலில் பின்னோக்கி முன்னோக்கி வளர்ந்து செல்லக்கூடிய வடிவங்களாக எவற்றைக் காண்கிறீர்கள். தொன்ம மரபினையா (அ) வாய்மொழி மரபினையா?
ப - வாய்மொழி மரபாகவே உள்ள ஒன்றில் தொன்ம விஷயஞானத்தை நாம் தொடர்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. மேற்கத்தைய கவிதை தொடர்புறுத்தலின் இன்றியமையா வரியன்று ஹோமர், விர்ஜில், தாந்தே, கதே, மஸ்டன், ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் வில்லியம் பிளேக்கினூடாக ஓடுகின்றது. இப்போது அப்பெரும் கவிஞர்களுள் ஒவ்வொருவரும் தன்காலத்தியே, தாமிருந்த ஒட்டுமொத்த உலகின் உலகநோக்குப் படிங்களையும், அடிப்படை சார்ந்த தொன்ம தலைமைக் கருத்திழைகளையும் உட்கிரகித்துக் கொள்ளவும் உள்வாங்கிக் கொள்ளவும் மீண்டும் பேசவும் பொருட்டு, தரிசனம் மற்றும் தியானத்தின் மூலமாக முயன்றுள்ளனர். அதனைச் சுருக்கி, கச்சிதப்படுத்தி, மீண்டும் அதன் காலத்திலேயே அதனைக் கொண்டுவருவதற்காக அதுதான் மாபெரும் கவிஞர்களிடம் நடந்து கொண்டிருக்கும் பணி. சமூகத்தின் ஒட்டுமொத்த உலகப்பார்வையினையும் அவ்வப்போது முன்வைப்பது ஹோமர் தவிர்த்து நான் குறிப்பிட்டுள்ள கவிஞர்களெல்லாம் எழுத்தில் இதனைச் செய்துள்ளனர்.
கே - அது ஒன்றையும் மாற்றாது என்று கவிதை பற்றிக் கூறினர். ஆடன் அப்படித்தான் நீங்கள் கவிதையைக் காண்கிறீர்களா?
ப. - கலைஞர்கள் மானுடசமூகத்தின் உணர்கொம்புகள் என்றார் எஸ்ரா பவுண்ட். நடைமுறையில் அது செயல்படும் விதம் சிலரது உணர்வோட்டங்களும் மற்றும் அவர்தம் வாழ்க்கைப் பாணிகளும் கூட, குறிப்பிட்ட காலத்தில் ஒரு சமூகத்தின் காரண, காரிய வலைப்பின்னலை அவிழ்க்கும்போது தெரியவருகின்றன. மற்றும் அவர்தம் உணர்வோட்டங்களின் இயல்பு காரணாக, வெறுமனே சமூக மானுட குரலாக மாறிவிடாது வேறு குரல்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆகவே, அவை விருட்சங்கள், காற்று, மேகங்கள் ஆகியவற்றைக் கேட்கும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்பு போன்றவை. ஆற்றுப்பள்ளத்தாக்குகள் முனகத் தொடங்கும். தாம்கேட்பது என்னவென்று தங்களுக்கே தெரியாதபோதும் சிறிது எச்சரிக்கையை திரும்ப அனுப்பிடமுயலும். அவையும், மன அழுத்தங்கள், சமூக தீம்பாறைப்பிழம்புகளின் சீற்றங்கள் ஆகியவற்றைச் செவிமடுத்து எச்சரிக்கைகள் தரத்தொடங்கும்.
குறிப்பாக கவிஞனுக்காகத் தொடர்ந்து நிகழ்வது, முக்கிய தலைமைப்படிவம் மற்றும் குறியீட்டுத் தளங்களைக் காணவேண்டிய தேவை குறித்த உணர்வு மற்றும் அத்தளங்கள் இயங்குகின்றனவா என்று காண்பது ஆகும். தலைமைப் படிமங்களுடன் ஊடாடியும் வரலாற்று மாற்றத்தை நிகழ்த்துவதற்கு ஒரு நூற்றாண்டு முன்பேயே மக்களின் கனவுகளில் புகுந்தும் கவிதை மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.
