------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அறிவிக்கை
 



புதிய பதிவேற்றங்கள்
 

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் 7 ஆவது குறுந்திரைப் பயணம் - கிராமம்:மேட்டுகார்க்குணம் - திருவண்ணாமலை

திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்குச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நாயுடு மங்கலம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் நிற்க்கும். அங்கிருந்து நம் கிராமத்திற்கு நமது நண்பர்கள் வண்டியில் அழைத்துக்கொண்டு வந்து விடுவார்கள்....எத்தனை பேர் வந்தாலும் உணவு,தங்குமிடம் செய்து தருகிறோம் என்று அந்த கிராமத்தில் வசிக்கும் நண்பரும் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் ச. சு. அருள் கூறி இருக்கிறார். எனவே அருமையான குறும்படங்களை மக்களோடு மக்களாக பார்க்க அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் குறும்பட இயக்குனர்களும், கலைஞர்களும் கலந்துக் கொள்ளலாம். உங்கள் குறும்படமும் இந்த நிகழ்வில் திரையிட விருப்பமிருந்தால் தொடர்பு கொள்க. 9840698236


 

நெய்வேலி புத்தகக் கண்காட்சி - குறும்படப் போட்டி

நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் பதினைந்தாவது ஆண்டாக 29-06-2012 முதல் 08-07-2012 முடிய நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியை ஒட்டித் ‘தினமணி’ நாளிதழும், நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டிக்கான குறும்படங்கள் கீழ்க்காணும் விதிகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.


 

தமிழ் ஸ்டுடியோ மற்றும் தெருப் புகைப்படக் கலைஞர்கள் இணைந்து நடத்திய அடிப்படை புகைப்பட பயிற்சி

இதுப் போன்ற பயிற்சிகள் ஆர்வலர்களை நான்கு சுவருக்குள் அடைத்து, குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும் அறையில் வைத்தே நடத்தப்படும். ஆனால் நாங்கள் நடத்திய இந்த பயிற்சி மரங்களால் சூழப்பட்டு, இயற்கையே செய்துக் கொடுத்த அருமையான காற்றோட்டமான சூழலில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புகைப்படக் கலை என்பது இயற்கையை நேசிக்கும் ஒரு அடிப்படைக் கலை என்பதன் குறியீடாகவே இந்த பயிற்சி இதுப் போன்ற தோட்டத்தில் நடைபெற்றது.



 

தமிழ் ஸ்டுடியோ சிறுவர் திரைப்பட விழாவில் அரங்கேறிய சுக்கா பக்கா - நாடகம்

தமிழ் ஸ்டுடியோ மே மாதம் 11 & 12 ஆகிய தேதிகளில் நடத்திய "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழாவில்" வேலு சரவணன் மாணவர்கள் அறிவழகன், சுதன் ஆகியோர் நடத்திய சுக்கா பக்கா சிறுவர்களுக்கான நாடகம்.



 

படிமை திரைப்பட பயிற்சி - இரண்டாவது பேட்ச் - ஆர்வலர்கள் சேர்க்கை

இங்கே பேராசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இல்லை. கல்விக்கூடம் போன்ற அமைப்பு இல்லை. புரியாத மொழியான ஆங்கிலத்தில் பயிற்சி இல்லை. திரைப்படம் என்றால் என்ன? திரைப்படம் எப்படி எடுப்பது? என்பதை மிக சுலபமான வழியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் இடமே படிமை. புரியாத பல பெயர்களை சொல்லி இவர்களை தெரியுமா? இந்த தொழில்நுட்பம் தெரியுமா? என்றெல்லாம் உங்களை யாரும் கேட்கப்போவதில்லை.



 

வழக்கு எண் 18/9 – காதலின் இரு முகங்கள்- ஆர்.அபிலாஷ்

தமிழில் காதல் ஒரு தெய்வீக காரியமாக பூஜிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அநேகமான படங்களில் காதலர்கள் இறந்து காதலை வாழ வைப்பார்கள். 90களுக்கு பிறகு இந்நிலைமை மெல்ல மாறியது. பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்ற ஒரு தலைமுறை காதலை ஆண்-பெண் சமத்துவம் கோரும் ஒரு பரஸ்தர அன்பு பாராட்டலாக காணத் துவங்கியது.



 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் - 36 - வெங்கட் சாமிநாதன்

மனே என்னும் கன்னடப்படம் பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். மனே இரண்டு மாதங்களுக்கு முன் லோக் சபா தொலைக்காட்சியில் பார்த்திருந்த ஞாபகத்தில், ஓரோரிடத்து பயில்வான் என்னும் மலையாளப் படம் பற்றி எழுதி வரும் போது ஒரு கன்னடப் படம் பற்றியும் அதுவும் சமீபத்தில் பார்த்த படம் என்ற காரணமாகவும் அது பற்றி பிரஸ்தாபித்தேன்.



 

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா"

தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது.

இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
நாள்: மே 11 & 12


 

தமிழ் ஸ்டுடியோ மற்றும் தெருப் புகைப்படக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் அடிப்படை புகைப்படக்கலைப் பயிற்சிப்பட்டறை

நாள்: மே 4, 5, 6
இடம்: குன்றத்தூரிலுள்ள விவசாயப் பண்ணை.
கட்டணம்: 1000/- ( தங்குமிடம் / உணவு உட்பட. )

நடத்துபவர்: ஆர். ஆர். சீனிவாசன்
(தெருப் புகைப்படக்கலைஞர்)


 

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 47வது குறும்பட வட்டம்

பாலாஜி மோகன் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். அருள் எழிலன் பத்திரிக்கை, எழுத்து, களப்பணி என பல தளங்களில் இயங்கி வருபவர். இருவரின் குறும்படங்களுமே வெவ்வேறு கதையமைப்பு, அழகியல் தன்மைகளுடன் சிறப்பாய் இருந்தன. 'கனவுக் கீர்த்தனை' தாத்தாவிற்கும் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் பேத்திக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை, ரசனை மாறுதல்களை உணர்த்தியது. 'மிட்டாய் வீடு' இன்றைய...



 

இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும் - நூல் திறனாய்வு - வெங்கட் சாமிநாதன்

இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும். இதற்குக் கொடுக்கும் ரூ 120க்கு கோச்சடையான் முதல் ஆட்டம் பார்க்கலாமே என்று அவன் நினைக்கலாம். அவன் உலகைத் திருத்த முடியாது. மகாதேவனே சொல்வது போல, தமிழ் சினிமாத் துறை சார்ந்தவர்கள் அத்தனை பேரும் இந்த ரசிகனின் பலவீனத்தைத் தான் நம்பி வாழ்கிறார்கள்.



 

அன்பிலதனை அறம் - குட்டி ரேவதி - புதிய தொடர்

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தலைவராகப் பார்க்கப்படும் ஓர் அவலநிலைக்குக் காரணம். மற்றெல்லோரும், ஏதோ உயர்த்தப்பட்டவர்களாகத் தம்மைக் கருதுவதும், அம்பேத்கரின் பிம்பம் தமக்கு தேவையில்லை என்று பார்ப்பதும் தான். ஆனால், அம்பேத்கர் எல்லோருக்குமே தனிமனித அளவிலும், சமூக அளவிலும் சமூகச் சிக்கல்கள் மீது வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர். அம்பேத்கர், இம்மண்ணில் மனிதனைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை அடிப்படையான தரவுகளுடன் ஆராய்வதுடன், அவற்றை வெல்லும் கருவிகளையும் நமக்குத் தருகிறார்.