கே - தலைமைப்படிம தளங்கள் குறித்து எனக்குத் தெளிவாகவில்லை.
ப. நான் என்ன கூறுகின்றேன் என்றால் நாம் ஒரு சமூகத்தின் மதிப்புகளை மாற்றுகின்றோம்.
கே - அப்படியானால் கவிஞன் சாராம்சத்தில் ஒரு முன்னோடியா?
ப . இல்லை - முன்னோடி, என்று கூறமாட்டேன். முன்னோடி என்பவன் புவிசார் அமைப்பை தூய்மை செய்து தொடர்ச்சிக்கட்டத்தை மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிப்பவன். குறியீடுகளின் சுற்றுச்சூழல் ரீதியில் சொல்வதானால் ஒரு கவிஞன் பிரதான அமைப்பியல் தொடர்புகளைக் கண்டு கொண்டு, குறியீட்டு அமைப்பின் எப்பகுதிகள் பயனற்றவை பொருத்தமற்றவை என்று அறிந்து கொள்பவன். அவை மேலும் படைப்பாக்கத் திசை வழிகளாயிருக்கும். ஆனால் ஆனால் அரசியலை மாற்றிவிடும் வழிகள் ஒவ்வொருவரும் அவற்றுக்கு நம்பிக்கை நாணயம் வழங்கினாலும் மற்றும் தனது தரிசனத்திலிருந்தும் குரல்களைக் கேட்டும், மன ஆற்றல் பாய்வதற்கான புதியபாதைகளைத் தேடுகிறான். கவிஞர்கள் காளான்கள் நாய்க்குடைகள் போன்றவர்கள் குறியீட்டு சிதைவு கூளங்களை அவர்களால் செரித்துக் கொள்ள இயலும்.
கவிதையின் மதிப்பு மற்றும் செயல்பாட்டினை சிலவாய வார்த்தைகளில் கூறிவிடலாம். அதன் ஒருபகுதி காலத்திலிருக்கிறது. இன்னொரு பகுதி காலாதீதமாயிருக்கிறது. காலத்திலுள்ள பகுதி, இயற்கைத் தாயின் பாலும் மானுட இயற்கையின் பாலும் நம்மைத் திருப்பி எல்லாமும் இணையான விதத்திலே பலனடைந்தும், இசைவாக ஒன்றிணைந்தும் செல்லத்தக்க வழியிலே மற்றும் விதத்திலே, நம் சமூகங்களில் நாம் காலத்தில் வாழவகை செய்வது. இது ஓர் அழகான பாதை, காலாதீதமான கவிதையின் செயற்பாடு, இக்கணத்திலே நிரந்தராக, நமது அசலானதன்மை நோக்கி, நம்¬த் திருப்பிவிடுவதாகும். இவ்விரண்டும் சமயங்களில் சேர்ந்தவாறும் சமயங்களில் இங்குமங்கும் ஒன்றிலாவது உலமெங்கிலும் எப்போதும் நிகழும்.