 
 

தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க... - தடா அருவிப் பயணம்

சென்னைக்கருகில் இருக்கும் இந்த தடா அருவிப் பற்றி முன்னமே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் தடா அருவிக்கு செல்வதற்கு பதில் புதிதாக கோனே என்கிற அருவிக்கு சென்று திரும்பினோம். தடா, கோனே எல்லாம் ஒரே அருவி என்று சிலர் சொன்னதால். ஆனால் கோனேவும் தடாவும் ஒன்றல்ல இங்கே வந்தப் பிறகு தெரிந்தது. எனவே மீண்டும் தடா அருவிக்கு செல்லும் முடிவில் இருந்தோம். கடந்த வெள்ளியன்று முகநூல் நண்பர் ஹரி பிரசன்னா தடா சென்று வந்தப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார். அங்கே இப்போது தண்ணீர் இருகிறதா என்பதை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு தடா நோக்கி பத்மநாபன், புகழ், தியாகராஜன், சிலம்பரசன், சுந்தர், ஸ்ரீ கணேஷ், கார்த்தி, நான் என மொத்தம் எட்டு நண்பர்கள் பயணமானோம்.


 

தமிழ் ஸ்டுடியோவின் புதிய பகுதி - திரைப்பயணம்

குறும்பட வட்டம், குறும்படங்கள் / ஆவணப்படங்கள்/ உலகப்படங்கள் திரையிடல், பௌர்ணமி இரவு, குறுந்திரைப் பயணம், நூல் வெளியீட்டு விழா, இலக்கிய நிகழ்வுகள், குறும்பட பயிற்சிகள் / ஆலோசனை, திரைப்பட பயிற்சியகம் ஆகியவற்றை தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் இன்னொரு புதியப் பகுதி திரைப் பயணம்.

திரைப்படங்களை தங்களின் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு அதுப் பற்றிய சரியான புரிதல் இல்லை. திரைப்பட ரசனை கூட இங்கே சரியாக வளர்க்கப்படவில்லை. திரைப்படத் துறையில் இருந்தே முதல்வர்கள் தொடர்ச்சியாக அரியணை ஏறும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்லூரிகளில் திரைப்படம் பற்றிய அடிப்படை பாடம் இல்லை.


 

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -35 - வெங்கட் சாமிநாதன்

இப்போதும் நினைவிலிருந்து இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். இம்மாதிரி படங்கள் தயாரிக்கவேண்டும், தம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை, மனிதர்களைப் பற்றிச் சொல்லவேண்டும், அதுவும் சினிமாவாக உருப் பெறவேண்டும் என்ற நினைப்பு தமிழில் இது வரை எவருக்கும் வராத காரணத்தால், நம்மிலிருந்து அதிகம் வேறுபடாத, அதாவது வாழ்க்கை அம்சங்களில், சினிமா உலக வசதிகளில் அதிகம் வேறுபடாத என்று அர்த்தப் படுத்திக்கொள்கிறேன், அப்படி வேறுபடாத, நாமும் நம் வாழ்க்கை போலத்தான் இவர்களதும், நம்மைப் போன்றவர்கள் தான் இவர்களும் என்று நாம் இனம் காணக்கூடிய கன்னட, மலையாள படங்களிலிருந்தே உதாரணம் எடுத்துக்கொள்கிறேன்.

 

தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் - ‘‘யாழ் விருது 2012’’ - தமிழ் குறும்பட போட்டி

குறும்படங்கள் மாற்று சினிமாவுக்கான முயற்சியாகவும், திரைத்துறையில் மக்கள்
பங்கேற்பை கொண்டு வரும் முயற்சியாகவும், நாளைய கலை பண்பாட்டின் செழுமைக்கு
இளைஞர்களை உருவாக்க ஒரு களத்தை ஏற்படுத்தித்தருகிறது. எனவே
முன்னணி திரைப்படஇயக்குனர் மு.களஞ்சியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் ஆண்டு தோறும் மே.12/2012 ’’ யாழ் விருது “
குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டு தனது முதல் குறும்படபோட்டியை நடத்தவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் குறும்படங்களுக்கு...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
  திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com