இப்போது அக்குறிப்பிட்ட நிகழ்ச்சிப்போக்கு, மானுட சமூகப் பரிணாமத்தின் பெரும் பாய்ச்சலில் பெரிய சிறிய தாக்கங்களைக் கொண்டிருக்குமா, கொண்டிருக்காதா என்று என்னால் கூற இயலாது. இருந்தும் ஒரு சமூகம் சீரான ஒன்றாக பாடவும் ஆடவும் செய்வதைக் காணும்போது அவர்கள் வாழ்வில் அது ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதால், அவர்கள் வாழ்வாகவே இருக்கிறது. அவர்கள் வாழ்வு அவர்கள் பண்பாட்டு ஞானம் பாடல்களில் எடுத்துவரப்படுகிறது. எனவே கவிதை என்பது நது ஜீவன். கவிதை அதில் ஒரு தாக்கம் (அ) ஒரு செயல்பாடு (அ) ஒரு மதிப்பு கொண்டுள்ளது என்பதல்ல. உண்ணுதல் பேசுதல் நம் வாழ்வென்பது போலவே அது நம்வாழ்வாயிருக்கிறது. நல்ல உண்பதில் செயற்பாடு என்ன? பேசுவதன் மதிப்பு என்ன? என்று கேட்பது போல இருக்கிறது.
கே - தனிப்பட்ட அளவில், தனிநபரான கவிஞன் முக்கியமானவனா? அவனுக்கு அங்கீகாரம் தேவையா?
ப - சக கலைஞர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரத்தையே பெரும்பாலான கவிஞர்கள் விரும்புகிறார்கள் என்று கருதுகிறேன். கட்டிடக் கலைஞர்கள் பொதுமக்களின் கவனிப்பை ஒருபோதும் பெறுவதில்லை. என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பொதுமக்கள் கவனிப்பதில்லை. சக கலைஞன் ஒருவன் அங்கே நீ உருவாகியுள்ளதைக் கண்டேன். அது அற்புதம் என்று கூறுவதையே கட்டிடக் கலைஞன் விரும்புகிறான். அதுதான் உங்களுக்குத் தேவை. பெரும்பாலும் அதைத்தாண்டிய அங்கீகாரத்திற்காக ஏங்குவோர் தம் அகங்காரத்திற்கு தீனி போடுகிறார்கள். அது நல்லது செய்யாது நிறையப் பணம் வைத்திருப்பது அவ்வளவாக தீங்கிழைக்காதுஎன்று நம்பலாம். அது உதவிகரமாகக் கூட அமையலாம். ஆனால் தன் படைப்பு வெளிவருவதில் குறியாயுள்ள ஒருவனுக்கு அங்கீகாரம் உண்மையிலேயே பாதகமாயிருக்கும்.
மிக இளைஞனும், சரியாக அறியப்படாதவனுமான என்னைப்போன்ற கவிஞனே, பெரும்பகுதி நேரத்தினை விருந்துகளிலும் அரட்டைகளிலும் கழித்து விடுவான். அதன் காரணமாக அவனுககு எழுத விரும்பினதை எழுதிட நேரம் கிடைக்காது போகும். எனவே, எனக்கு ஒருவித அநாமதேயநிலை வேண்டியிருக்கிறது. அந்த அநாமதேய நிலையே நான். அது எனக்குத் தேவையில்லை. அதனை உருவாக்கிக் கொள்கிறேன். அந்த அநாமதேய நிலையினை வாழ்கிறேன். கவிஞனாயிருப்பதால் சமூக ஆதாயங்களைப் பெற்றுக்கொள்வதில் எனக்கு அக்கறை இல்லாததால் என் கவிதைகளை எழுதுவதில் எனக்கென நான் தீட்டிவைத்துள்ள படைப்பினை நிறைவு செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறோம்.
கே - தி ரியல் வொர்க் என்னும் உங்கள் கவிதையில் நிஜமானவேலை என்பது துவைத்தலும் பெருமூச்செறிதலும் நழுவிப்போதலும்
என்கிறீர்கள் 'நிஜமான வேலை' என்பது உண்மையிலேயே எது?
ப. நிஜமான வேலை என்னும் தொடரினை முன்னர் சில வேளைகளில் பயன்படுத்தியுள்ளேன். நிஜமான வேலை என்ற தொடரினைப் பயன்படுத்தி விட்டு என்னையே நிறையகேட்டுக்கொண்டேன். நிஜமான வேலை எது? முதலில் இது முக்கியமென்று எண்ணுகிறேன். ஏனெனில் வேலை செய்வது நல்லது என்பதால் வேலையை விரும்புகிறேன். வேலையும் விளையாட்டும், பட்டையினைச் சீவவோ, தேனடையை எடுக்கவோ, நாம் மீண்டும் போகவேண்டும். அதனின்றும் நாம் ஒருபோதும் விலகலாகாது. அதனின்றும் விலகி வருவதாக அதனை மீண்டும் செய்யத் தேவையில்லை என்று கனவொன்றினை வாழ்ந்து கொண்டிருந்தோம். நாம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அது காகிதத்தை ஸ்டேபிள் செய்வதாயிருக்கும் அலுவலகத்தில் தட்டச்சு செய்வதாயிருக்கும். ஏதோ ஒரு மட்டத்தில் அவ்வேலையினின்றும் விலகி வரப்போவதில்லை. ஆகவே அது நிஜமானது உண்மையில் நாம் என்ன செய்கின்றோமோ அது தான் நிஜமான வேலை. நம் ஜீவிதங்கள் அவை நாம் நிஜமென்றும், அது நிஜமென்றும், உலகம் நிஜமென்றும் தெரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டிய வேலையை நம்மால் வாழ்ந்துகாட்ட முடிந்தால், அது சரியாக இருக்கும். அதுவே நிஜமான வேலை- உலகினை அதனைப்போலவே நிஜமாக ஆக்குவதும், அதற்குள்ளே நாம் இருப்பதைப் போலவே, நிஜமாக நம்மை கண்டு கொள்வதும்.
தி மார்வாரிக் பார் என்னும் கவிதையின் இறுதியில் அத்தொடரினை மீண்டும் பயன்படுத்தினேன். நியூமெக்சிகோவின் ஃபர்மிங்டனிலுள்ள மதுக் கடையிலிருந்து நெடுஞ்சாலைக்குத் திரும்புகிறோம்.
''சிக்கலான பழைய நட்சத்திரங்களின் கீழே
நிஜமான வேலைக்கு
என்ன செய்யவேண்டுமோ அதற்கு
நிஜமானவேலை. வெற்றிபெறுகின்றோமா என்னும் நம்பிக்கை நமக்கிருந்தாலும் இல்லாது போனாலும், நாம் இருந்ததாக வேண்டிய வீரர்களாக இருப்பது ராட்சசனின் உயிரிருக்கும் இடத்தைக் கண்டறிந்து மாய்ப்பது. அது நடுப்பகுதி. எந்தவொரு நன்மையும் செய்யக்கூடும் என்று கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லாது போராடிக் கொண்டே இருப்பது இன்னும் சற்று சிறப்பாகவும் சற்று அதிகமாகவும் நாட்டியம் நிகழும் வகையில் பூமக்கோளின் மீது அத்தியாவசியமான பல்லுயிர்த்தன்மையின் அழித்தொழிப்பை கட்டுப்படுத்துவது அதன் இன்னொரு பகுதி இங்கே எப்போதும் இருக்கிறது.
துவைத்தலும் பெருமூச்செறிதலும்
நழுவிப்போதலும் சான்ஃபிரான்சிஸ்கோ
வளைகுடாவுக்கு வெளியேயுள்ள கடற்பறவைகளையும் மற்றும் சின்னஞ்சிறு மீன்கள் இரை தின்பதும் அணி சேர்வதுமாயுள்ள தீவிலுள்ள அலையடித்தல் அதுதான் அது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. நிஜமான வேலை என்பது ஒருவரை மற்றவர் தின்பது என்று கருதுகிறேன்.
The Poet's work /Ed. by Regionald Gibbons/ Houghton Mifflein company. Boston 1979. என்ற நூலிலிருந்து தமிழ்வடிவம்.
சா. தேவதாஸ் (நேர்முகம் கண்டவர் பால் ஜெனீஸன்)
|